சாகாஜி போஸ்லே

சாகாஜி போஸ்லே (Shahaji Bhosale) (1602 – 1664) கிபி 17-ஆம் நூற்றான்டில் தக்கான சுல்தான்களான அகமதுநகர் சுல்தானகம் மற்றும் பிஜப்பூர் சுல்தானகம் மற்றும் முகலாயப் பேரரசின் தக்காணப் படைத்தலைவராக பணியாற்றியவர். இவர் போன்சலே குலத்தில் பிறந்தவர். இவர் புனே மற்றும் சுபா பகுதிகளுக்கு பரம்பரை ஜாகீர்தாராக இருந்தார். மேலும் அகமதுநகர் சுல்தானகத்தில் படைத்தலைவராக இருந்த தனது தந்தை மாலோஜியின் மறைவிற்குப் பின்னர் சாகாஜி போஸ்லே முகலாயப் பேரரசர் (ஷாஜகான்) இராணுவத்தில் தக்காணப் படையில் சிறிது காலம் பணிபுரிந்தார்.

சாகாஜி போஸ்லே
சாகாஜி போஸ்லேவின் சித்திரம்
புனே ஜாகீர்தார், பிஜப்பூர் சுல்தானகம்
முன்னையவர்மாலோஜி
பின்னையவர்சிவாஜி
பெங்களூரு ஜாகீர்தார், பிஜப்பூர் சுல்தானகம்
பின்னையவர்வெங்கோஜி
பிறப்பு1602[1]
இறப்பு1664
கனககிரி, தாவண்கரே மாவட்டம், கர்நாடகா
துணைவர்ஜிஜாபாய்
துக்காபாய்
குழந்தைகளின்
பெயர்கள்
சம்பாஜி சாகாஜி
சிவாஜி
வெங்கோஜி
மரபுபோன்சலே
தந்தைமராத்தியர்
மதம்இந்து சமயம்
தொழில்படைத்தலைவர்

தன் கட்டுப்பாட்டில் இருந்த புனேயை பிஜப்பூர் சுல்தானிடமிருந்து 1638-இல் சாகாஜி போஸ்லே மீட்டெடுத்தார். பின்னர் அதே பிஜப்பூர் சுல்தானகத்தில் படைத்தலைவராக சேர்ந்தார். பிஜப்பூர் சுல்தானியர், விஜயநகரப பேரரசின் படைத்தலைவராக இருந்த மூன்றாம் கெம்பே கவுடாவின் ஆட்சிப் பகுதிகளை போரில் கைப்பற்றிய பின்னர், சாகாஜி போஸ்லே பெங்களூரு பகுதியின் ஜாகீர்தார் உரிமை பெற்றார்.

கொரில்லாப் போர் முறையில் திறமையானவரான சாகாஜி போஸ்லே பின்னர் பிஜப்பூர் சுல்தானகத்தின் தலைமைப் படைத்தலைவர் ஆனார்.[2]

இறுதி நாட்கள் தொகு

சாகாஜி போஸ்லேவின் மகன் சிவாஜி புனே பகுதிகளில் உள்ள மலைக்கோட்டைகளை கைப்பற்றி, பிஜப்பூர் சுல்தானகத்தின் கீழ் புனே ஜாகீர்தாராக இருந்தார்.இருப்பினும் சிவாஜி மேல் அவநம்ப்பிக்கை கொண்டிருந்த பிஜப்பூர் சுல்தான், சிவாஜியிடமிருந்தும், அவரது நடவடிக்கைகளிடமிருந்து விலகியிருக்க, சாகாஜி போஸ்லேவுக்கு பிஜப்பூர் சுல்தான் அறிவுரை கூறினார். 1659-இல் பிஜப்பூர் சுலதான், 12,000 படைவீரர்கள் தலைமையில் அப்சல் கானை சிவாஜியை பிடிக்கச் சென்றார். இந்தப் போரில் அப்சல் கான் சிவாஜியால் கொல்லப்பட்டார். [3]. 1959-62 ஆண்டுகளில் சாகாஜி போஸ்லே, சிவாஜிக்கும், பிஜப்பூர் சுல்தானுக்கும் இடையே நட்புறவு வேண்டி பல முறை புனேவிற்கு பயணம் மேற்கொண்டார். இறுதியாக 1664-இல் கனககிரி போரில் சாகாஜி போஸ்லே அப்சல் கானால் கொல்லப்பட்டார்.

குடும்பம் தொகு

சாகாஜி போஸ்லே-ஜிஜாபாய் தம்பதியருக்கு பிறந்த மூத்த மகன் சம்பாஜி சாகாஜி போஸ்லே, இளைய மகன் சிவாஜி ஆவர். பின்னர் சிவாஜி தக்கானத்தில் மராத்திய பேரரசை நிறுவினார். இவரது இரண்டாம் மனைவி துக்காபாய்க்கு பிறந்த மகன் வெங்கோஜி 1674-இல் தமிழ்நாட்டில் தஞ்சை மராத்திய அரசை (1674–1855) நிறுவினார்.

மேற்கோள்கள் தொகு

ஆதார நூற்பட்டியல் தொகு



"https://ta.wikipedia.org/w/index.php?title=சாகாஜி_போஸ்லே&oldid=3036489" இலிருந்து மீள்விக்கப்பட்டது