மங்களா நர்ளீகர்

மங்களா நர்ளீகர் (Mangala Narlikar; மராத்தி: मंगला नारळीकर) ஓர் இந்தியப் பெண் கணிதவியலாளர். இவர் உயர்கணிதவியலிலும் அடிப்படை எண்ணியலிலும் ஆய்வு செய்தவரும் பயிற்றுவித்தவரும் ஆவார். இவர் கணிதவியலில் இளவல், முதுவர் பட்டங்கள் பெற்ற பின்னர் மும்பை டாட்டா அடிப்படை ஆராய்ச்சி நிறுவனத்தில் பணிபுரிந்தார். பிறகு ப்பூனாவில் உள்ள மும்பை பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளராகப் பணியாற்றினார் .[1] இவர் ஆங்கிலத்திலும் மராத்தியிலும் பல கணிதவியல் நூல்களையும் கட்டுரைகளையும் எழுதியுள்ளார். இவர் 2002 இல் விசுவநாத் பார்வதி கோகலே விருதைக் கார்கி அஜூன் ஜீவந்த் ஆகே (गार्गी अजून जिवंत आहे) எனும் மராத்தி நூலுக்குப் பெற்றுள்ளார்.[2]

மங்களா நர்ளீகர்
பிறப்புமங்களா இராஜ்வாதே
மும்பை, இந்தியா
படித்த கல்வி நிறுவனங்கள்மும்பை பல்கலைக்கழகம்,
பணிகணிதவியலாளர்
சமயம்இந்து
வாழ்க்கைத்
துணை
ஜயந்த் நர்ளீகர்
பிள்ளைகள்மூன்று மகள்கள்

வாழ்க்கை

தொகு
 
Dr Mangla Narlikar editing on Marathi wikipedia

இவர் மும்பைப் பலகலைக்கழகத்தில் கணிதவியல் படித்து 1962 இல் கணிதவியலில் கலை இளவல் பட்டமும் 1964 இல் கலை முதுவர் பட்டம் முதல்தரத்தில் பெற்று வேந்தரின் பொற்பதக்கமும் வென்றுள்ளார்.[1][3] இவர் அண்டவியலாளரும் இயற்பியலாளரும் ஆகிய ஜயந்த் நர்ளீகரை 1966 இல் திருமணம் செய்து கொண்டார். இவர்கட்குக் கீதா, கிரிஜா, இலீலாவதி என மூன்று பெண்மகவுகள் உண்டு. இம்மூவருமே அறிவியலில் பணிபுரிகின்றனர்; இவர்களில் ஒருவர் உயிர்வேதியியல் பேராசிரியர்; மற்ற இருவரும் கணினியியல் துறையில் உள்ளனர்.[4][5]

இவர் 1964 முதல் 1966 வரை மும்பை டாட்டா அடிப்படை ஆராய்ச்சி நிறுவனத்தில் ஆய்வு மாணவராகவும் இணை ஆய்வாளராகவும் இருந்தார். பின்னர் 1967 முதல் 1969 வரை கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் இளவல் பட்ட மாணவருக்கு கணிதவியல் பயிற்றுவித்தார். பிறகு 1974 முதல் 1980 வரை மும்பை டாட்டா அடிப்படை ஆராய்ச்சி நிறுவனக் கணிதவியல் பள்ளியில் மீண்டும் பணிபுரிந்தார்.[1] இவர் திருமணத்துக்குப் பின்னர் பதினாறு ஆண்டுகள் கழித்து மும்பைப் பல்கலைக்கழகத்தில் 1981 இல் முனைவர் பட்டம் பெற்றார்[6] முனைவர் பட்ட ஆய்வின் தலைப்பு பகுப்பாய்வு எண் கோட்பாடு ஆகும்.[3]முனைவர் பட்டம் பெற்றதும் 1982 முதல் 1985 வரை கணிதவியல் பள்ளியிலேயே புல அலுவலராகப் பணிபுரிந்தார். இவர் அப்போது மும்பைப் பல்கலைக்கழகத்தின் கணிதவியல் துறையில் இளம் ஆய்வுப் பட்ட மாணவருக்குக் கணிதம் பயிற்றுவித்தார்.மேலும் இவர் 1989 முதல் 2002 வரை பூனா பல்கலைக்கழகத்தின் கணிதவியல் துறையில் அடிக்கடி பாடம் எடுத்துள்ளார். பாசுக்கராச்சாரியா பிரதித்தானிலும் மூதறிவியல் மாணவருக்கு 2006 முதல் 2010 வரை கல்வி பயிற்றுவித்துள்ளார்.[1]

இவரது ஆர்வப் புலங்கள் மெய், சிக்கல் எண் பகுப்பாய்வு, பகுப்பாய்வு வடிவியல், எண் கோட்பாடு, இயற்கணிதம், இடத்தியல் ஆகியனவாகும்.[1]

நர்ளீகர் தான் கணிதவியல் நூல்களை எழுதும் பட்டறிவைப் பற்றி இவ்வாறு உணர்வதாக கூறுகிறார்: "கணித அறிவை ஆர்வத்தோடு அணுகும் வகையில் நூலைப் படைப்பதை மகிழ்ச்சிமிக இன்பங்கனிய செய்கிறேன்".[7] தொழிசார் வாழ்க்கையோடு இல்லறப் பணிகளையும் இணைந்து நிறைவேற்றுதலைக் குறித்தும் பின்வரும் உணர்வை வெளியிடுகிறார்: "என வாழ்க்கை, பெரும்பாலும் என் தலைமுறையின் கற்ற பெண்கள் யாவருமே தம் சொந்த தொழில்வாழ்க்கையை வீட்டுக் கடமைகளுக்கு அடுத்த நிலையிலேயே வைத்துப் பின்பற்றிய வாழ்க்கைக்கொரு நல்ல வகைமாதிரியாகும்".[5]

வெளியீடுகள்

தொகு

இவர் கணிதவியல் நூல்களும் பல அறிவியல் ஆய்வுக் கட்டுரைகளும் வழங்கியுள்ளார்:[1]

ஆய்வுத் தாள்கள்

தொகு
  • Theory of Sieved Integers, Acta Arithmetica 38, 157 in 19
  • On a theorem of Erdos and Szemeredi, Hardy Ramanujan Journal 3, 41, in 1980
  • On the Mean Square Value theorem of Hurwitz Zeta function, Proceedings of Indian Academy of Sciences 90, 195, 1981.
  • Hybrid mean Value Theorem of L-functions, Hardy Ramanujan Journal 9, 11 - 16, 1986.
  • On orders solely of Abelian Groups, Bulletin of London Mathematical Society, 20, 211 - 216, in 1988.
  • கணிதவியலில் பொதுமக்கள் ஆர்வங்கொள்ள, அறிவியல் காலம் (Science Age) இதழில் பல கணிதவியல் கட்டுரைகள்

நூல்கள்

தொகு
  • கணித்ச்சியா சோபிய வதா, பள்ளி மாணவருக்கான மராத்தி நூல்
  • அடைப்படை கணிதவியலுக்கான எளிய அணுகுமுறை, பள்ளிச் சிறுவருக்கான ஆங்கில நூல்.
  • A Cosmic Adventure, translation of a book on Astronomy by Professor J. V. Narlikar.

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 1.2 1.3 1.4 1.5 "E-learning in Mathematics at Undergraduate and Postgraduate Level". Bhaskaracharya Pratishthana. Archived from the original on 20 ஏப்ரல் 2014. பார்க்கப்பட்ட நாள் 1 November 2015. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  2. "Gargi Ajun Jeevant Aahe - गार्गी अजून जिवंत आहे" (in Marathi). Online Book Store India indy.co.in. Archived from the original on 4 ஆகஸ்ட் 2016. பார்க்கப்பட்ட நாள் 1 November 2015. {{cite web}}: Check date values in: |archive-date= (help)CS1 maint: unrecognized language (link)
  3. 3.0 3.1 Chengalvarayan & Gokilvani 2007, ப. 110.
  4. "Living Legends in Indian Science Jayant Vishnu Narlikar" (pdf). Current Science. பார்க்கப்பட்ட நாள் 1 November 2015.
  5. 5.0 5.1 "Mangala Narlikar: The Journey of an Informal Mathematician: Academic Featured Biographies". Brainprick. 9 July 2012. பார்க்கப்பட்ட நாள் 1 November 2015.
  6. "Indian Women In Science". American Chemical Society. பார்க்கப்பட்ட நாள் 1 November 2015.
  7. "What Science Academies do for Indian Women in Mathematics" (pdf). The Institute of Mathematical Sciences. பார்க்கப்பட்ட நாள் 1 November 2015.

நூல்தொகை

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=மங்களா_நர்ளீகர்&oldid=4053896" இலிருந்து மீள்விக்கப்பட்டது