மக்னீசியம் சிட்ரேட்டு (3:2)
மக்னீசியம் சிட்ரேட்டு (Magnesium citrate) (3:2) (2 சிட்ரேட்டு மூலக்கூறுகளுக்கு 3 மக்னீசியம் அணுக்கள்) என்பது C12H10Mg3O14 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட, மக்னீசியம் மற்றும் சிட்ரிக் அமிலம் சேர்ந்து உருவாகும் ஒரு வேதியியல் சேர்மமாகும். மும்மக்னீசியம் இருசிலிக்கேட்டு, மும்மக்னீசியம் சிட்ரேட்டு அல்லது தெளிவற்ற மக்னீசியம் சிட்ரேட்டு போன்ற பல பெயர்களால் இச்சேர்மம் அழைக்கப்படுகிறது. (3:2) மக்னீசியம் சிட்ரேட்டு தண்ணீரில் அதிகமாகக் கரைவதில்லை. கசப்புச் சுவை கொண்டிருக்கிறது. இச்சேர்மத்தில் 16.2 சதவீதம் எடை மக்னீசியம் உள்ளது[1] . மக்னீசியம் சிட்ரேட்டுடன் (1:1) ஒப்பிடுகையில், இச்சேர்மம் மிகவும் குறைவான அளவே தண்ணீரில் கரைகிறது. காரத்தன்மையும் அதிகமாக உள்ளது. மக்னீசியம் சிட்ரேட்டைவிட (1:1) எடையில் 42.6 சதவீத மக்னீசியம் அதிகம் பெற்றுள்ளது.
பெயர்கள் | |
---|---|
ஐயூபிஏசி பெயர்
2-ஐதரோ ஆக்சிபுரொப்பேன்-1,2,3-டிரை கார்பாக்சிலிக் அமிலம்; மக்னீசியம்
| |
இனங்காட்டிகள் | |
3344-18-1 | |
ChemSpider | 2925651 |
EC number | 222-093-9 |
InChI
| |
யேமல் -3D படிமங்கள் | Image |
KEGG | D03265 |
பப்கெம் | 3693607 |
| |
பண்புகள் | |
C12H10Mg3O14 | |
வாய்ப்பாட்டு எடை | 451.11 g·mol−1 |
தோற்றம் | வெண்மையான தூள் |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
மேற்கோள்கள்
தொகு- ↑ US49,59,222 (1990-Sept-25) Karl J. Nadland et al, Magnesium additive for nutrients, feed, and medicaments.