மங்கோலியர்களின் குராசான் படையெடுப்பு
மங்கோலியர்களின் குராசான் படையெடுப்பு என்பது 1220-1221இல் நடைபெற்ற ஒரு யுத்தமாகும். இது மங்கோலியர்களின் குவாரசமியப் படையெடுப்பின் ஒரு பகுதியாக நடைபெற்றது. மங்கோலியப் பேரரசு சமர்கந்து மற்றும் புகாரா ஆகிய பெரிய நகரங்களைக் கைப்பற்றிய பிறகு குவாரசமியப் பேரரசானது சிதைந்து போனது. ஷா இரண்டாம் முகம்மது மேற்கு நோக்கித் தப்பி ஓடினார். அங்கு ஒரு இராணுவத்தைச் சேர்க்கலாம் என்று நம்பினார். செங்கிஸ் கான் தனது 2 முதன்மைத் தளபதிகளான சுபுதை மற்றும் செபே ஆகியோரை ஷாவைப் பின்தொடருமாறும், அத்தகைய ஏதேனும் குவாரசமிய மறுமலர்ச்சியைத் தடுக்குமாறும் ஆணையிட்டார். அதே நேரத்தில் தனது இளையமகன் டொலுயை தெற்கு நோக்கி அனுப்பி எதிர்ப்பு காட்டும் எவரையும் அடிபணிய வைக்குமாறு பணித்தார்.[1]
மங்கோலியர்களின் குராசான் மீதான படையெடுப்பு | |||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|
மங்கோலியர்களின் குவாரசமியப் படையெடுப்பின் ஒரு பகுதி | |||||||||
படையெடுப்பின் அழிவிலிருந்து மீளாமல் போன மெர்வ் நகரத்தில் உள்ள அகமது சஞ்சாரின் சமாதியின் இடிபாடுகள் |
|||||||||
|
|||||||||
பிரிவினர் | |||||||||
மங்கோலியப் பேரரசு | குவாரசமியப் பேரரசு | ||||||||
தளபதிகள், தலைவர்கள் | |||||||||
சலாலத்தீன் | |||||||||
பலம் | |||||||||
90,000-175,000 | 70,000-100,000
|
||||||||
இழப்புகள் | |||||||||
குறைவு | பேரழிவு |
உசாத்துணை
தொகு- ↑ Dictionary of Wars, by George C. Kohn, p.55.