மங்கோலியர்களின் இந்தியப் படையெடுப்பு (1297-1298)

1297 ஆம் ஆண்டின் குளிர்காலத்தில் மங்கோலியர்களின் நோயனான காதர் என்பவர் அலாவுதீன் கல்ஜி ஆட்சி செய்துகொண்டிருந்த தில்லி சுல்தானகத்தின் மீது படையெடுத்தார். பஞ்சாப் பகுதியை சூறையாடிய மங்கோலியர்கள் கசூர் வரை முன்னேறி வந்தனர். அலாவுதீன் தனது சகோதரர் உலுக் கான் (மற்றும் அநேகமாக ஜாபர்கான்) தலைமையில் ஒரு படையை மங்கோலியர்களின் முன்னேற்றத்தை தடுக்க அனுப்பினார். இப்படையானது படையெடுப்பாளர்களை 6 பிப்ரவரி 1298 ஆம் ஆண்டு அன்று தோற்கடித்தது. சுமார் 20,000 பேரைக் கொன்றது. மங்கோலியர்களை பின்வாங்க வைத்தது.

ஜரன்-மஞ்சூர் யுத்தம்
மங்கோலியர்களின் இந்தியப் படையெடுப்புகளின் ஒரு பகுதி
நாள் 6 பிப்ரவரி 1298
இடம் ஜரன்-மஞ்சூர் (சிந்து பகுதியில் உள்ள ஒரு இடம் எனவும், லாகூர் அல்லது ஜலந்தருக்கு அருகில் உள்ள ஒரு இடம் எனவும் பல்வேறுபட்டவர்களால் அடையாளப்படுத்தப்படுகிறது)
தில்லி சுல்தானகத்தின் வெற்றி
நிலப்பகுதி
மாற்றங்கள்
மங்கோலியப் படைகள் இந்தியாவிலிருந்து வெளியேற்றப்பட்டன
பிரிவினர்
சகதை கானேடு தில்லி சுல்தானகம்
தளபதிகள், தலைவர்கள்
காதர் உலுக் கான், ஜாபர்கான்
இழப்புகள்
தில்லி காலவரிசையாளர் அமீர் குஸ்ராவின் கூற்றுப்படி 20,000 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் பலர் பிடிக்கப்பட்டனர் தெரியவில்லை

மங்கோலிய தாக்குதல்கள் தொகு

மங்கோலிய சகதை கானேடானது தில்லி சுல்தானகத்தின் மீது 1241, 1245, 1257, மற்றும் 1285 ஆகிய ஆண்டுகள் உட்பட பல தடவை முற்றுகைகளை நடத்தியது. அலாவுதீன் கல்ஜிக்கு முன்னர் ஆட்சி செய்த ஜலாலுதீன் மங்கோலிய தாக்குதல்களை எதிர்கொண்டார். அவற்றை அவர் தடுத்தார். அலாவுதீனின் ஆட்சியின்போது மங்கோலியர்கள் இந்தியா மீது மீண்டும் படையெடுத்தனர். முந்தைய படையெடுப்புகளை ஒப்பிடும்போது இவை பெரிய அளவில் நடத்தப்பட்ட படையெடுப்புகளாக இருந்தன. இப்படையெடுப்புகளில் ஆரம்பகால படையெடுப்புகள் மங்கோலிய ஆட்சியாளரான துவாவால் ஆணையிடப்பட்டது. தனது நோயன் காதரை இந்தியாவுக்கு 1,00,000 வீரர்களை கொண்ட வலிமையான படையுடன் துவா அனுப்பினார்.[1]

1297-98 ஆம் ஆண்டின் குளிர்காலத்தில் அலாவுதீன் கல்ஜியால் ஆளப்பட்ட தில்லி சுல்தானகத்தின் பகுதியான பஞ்சாப் மீது தாக்குதல் நடத்திய காதர் அதனைச் சூறையாடினார்.[2] அலாவுதீனின் அவையிலிருந்த அமீர் குஸ்ரா என்கிற காலவரிசையாளர், மங்கோலியர்கள் இந்தியாவை சுலைமான் மலைகளை கடந்ததன் மூலம் அடைந்ததாக குறிப்பிட்டுள்ளார். பஞ்சாபின் முக்கியமான நதிகளை கடந்த மங்கோலியர்கள் கோகர் கிராமங்களை எரித்தனர். கசூர் வரை முன்னேறி வந்த மங்கோலியர்கள் அங்கிருந்த வீடுகளை அழித்தனர். குஸ்ராவின் கூற்றுப்படி வீடுகளை எரித்த போது ஏற்பட்ட வெளிச்சமானது நகரத்தின் புறநகர் பகுதியில் இருந்து பார்த்தபோது கண்களுக்கு புலப்படும் வகையில் இருந்தது.[3]

அலாவுதீனின் பதிலடி தொகு

மங்கோலியர்களால் ஏற்படுத்தப்பட்ட அழிவை பற்றி அறிந்த அலாவுதீன் தனது சகோதரர் மற்றும் தளபதியான உலுக் கானை படையெடுப்பாளர்களுக்கு எதிராக அணிவகுக்குமாறு கூறினார். ஜியாவுதீன் பரணி என்கிற வரலாற்றாளரின் கூற்றுப்படி தில்லி ராணுவத்தை ஜாபர் கான், உலுக் கானுடன் சேர்ந்து தலைமை தாங்கியதாக குறிப்பிடுகிறார். ஆனால் அலாவுதீனின் அவை வரலாற்றாளரான அமீர் குஸ்ரா, ஜாபர்கானின் பெயரை குறிப்பிடவில்லை. எனினும் பரணி கூறியுள்ளது பொதுவாக உண்மையாக இருக்க வேண்டும் என்று கருதப்படுகிறது.[3] (கல்ஜி அரசமரபின் காலவரிசை நூல்களில் ஜாபர் கான் பெயர் குறிப்பிடப்படவில்லை. ஏனெனில் கிளி யுத்தத்தின் போது ஜாபர் கானின் பொறுப்பற்ற கீழ்படியாமை காரணமாக அலாவுதீன் மகிழ்ச்சியற்று இருந்தார்)[4] குஸ்ராவின் கூற்றுப்படி மங்கோலியர்களை எதிர்கொள்வதற்காக உலுக் கான் ஒரே நாளில் இரண்டு நாள் பயணத்தை கடந்தார். 6 பிப்ரவரி 1298 ஆம் ஆண்டு தில்லி இராணுவமானது சட்லெஜ் ஆற்றின் கரையில் ஜரன்-மஞ்சூர் என்ற இடத்தை அடைந்தது.[3]

அக்காலத்தில் வாழ்ந்த அமீர் குஸ்ரா என்கிற வரலாற்றாளரின் நூலான தவல் ராணியின்படி இந்த இடமானது சட்லெஜ் ஆற்றின் கரையில் இருந்த ஜரன் மஞ்சூர் என்ற இடத்தில் நடைபெற்றது.[5] இந்த யுத்தம் நடந்த காலத்தை ஒட்டி வாழ்ந்த ஜியாவுதீன் பரணி என்கிற வரலாற்றாளரின் நூலான தரிக்-இ-ஃபிருஷ் ஷாஹியில் இந்த இடத்தின் பெயர் "ஜத்வா ஓ மஞ்சூர்" மற்றும் "ஜுரட் மஹுத்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது. பரணியின் நூலை ஆங்கிலத்தில் மொழி பெயர்ப்பு செய்த ஹென்றி மையர்ஸ் எலியட் என்பவர் இந்த யுத்தம் நடந்த இடமானது தற்போது உள்ள ஜலந்தர் தான் என்று குறிப்பிடுகிறார். ஜலந்தர் சட்லெஜ் ஆற்றின் வடமேற்குப் பகுதியில் உள்ளது.[6] 16ஆம் நூற்றாண்டின் ஃபிரிஷ்டா என்கிற வரலாற்றாளர் இந்த இடமானது லாகூருக்கு அருகில் நடைபெற்றது என்று குறிப்பிடுகிறார். ஜலந்தர் லாகூரில் இருந்து 130 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. 16ஆம் நூற்றாண்டின் மற்றொரு வரலாற்றாளரான 'அப்த் அல்-காதிர் படா'உனி யுத்தம் நடந்த இடத்தின் பெயர் ஜரன் மஞ்சூர் என்று குறிப்பிடுகிறார். 17ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த நிஜாமுதீன் அகமது ஹராவி யுத்தம் நடந்த இடமானது சிந்து பகுதியில் இருந்தது எனக் குறிப்பிடுகிறார்.[6]

போர் நடந்த இடத்தில் உலுக் கான் சட்லெஜ் ஆற்றை படகுகளின்றி கடக்குமாறு தனது வீரர்களுக்கு உத்தரவிட்டார்.[3] அதனைத் தொடர்ந்து நடந்த யுத்தத்தில் குஸ்ராவின் கூற்றுப்படி 20,000 மங்கோலியர்கள் கொல்லப்பட்டனர். மேலும் மங்கோலியர்கள் "எறும்புகள் மற்றும் வெட்டிகிளிகளைப் போல் பறந்தனர், எறும்புகளை போல் நசுக்கப்பட்டனர்" என்று தற்புகழ்ச்சியுடன் அவர் கூறுகிறார். காயமடைந்த மங்கோலியர்கள் சிரச்சேதம் செய்யப்பட்டனர். தப்பிப் பிழைத்தவர்கள் சங்கிலிகளால் பிணைக்கப்பட்டனர். கைது செய்யப்பட்டவர்கள் தில்லிக்கு கொண்டு வரப்பட்டு அங்கு யானைகளால் மிதித்து கொல்லப்பட்டனர்.[3]

இந்த வெற்றியானது அலாவுதீனின் கௌரவத்தை அதிகப்படுத்தியது. தில்லி அரியணையில் அவருடைய இடத்தை ஸ்திரப்படுத்தியது. அவர் சிறிது காலத்துக்கு முன்னர் தான் 1296இல் தில்லி அரியணைக்கு வந்திருந்தார்.[5]

உசாத்துணை தொகு