மக்தூம் சகாபுதீன்

மக்தூம் சகாபுதீன் (Makhdoom Shahabuddin, உருது, சராய்கி: مخدوم شہاب الدین; பிறப்பு 7 ஏப்ரல், 1947) ஓர் பாக்கித்தானிய அரசியல்வாதி. பெப்ரவரி 2008 முதல் இன்றுவரை பாக்கித்தானின் தேசிய சட்டப்பேரவையின் உறுப்பினராக உள்ளார். கூட்டரசின் அமைச்சரவையில் நிதி, சுகாதாரம், துணிகள் துறைகளில் பொறுப்பேற்றவர். தெற்கு பஞ்சாபின் செராய்கி பகுதியிலுள்ள ரகீம் யார் கான் நகரைச் சேர்ந்தவர்.[1] பாக்கித்தான் மக்கள் கட்சி (PPP) உறுப்பினர்.[2][3]

மக்தூம் சகாபுதீன்
مخدوم شہاب الدین
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு7 ஏப்ரல் 1947 (1947-04-07) (அகவை 77)
தேசியம்பாக்கித்தான்
அரசியல் கட்சிபாக்கித்தான் மக்கள் கட்சி (PPP)
வேலைஅரசியல்வாதி
அறியப்படுவதுMember of the National Assembly

சூன் 19, 2012இல் பாக்கித்தானின் உச்ச நீதிமன்றம் நடப்பு பிரதமர் யூசஃப் ரசா கிலானியை தகுதி நீக்கம் செய்த பிறகு பாக்கித்தான் மக்கள் கட்சியால் பிரதமர் பதவிக்கு தெரிந்தெடுக்கப் பட்டுள்ளார்.[4]

இவர் ஓர் பிரபல சுஃபி சமயப்பெரியவரின் வழித்தோன்றல் ஆகும்.[5]

சட்டப் பிரச்சினை தொகு

பிரதமராக வேட்புமனுத் தாக்கல் செய்த நாள் சூன் 21,2012 அன்று போதைப்பொருள் தடுப்பு நீதிமன்றம் சகாபுதீனுக்கு பிணையில்லா கைதுக்கான பிடியாணை பிறப்பித்துள்ளது.[6]

மேற்கோள்கள் தொகு

  1. http://www.dnaindia.com/world/report_makhdoom-shahabuddin-emerges-strong-contender-for-pak-pm-s-post_1704225
  2. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2016-03-03. பார்க்கப்பட்ட நாள் 2012-06-20.
  3. http://www.na.gov.pk/en/profile.php?uid=308
  4. "Pakistan Peoples Party nominates Makhdoom Shahbuddin as new PM". 20 June 2012 இம் மூலத்தில் இருந்து 23 ஜூலை 2012 அன்று. பரணிடப்பட்டது.. https://archive.today/20120723073134/http://articles.timesofindia.indiatimes.com/2012-06-20/pakistan/32334733_1_nominates-prime-minister-pakistan-peoples-party. 
  5. http://www.rediff.com/news/report/makhdoom-shahabuddin-to-be-new-pakistan-pm/20120620.htm
  6. Latest news, Breaking News | Daily Jang பரணிடப்பட்டது 2016-03-03 at the வந்தவழி இயந்திரம். Jang.com.pk (2012-06-21). Retrieved on 2012-06-21.

வெளி இணைப்புகள் தொகு


"https://ta.wikipedia.org/w/index.php?title=மக்தூம்_சகாபுதீன்&oldid=3565909" இலிருந்து மீள்விக்கப்பட்டது