மகேந்திர யாதவ்
இந்திய அரசியல்வாதி
மகேந்திர யாதவ் (Mahendra Yadav)(இறப்பு-ஜூலை 5, 2020) என்பவர் இந்தியத் தேசிய காங்கிரசினைச் சார்ந்த அரசியல்வாதி ஆவார். இவர் தில்லியில் உள்ள பாலம் சட்டமன்றத் தொகுதியிலிருந்து 1998ல் சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1984ஆம் சீக்கியர்களுக்கு எதிரான கலவரம் வழக்கில் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டு[1] 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.[2]
மகேந்திரா யாதவ் Mahendra Yadav | |
---|---|
சட்டமன்ற உறுப்பினர் | |
பதவியில் 1998–2003 | |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 1949-1950 |
இறப்பு | 5 ஜூலை 2020 புது தில்லி, இந்தியா |
தேசியம் | இந்தியன் |
அரசியல் கட்சி | இந்திய தேசிய காங்கிரசு |
இவர் 5 ஜூலை 2020 அன்று கொரோனா வைரசு தொற்று காரணமாக இறந்தார். இவருக்கு எடுக்கப்பட்ட மருத்துவ சோதனையின் அடிப்படையில் ஜூன் 26, 2020 அன்று கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டது.[3]
மேலும் காண்க
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ Nair, Harish (May 9, 2013). "3 sentenced to life in jail in ’84 riots case". ஹிந்துஸ்தான் டைம்ஸ். https://www.hindustantimes.com/delhi/3-sentenced-to-life-in-jail-in-84-riots-case/story-A3Rk5QEcFURwXWiNumUJmM.html.
- ↑ "Anti-Sikh riots: 2 convicts surrender". டெக்கன் ஹெரால்டு. December 13, 2018. https://www.deccanherald.com/national/anti-sikh-riots-2-convicts-710696.html.
- ↑ "Former Delhi MLA and convict in 1984 anti-Sikh riots case dies of Covid-19". Indian Express. July 5, 2020. https://indianexpress.com/article/cities/delhi/former-delhi-mla-and-convict-in-1984-anti-sikh-riots-case-dies-of-covid-19-6491318/.