புகாரா முற்றுகை

1220 இல் நடந்த சமர்

புகாரா முற்றுகை என்பது உசுபெக்கிசுதானின் புகாரா நகரம் மீது கி. பி. 1220இல் நடைபெற்ற ஒரு முற்றுகைப் போராகும். இது மங்கோலியர்களின் குவாரசமியப் படையெடுப்பின் ஒரு பகுதியாக நடைபெற்றது. இரண்டாம் அலாவுதீன் முகம்மதுவால் ஆளப்பட்ட குவாரசமியப் பேரரசின் மீது மங்கோலியப் பேரரசைத் தோற்றுவித்த செங்கிஸ் கான் பலமுனைத் தாக்குதல் நடத்தினார். தன் நாட்டின் ஒவ்வொரு பெரிய நகரத்தையும் தனித்தனியாகத் தற்காக்க ஷா திட்டமிட்டிருந்தார். மங்கோலியர்கள் முதலில் எல்லைப் பட்டணமான ஒற்றாரை முற்றுகையிட்டனர். பிறகு குவாரசமியா நாட்டிற்குள் தாக்குதல் நடத்த ஆரம்பித்தனர்.[1]

புகாரா முற்றுகை
மங்கோலியர்களின் குவாரசமியப் படையெடுப்பின் ஒரு பகுதி
நாள் மார்ச் 1220
இடம் புகாரா, தற்கால உசுபெக்கிசுத்தான்
39°46′40″N 64°24′37″E / 39.77778°N 64.41028°E / 39.77778; 64.41028
மங்கோலிய வெற்றி
சண்டையிட்டவர்கள்
மங்கோலியப் பேரரசு குவாரசமியப் பேரரசு
தளபதிகள், தலைவர்கள்
குர் கான்
படைப் பிரிவுகள்
கோட்டை காவற்படையினர்
பலம்
நவீன மதிப்பீட்டின்படி 30,000 முதல் 50,000 நவீன மதிப்பீட்டின்படி 2,000 முதல் 20,000
இழப்புகள்
தெரியவில்லை பெரும்பாலானவர்கள்

புகாரா நகரமானது குவாரசமியப் பேரரசின் ஒரு முக்கிய வணிக மற்றும் கலாச்சார மையமாக இருந்தது. ஆனால் மங்கோலியப் பேரரசின் எல்லையிலிருந்து தொலைதூரத்தில் இந்த நகரம் இருந்தது. எனவே 20,000க்கும் குறைவான வீரர்களையே இந்த நகரத்தின் தற்காப்புக்காகக் குவாரசமிய ஷா நியமித்திருந்தார். எனினும் சுமார் 30,000 முதல் 50,000 வீரர்களைக் கொண்டதாக மதிப்பிடப்பட்ட ஒரு மங்கோலியப் படையானது, அதற்கு முன் பெரிய இராணுவங்களால் கடக்க முடியாது என்று எண்ணப்பட்ட கிசில்கும் பாலைவனத்தைக் கடந்தது. புகாரா நகரமானது திடீரென வியக்க வைக்கும் விதமாக முற்றிலுமாகச் சுற்றி வளைக்கப்பட்டது. மங்கோலியர்களைத் தாக்க வந்த ஒரு சிறு படையானது கொன்றழிக்கப்பட்டது. நகரின் வெளிப்புறமானது மூன்றே நாட்களில் சரணடைந்தது. குவாரசமிய அரசமரபுக்கு விசுவாசமானவர்கள் நகர்க்காப்பரணை இரண்டு வாரங்களுக்குக் குறைவான காலத்திற்குத் தற்காத்து வந்தனர். ஆனால் அந்தத் தற்காப்பும் சீக்கிரமே உடைக்கப்பட்டது.

மங்கோலிய இராணுவமானது நகர்க்காப்பரணில் இருந்த அனைவரையும் கொன்றது. பெரும்பாலான மக்களை அடிமைப்படுத்தியது. மங்கோலியர்கள் திறமைவாய்ந்த கைவினைஞர்களை மதித்தனர். அதே நேரத்தில் மற்றவர்கள் இராணுவங்களில் கட்டாயப்படுத்திச் சேர்க்கப்பட்டனர். தீ பரவியதால் புகாரா நகரம் தரைமட்டமான போதும், அழிவானது மற்ற நகரங்களை ஒப்பிடுகையில் லேசானதாகவே இருந்தது. சிறிது காலத்திலேயே புகாரா நகரமானது மீண்டும் ஒரு வணிக மற்றும் கல்வி மையமாக உருவெடுத்தது. மங்கோலிய அமைதி மூலம் பெரிதும் பயன்பெற்றது.

பின்புலம்

தொகு

மங்கோலியப் படையெடுப்புக்கு முன், எகுத் அல் அமாவி என்ற புவியியலாளரால் எடுக்கப்பட்ட புவியியல் ஆய்வானது புகாராவை 'நடு ஆசியாவின் பெரிய நகரங்களில் ஒன்று' எனக் குறிப்பிடுகிறது. [2][a] இங்கு சுமார் 3,00,000 மக்கள் வாழ்ந்தனர். 45,000 நூல்களைக் கொண்ட நூலகம் இங்கு அமைந்திருந்தது. கல்வி மற்றும் கலாச்சார மையமாக இந்நகரம் பகுதாதுவுடன் போட்டியிட்டது.[4][5] இங்கு கி. பி. 1121ஆம் ஆண்டு கட்டப்பட்ட போ-இ-கல்யாண் பள்ளிவாசலானது உலகிலேயே மிகப் பெரிய பள்ளிவாசல்களில் ஒன்றாக இருந்தது. இப்பள்ளிவாசலில் கல்யாண் தூபி அமைந்திருந்தது[6]. இந்த நகரத்தைப் பாதுகாக்க புகாரா வில்லானது அமைந்திருந்தது. புகார வில் என்பது ஒரு கோட்டையாகும். இது ஐந்தாம் நூற்றாண்டில் கட்டப்பட்டது. நகர்க்காப்பரணாக புகாரா நகரத்திற்கு பாதுகாப்பு அளித்தது. இங்குள்ள வேளாண் நிலங்கள் செரவுசன் ஆற்றிலிருந்து கிடைத்த நீரின் மூலம் பாசனம் பெற்றன.[7]

இந்த நகரமானது நீண்ட காலத்திற்கு காரா கானிடுகளின் ஆட்சியின் கீழ் இருந்து வந்தது. காரா கானிடுகள் இப்பகுதியில் இருந்த சமர்கந்து, தாஷ்கந்து மற்றும் பெர்கானா உள்ளிட்ட பல்வேறு செல்வச் செழிப்பு மிக்க நகரங்களை நீண்ட காலமாகத் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருந்தனர்.[8] காரா கானிடுகள் என்பவர்கள் பெயரளவுக்குக் காரா கிதை கானரசுக்கு அடிபணிந்தவர்களாக இருந்தனர். எனினும் காரா கானிடுகள் கிட்டத்தட்ட முழுவதுமாக தனித்துச் சுதந்திரமாக இயங்க அனுமதிக்கப்பட்டனர். இதற்குக் காரணம் அவர்களது பெரிய மக்கள்தொகை மற்றும் அவர்களது நாட்டின் பரப்பளவு ஆகும். 1215ஆம் ஆண்டு காரா கானிடுகளை, காரா கிதையிடம் அடிபணிந்தவர்களாக முன்னர் இருந்த குவாரசமியர்கள் அடிபணிய வைத்தனர்.  செல்யூக் பேரரசு வீழ்ந்தன் காரணமாக ஏற்பட்ட வெற்றிடத்தைப் பயன்படுத்தி குவாரசமியர்கள் தங்களது குர்கஞ்ச் நகரத்தில் இருந்து விரிவடைந்தனர்.[9][10](pp32–33) 1218ஆம் ஆண்டு அமாதான், ஈரான் மற்றும் குராசானின் சுல்தானாகிய குவாரசமிய ஷா இரண்டாம் முகம்மது தன்னுடைய அதிகாரத்தைக் கோரி அரசமரபு மற்றும் எலுடிகுசிடுகள் ஆகியோர் மீதும் விரிவுபடுத்தினார்.[9] செங்கிஸ் கான் மங்கோலியப் பழங்குடியினர் மத்தியில் ஒரே தலைவனாகத் தன்னை நிறுவ ஆரம்பித்தார். அவரது படையெடுப்புகள் காரணமாக அகதிகள் அங்கிருந்து. இடம்பெயர்ந்தனர். இந்த அகதிகள் வருகை காரணமாகக் காரா கிதை கானரசானது நிலைத்தன்மையை இழந்தது. இந்தச் சூழ்நிலையைப் பயன்படுத்திய குவாரசமியப் பேரரசானது காரா கிதையைத் தவறான வழியில் கைப்பற்றியது.[11]

தங்களது பொதுவான எதிரியான நைமன் இளவரசன் குசலுகுவின் தோல்விக்குப் பிறகு மங்கோலியர்கள் மற்றும் குவாரசமியர்கள் இடையேயான உறவானது ஆரம்பத்தில் வலுவாக இருந்தது.[12](pp30–31) எனினும் ஷா சீக்கிரமே தனது புதிய கிழக்கு அண்டை நாட்டவர்களைக் கண்டு அஞ்சத் தொடங்கினார். வரலாற்றாளர் நசாவின் கூற்றுப்படி, அவரது இந்த மனமாற்றத்திற்குக் காரணம் மங்கோலியத் துருப்புக்களுடன் எதிர்பாராத விதமாக முன்னர் அவருக்கு ஏற்பட்ட சந்திப்பின் நினைவே ஆகும். அச்சந்திப்பில் மங்கோலியர்களின் வேகம் மற்றும் நகர்வுகள் ஷாவை அச்சம் அடையச் செய்தன.[13] 1218ஆம் ஆண்டு ஒற்றாரின் ஆளுநரான இனல்சுக் ஒரு முழு மங்கோலிய வணிகக் குழுவையும் கைதுசெய்து அதன் பொருட்களைக் கைப்பற்றுவதற்கு ஷா அனுமதி அளித்தார். இந்தப் பிரச்சினையை தூதரக ரீதியாகத் தீர்க்க நினைத்த செங்கிஸ் கான் தனது மூன்று தூதுவர்களை ஊர்கெஞ்சிற்கு அனுப்பினார். ஆனால் முகம்மது அவர்களை அவமானப்படுத்தி அவர்களில் ஒருவனைப் பொதுமக்கள் மத்தியில் மரண தண்டனைக்கு உட்படுத்தினார். இச்செயலால் கடுஞ்சினங்கொண்ட செங்கிஸ் கான் சின் அரச மரபினருக்கு எதிரான தனது போரை விட்டு விட்டு மேற்கு நோக்கித் தனது இராணுவத்தின் பெரும் பகுதியுடன் வந்தார். சிறு படையை மட்டுமே அவர் சீனாவில் விட்டுவிட்டு வந்தார்.[14]

முற்றுகைக்கு முன்

தொகு

படையெடுத்து வந்த மங்கோலியர்களின் மொத்த எண்ணிக்கை குறித்து முரண்பட்ட தகவல்கள் உள்ளன. 2,00,000 மேல் குறிப்பிடப்படும் எந்த மதிப்பீடும் மிகைப்படுத்தப்பட்டதாக நவீன வரலாற்றாளர்களால் கருதப்படுகின்ற போதிலும்[b], மொத்த வீரர்களின் எண்ணிக்கையானது குறைந்தது 75,000 முதல் அதிகபட்சமாக 7,00,000 வரை மதிப்பிடப்படுகின்றன. மங்கோலியப் படைகளின் திட்ட அமைப்பின் சிறந்த நெகிழ்வுத்தன்மை மற்றும் செயல் திறமையானது இந்த தெளிவற்ற நிலையை மேலும் கடினமாக்குகிறது. இதன் காரணமாக மங்கோலியர்கள் தாங்கள் நினைத்த போது பிரிந்து சென்றும் தேவை ஏற்படும்போது இணைந்தும் போர் புரிந்தனர்.[20] மங்கோலியப் படைகள் குவாரசமியாவிற்கு அலையலையாக வந்தன. முதல் அலையில், ஒரு முன்வரிசைப் படையானது சூச்சி மற்றும் செபே தலைமையில் மறைவான ஆபத்துகளையுடைய தியான் சான் மலை வழிகளைக் கடந்து வந்தது. கிழக்கு பெர்கானாப் பள்ளத்தாக்கில் இருந்த பட்டணங்களை அழிக்கத் தொடங்கியது. பிறகு மற்றொரு இராணுவமானது சகத்தாய் மற்றும் ஒகோடி தலைமையில் ஒற்றார் நகரத்தின் மீது இறங்கியது. அதை முற்றுகையிட்டது.[21](pp269–272) செங்கிஸ் கான் சீக்கிரமே தன்னுடைய இளைய மகன் டொலுயுடன் வந்தார். பிறகு தன்னுடைய படையை நான்கு பிரிவுகளாகப் பிரித்தார். சகத்தாய் மற்றும் ஒகோடி ஒற்றரை முற்றுகையிட்டு கொண்டிருந்த நேரத்தில், சூச்சி வடமேற்கு திசையில் ஊர்கெஞ்ச் இருந்த திசையை நோக்கிப் பயணித்தார். ஒரு சிறிய படையானது குசன்டு நகரத்தைக் கைப்பற்ற அனுப்பப்பட்டது. ஆனால் செங்கிஸ் கான் தன்னுடன் டொலுயை அழைத்துக் கொண்டு, தன்னுடைய இராணுவத்தில் பாதியளவான சுமார் 30,000 முதல் 50,000 வீரர்களைக் கொண்டிருந்த ஒரு படையை அழைத்துக் கொண்டு மேற்கு நோக்கிப் பயணித்தார்.[19](p113)

குவாரசமிய ஷா பல பிரச்சனைகளில் மூழ்கி இருந்தார். அவரது பேரரசானது பரந்து விரிந்திருந்தது. புதிதாக உருவாக்கப்பட்டிருந்தது. அங்கு நிர்வாகமானது இன்னும் வளர்ச்சி நிலையில் தான் இருந்தது.[22](pp373–380) மேலும் அவரது தாய் தெர்குன் கதுனும் நாட்டின் மீது குறிப்பிடத்தக்க அளவுக்கு அதிகாரத்தைக் கொண்டிருந்தார். ஷா மற்றும் அவரது தாய்க்கு இடையிலான உறவை ஒரு வரலாற்றாளர் 'நிலையற்ற இரட்டை ஆட்சி முறை' என்று குறிப்பிடுகிறார். இது பெரும்பாலான நேரங்களில் முகமதுவிற்குத் தீங்காகவே அமைந்தது.[23](pp14–15) தனது பெரும்பாலான தளபதிகளை நம்ப ஷா மறுத்தார். அவரது மூத்த மகன் மற்றும் வாரிசான சலாலத்தீன் மட்டுமே இதற்கு விதிவிலக்கு.  இதற்கு முந்தைய ஆண்டு நடைபெற்ற இருகிசு ஆற்றினருகில் சலாலத்தீனின் இராணுவ மதிநுட்பமானது மிக முக்கியமானதாக இருந்தது.[24](p31) தன் பெரும்பாலான தளபதிகளின் விருப்பப்படி ஷா, வெட்ட வெளியில் யுத்தம் புரிய முடிவெடுத்திருந்தால், எண்ணிக்கையில் மங்கோலியர்களுக்கு இணையாக இருந்திருக்க முடியாது. படை வீரர்களின் தரத்திலும் அதே நிலை தான் இருந்தது.[25] எனவே ஷா தனது படைகளைக் கோட்டைகளைப் பாதுகாப்பதற்காகப் பிரித்து தனது மிக முக்கியமான பட்டணங்களான சமர்கந்து, மெர்வ் மற்றும் நிசாபூர் ஆகியவற்றில் நிறுத்தினார்.[26] போர் நடக்கும் இடத்தில் இருந்து தூரத்தில் இருந்த காரணத்தினால் புகாராவிற்கு ஒப்பீட்டளவில் குறைவான துருப்புக்களே அளிக்கப்பட்டிருந்தது.[c] வழித்தடமற்ற கிசில்கும் பாலைவனம் வழியாக சுமார் 480 கிலோமீட்டர் தூரத்தை மங்கோலியப் படைகள் கடந்தன. இப்பாலைவனமானது இதற்கு முன்னர் ஒரு பெரிய படையால் கடக்க முடியாதது என்று அனைவராலும் கருதப்பட்டது. நகரத்திற்கு முன்னர் தோன்றிய கானின் இராணுவத்தைக் கண்டு குடிமக்கள் மற்றும் ஷா அதிர்ச்சியடைந்தனர்.  இந்தப் பயணமானது சில வரலாற்றாளர்களால் வரலாற்றின் மிகச் சாமர்த்தியமான படை நகர்த்தல் என்று புகழப்படுகிறது.[29][30](pp63–64) தங்களது சொந்தக் குதிரை வில்லாளர்களின் உடன்பிறந்த வேகம் மற்றும் கட்டுரம் வாய்ந்த தன்மை ஆகியவற்றை உபயோகப்படுத்தியதோடு மட்டுமல்லாமல், உள்ளூர் வழிகாட்டிகளைப் பிடித்து பாலைவனத்தில் எங்கு கிணறுகள் மற்றும் நீர்க்குட்டைகளின் அமைப்பு இருக்கிறது என்பதைக் கண்டு அவர்கள் கடந்தனர். இதன் காரணமாகக் கான் மற்றும் அவரது தளபதிகள் ஷாவின் திட்டங்களைத் தவிடுபொடியாக்கினர்.[31](p273) ஒரு வரலாற்றாளரின் ஊகப்படி, ஷாவை அதிர்ச்சிக்கு உள்ளாக்குவதற்காகக் கான் தன் படைகள் பயணிப்பதற்கு தொலைதூரத்திற்கு முன்னதாகவே சிறு சிறு படைக் குழுக்களை நீண்ட தொலைவிற்குப் பயன்படுத்தித் தான் வருவதை இரகசியமாக இருக்கும்படி பார்த்துக் கொண்டார்.[30](p65)

முற்றுகை

தொகு
 
1216-1224இல் நடு ஆசியாவில் செங்கிஸ் கானின் தாக்குதல்கள்

செங்கிஸ் கான் முதலில் சமர்கந்தைத் தாக்குவார் என ஷா எதிர்பார்த்திருந்தார். அதற்குப்பிறகு ஷாவின் இராணுவம் மற்றும் புகாராவிலுள்ள கோட்டைக் காவல் படையினர் முற்றுகையிலிருந்து மீட்கலாம் என்று திட்டமிட்டிருந்தார்.  ஆனால் என்ன நடக்கிறது என்று அறியும் முன்னரே ஷா சுற்றி வளைக்கப்பட்டார். கிசில்கும் பாலைவனம் வழியாகக் கான் வந்த நிகழ்வானது ஷாவின் இராணுவத்தை ஆற்றலற்றதாக்கிவிட்டது. ஷாவால் எதிரியுடன் நேரடியாகப் போர் புரியவோ அல்லது தனது மக்களுக்கு உதவவோ முடியவில்லை.  .[28] வரலாற்றாளர் சுவய்னியின் பதிவுகளின் படி, புகாராவில் இருந்த கோட்டைக் காவல் படையினருக்கு ஒரு குறிப்பிட்ட குர் கான் என்பவர் தலைமை தாங்கியிருந்தார்.[27](p103) ஒரு வரலாற்றாளர் இந்த குர் கான் செங்கிஸ் கானின் பழைய நண்பனாக இருந்து எதிரியாக மாறிய சமுக்காவாக இருக்கலாம் என்ற கருத்தைக் கூறுகிறார்.[32](pp119–20) பெரும்பாலான வரலாற்றாளர்கள் இதற்கு வாய்ப்பில்லை எனக் கருதுகின்றனர். ஏனெனில் 1206ஆம் ஆண்டே சமுக்கா மரண தண்டனைக்கு உட்படுத்தப்பட்டது இதற்குப் பொதுவாகச் சுட்டிக்காட்டப்படுகிறது.  .[33][28]

இம்முற்றுகையின் முக்கியமான இராணுவ நடவடிக்கையானது இரண்டாவது அல்லது மூன்றாவது நாளில் நடைபெற்றது. அன்று சுல்தானின் துருப்புகள் சுமார் 2,000 முதல் 20,000 பேர் கோட்டையை விட்டு வெளியே வந்தனர். சுவய்னியின் பதிவுகளின் படி, அவர்கள் மங்கோலியர்களால் ஆற்றங்கரையில் கொன்றழிக்கப்பட்டனர்:

இப்படையினர் ஆக்சசு ஆற்றங்கரையை அடைந்தபோது மங்கோலிய இராணுவத்தின் ரோந்து சுற்றியவர்கள் மற்றும் முன்வரிசைப் படையினர் அவர்கள் மீது விழுந்தனர். அவர்கள் ஒரு தடயத்தைக்கூட விடவில்லை ... அடுத்த நாள், சூரிய ஒளியின் எதிரொளிப்பில் அந்த வெட்ட வெளியானது குருதியால் நிரப்பப்பட்ட ஒரு தட்டைப் போல் இருந்தது.

ஒரு வரலாற்றாளரின் கூற்றுப்படி, கோட்டையை விட்டு வெளியே வந்த வீரர்கள் முழுவதுமாக சுல்தானின் உதவிப் படையினர் ஆவர். கோட்டைக்குள் இருந்த காவல் படையினர் கிடையாது. அவர்கள் ஒருவேளை தப்பிப்பதற்காகக் கூட கோட்டையை விட்டு வெளிய வந்து முயற்சித்திருக்கலாம். அவர்கள் தப்பிப்பதற்காகச் சென்றனர் என எண்ணப்படுவதன் காரணமானது, புகாரவானது குமாரசாமியர்களால் அப்போதுதான் கைப்பற்றப்பட்டிருந்தது என்பதேயாகும். கார கானிடுகளிடமிருந்து ஒரு தசாப்தத்திற்குள்ளாகத்தான் புகாரா வெற்றி கொள்ளப்பட்டிருந்தது.[34] அடுத்த நாள், பட்டணத்துப் பெரியவர்கள் கானின் இராணுவத்திடம் நகரத்தைச் சரணடைய வைத்தனர். அன்றிலிருந்து, மங்கோலியர்களுக்குக் காட்டப்பட்ட ஒரே எதிர்ப்பானது நகர்க்காப்பரணுக்குள் இருந்த ஷாவுக்கு விசுவாசமான ஒரு சிறு குழுவினரிடம் இருந்து வந்தது. கோட்டையின் நகர்க்காப்பரணானது மிகுந்த நுணுக்கத்துடன் கட்டப்பட்டிருந்தது. ஆனால் கான் முற்றுகைப் போர் வல்லுநர்களைச் சீனாவிலிருந்து அழைத்து வந்திருந்தார். 10 நாட்களுக்குப் பிறகு, தீ பொருட்கள் மற்றும் வெடிமருந்து ஆயுதங்களைக் கொண்டு தற்காப்பானது முறியடிக்கப்பட்டது. 14 நாட்களுக்குள் நகர்க்காப்பரணானது கைப்பற்றப்பட்டது.[35](p34)

முற்றுகைக்குப் பின்

தொகு

நகரத்திற்குள் நுழைந்த செங்கிஸ் கான் வெள்ளிக்கிழமை மசூதியில் உரையாற்றியதாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த உரையானது மங்கோலிய அழிவிற்கான இறையியல் விளக்கமாகப் பிற்காலத்தில் புகழ்பெற்றது.

மக்களே, தெரிந்து கொள்ளுங்கள் நீங்கள் மிகப் பெரிய பாவங்களைச் செய்துள்ளீர்கள். உங்கள் ஆட்சியாளர்கள் இந்தப் பாவங்களைச் செய்துள்ளார்கள். இந்த வார்த்தைகளுக்கு என்ன ஆதாரம் நான் வைத்திருக்கிறேன் என்று நீங்கள் கேட்டால், நான் இதைச் சொல்கிறேன் ஏனெனில் நான் கடவுளின் தண்டனை. நீங்கள் மிகப்பெரிய பாவங்களைச் செய்திருக்காவிட்டால் கடவுள் என்னைப் போன்ற ஒரு தண்டனையை உங்களுக்குக் கொடுத்திருக்கமாட்டார்.

நகர்க்காப்பரணில் இருந்து கொடுக்கப்பட்ட சிறு எதிர்ப்பானது எஞ்சிய புகாராவுக்கும் தீங்காக அமைந்தது. வீடுகள் மற்றும் கட்டடங்களில் ஒளிந்துள்ளவர்களை வெளியேற்றுவதற்காக மங்கோலியர்கள் கட்டடங்களுக்குத் தீவைத்தனர். எனினும் நகரத்தின் பெரும்பாலான கட்டமைப்புகள் மரத்தால் செய்யப்பட்டவையாக இருந்ததால் சீக்கிரமே கட்டுப்படுத்த முடியாத தீயானது பெரும்பாலான நகரத்தைத் தரைமட்டமாக்கியது. புகாரவில் இருந்த புகழ்பெற்ற நூலகம் உள்ளிட்ட கட்டடங்கள் கரித் துண்டுகளாயின.[36] தீயால் அழிக்கப்படாமல் எஞ்சியிருந்த கற்களாலான கட்டடங்களை மங்கோலியர்கள் தரைமட்டமாக்கினர். இதில் முதன் முதலில் இருந்த போ-இ கல்யாண் மசூதியும் ஒன்றாகும். எனினும் மசூதிக்குள் இருந்த கல்யாண் தூபியானது அழிக்கப்படாமல் விடப்பட்டது.[37]

முற்றுகையில் தப்பிய கட்டடங்கள். கடிகாரச் சுற்றாக மேல் இடது புறமிருந்து, கல்யாண் தூபி, சாமனிடு கல்லறை, ஏனெனில் இது மண்ணில் புதைந்த்திருந்ததால் தப்பியது;[38] மற்றும் மகோகி அத்தாரி மசூதி.[39]

நகர்க் காப்பரணுக்குள் இருந்த அனைவரும் கொல்லப்பட்ட போதும், மெர்வ் மற்றும் ஊர்கெஞ்ச் ஆகிய நகரங்களில் நடந்ததை போல் மக்கள் அனைவரும் மொத்தமாகக் கொல்லப்படவில்லை. மாறாக, மக்கள் நகரத்திலிருந்து வெளியேற்றப்பட்டுப் பிரிக்கப்பட்டனர். திறமை வாய்ந்த கைவினைஞர்கள் மங்கோலிய இராணுவத்துடன் இணைத்துக் கொள்ளப்பட்டனர். எஞ்சிய போர் புரியும் வயதுடைய ஆண்கள் மங்கோலியப் படைகளில் கட்டாயப்படுத்திச் சேர்க்கப்பட்டனர்.[40] இவ்வாறு கட்டாயப்படுத்திச் சேர்க்கப்பட்டவர்கள் சமர்கந்து மற்றும் குர்கஞ்ச் முற்றுகைகளின்போது மனிதக் கேடயங்களாகப் பயன்படுத்தப்பட்டனர். சீக்கிரமே இந்த இரண்டு முற்றுகைகளும் 1220 மற்றும் 1221இல் புகாரா முற்றுகைக்குப் பிறகு நடந்தன.[41](pp64–65) பின் வந்த நாட்களில் காசுப்பியன் கடலில் இருந்த ஒரு தீவில் ஷா முகம்மது வறிய நிலையில் இறந்தார். அதே நேரத்தில் மங்கோலியர்கள் படிப்படியாக ஷாவின் பேரரசில் இருந்த ஒவ்வொரு பெரிய நகரத்தையும் முற்றுகையிட்டுக் கைப்பற்றினர்.[42](pp289) குவாரசமியாவின் பெரும்பான்மையான எதிர்ப்பை மங்கோலியர்களுக்கு எதிராக ஷாவின் மகன் சலாலத்தீன் காட்டினார். ஆனால் இறுதியாகச் சிந்து ஆற்று யுத்தத்தில் அவரது படை நொறுக்கப்பட்டது.[43](p113)

மரபு

தொகு

இந்த முற்றுகையானது குறுகிய காலத்திற்கு நகரத்திற்கு அதிகப்படியான அழிவை ஏற்படுத்திய போதும், அது இந்நகரத்தின் முடிவாக அமையவில்லை. உண்மையில் இரண்டு தசாப்தங்களுக்குள்ளாகவே இந்நகரமானது மீண்டும் ஆசிய வணிகத்தில் ஒரு முக்கிய மையமாகச் சேவையாற்றியது.[44] தருயாச்சி என்ற ஒரு புதிய பதவி இங்கு உருவாக்கப்பட்டது. அவருக்குக் கீழ் ஆட்சிக் கட்டமைப்பிற்கான ஆக்கக்கூறுகள் குறிப்பிடத்தக்க அளவுக்கு சீக்கிரமே உருவாக்கப்பட்டன. இங்கு உருவாக்கப்பட்ட பெரும்பாலான பேரமைப்புகள் காரா கிதை அரசின் அமைப்புகளை அகத்தூண்டுதலாகக் கொண்டு உருவாக்கப்பட்டிருந்தன. ஒரு வரலாற்றாளர் காரா கிதை அரசை 'மூல மங்கோலியப் பேரரசு' என்று அழைத்துள்ளார்.[45] 1221ஆம் ஆண்டு இப்பகுதிக்கு வந்த தாவோயியக் குழுவின் பதிவுகளின்படி, சமர்கந்து மற்றும் ஊகத்தின்படி புகாராவும், சீன மற்றும் கிதான் கைவினைஞர் குடிமக்களைக் கொண்டு மீண்டும் மக்கள் நிரப்பல் செய்யப்பட்டது.[46] இப்பகுதியானது இன்னும் நிலையற்ற தன்மையுடனேயே இருந்தது. ஒரு குவாரசமியக் கொள்ளைக்கூட்டத் தலைவன் ஒரு புகாரா தருகாச்சியை இந்நேரத்தில் அரசியல் கொலை செய்தான். ஒகோடியின் ஆட்சியின்போது கருவூலத்திற்கு வருமானம் தந்த முக்கியமான ஆதாரங்களில் முதன்மையானதாகக் குவாரசமியாவின் முந்தைய நகரங்கள் திகழ்ந்தன. இந்நகரங்கள் பின்னாளில் சகதாயி கானரசின் முக்கியமான நகரங்களாகத் திகழ்ந்தன; சமர்கந்துடன் சேர்ந்து புகாரவும் எதிர்காலத்தில் பெரிய படையெடுப்பாளரான தைமூரின் தாயக நகரங்களாயின.[47] இந்நகரமானது இதன் மதரீதியான முக்கியத்துவத்தையும் மீண்டும் பெற்றது. நடு ஆசியாவில் சூபித்துவத்தின் மிக முக்கியமான மையமாக புகாரா உருவானது; சைபல்தீன் அல் பகார்சியின் கல்லறையைச் சுற்றி இருந்த திருவிடமானது இப்பகுதியிலேயே மிகுந்த செல்வச் செழிப்பு மிக்க அறக்கொடைப் பொருட்களைக் கொண்ட இடமாகத் திகழ்ந்தது.[48]

குறிப்புகள்

தொகு
  1. This claim is corroborated by other thirteenth-century writers, such as al-Tha'alibi and al-Qazwini; the latter describes Bukhara as an 'assembly, repository of the wise, source of rational science'.[3] However, al-Hamawi gives a less flattering portrait of the densely-populated centre, citing poets who criticize the 'filth and prevalence of uncleanliness in its streets'.[2]
  2. The highest estimates were made by classical Muslim historians such as Juzjani and Rashid al-Din.[15][16] Rossabi indicates that the total Mongol invasion force cannot have been more than 200,000;[17] while Smith gives an approximation of around 130,000.[18] The minimum figure of 75,000 is given by Sverdrup, who hypothesizes that a tumen had often been overestimated in size.[19](pp109,113)
  3. As with the Mongol army, there is also debate as to the size and composition of the Shah's forces. Juvaini states that 50,000 were sent to aid Otrar, and states that there were at least 20,000 in Bukhara.[27](p82) Sverdrup, however, claims that there were between two and five thousand men at Bukhara.[28]

மேற்கோள்கள்

தொகு
  1. D. Buell, Paul (1979). "Sino-Khitan Administration in Mongol Bukhara". Journal of Asian History (Harrassowitz Verlag) 13 (2): 130–131. https://www.jstor.org/stable/41930343. 
  2. 2.0 2.1 al-Hamawi, Yaqut (c. 1220). Mu'jam ul-Buldān معجم البلدان [Dictionary of Countries] (in Arabic). pp. 353–4.{{cite book}}: CS1 maint: unrecognized language (link)
  3. al-Qazwini, Zakariya (c. 1272). Āṯār al-belād wa-akhbār al-ʿibād [Monuments of the Lands and Historical Traditions about Their Peoples] (in Arabic). p. 510.{{cite book}}: CS1 maint: unrecognized language (link)
  4. Modelski, George (2007). "Central Asian world cities (XI – XIII century): a discussion paper". Archived from the original on 4 June 2011. பார்க்கப்பட்ட நாள் 5 March 2022.
  5. Ahmad, S. Maqbul (2000). "8: Geodesy, Geology, and Mineralogy; Geography and Cartography". In Bosworth, C.E.; Asimov, M.S. (eds.). History of Civilizations of Central Asia. Vol. IV / #2. UNESCO Publishing. p. 217. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9231034677.
  6. Emin, Leon (1989). Muslims in the USSR Мусульмане в СССР [Muslims in the USSR]. Moscow: Novosti Press Agency Publishing House. pp. 8–10. இணையக் கணினி நூலக மைய எண் 20802477.
  7. Nelson Frye, Richard (1965). Bukhara: The Medieval Achievement. University of Oklahoma Press. pp. 28–32. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 1568590482.
  8. Golden, Peter (2009). "Inner Asia c.1200". The Cambridge History of Inner Asia The Chinggisid Age: 12–15. doi:10.1017/CBO9781139056045.004. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9781139056045. 
  9. 9.0 9.1 Abazov, Rafis (2008). Palgrave Concise Historical Atlas of Central Asia. Palgrave Macmillan. p. 43. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1403975423.
  10. Buniyatov, Z. M. (2015) [1986]. Государство Хорезмшахов-Ануштегинидов: 1097-1231 [A History of the Khorezmian State under the Anushteginids, 1097-1231]. Translated by Mustafayev, Shahin; Welsford, Thomas. Moscow: Nauka. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-9943-357-21-1.
  11. Biran, Michal (2009). "The Mongols in Central Asia from Chinggis Khan's invasion to the rise of Temür". The Cambridge History of Inner Asia The Chinggisid Age: 47. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9781139056045. 
  12. Jackson, Peter (2009). "The Mongol Age in Eastern Inner Asia". The Cambridge History of Inner Asia The Chinggisid Age: 26–45. doi:10.1017/CBO9781139056045.005. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9781139056045. 
  13. al-Nasawi, Shihab al-Din Muhammad (1241). Sirah al-Sultan Jalal al-Din Mankubirti [Biography of Sultan Jalal al-Din Mankubirti] (in Arabic). p. 13. இணையக் கணினி நூலக மைய எண் 21732074.{{cite book}}: CS1 maint: unrecognized language (link)
  14. May, Timothy (2018). "The Mongols outside Mongolia". The Mongol Empire. Edinburgh: Edinburgh University Press. pp. 60–61. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780748642373. JSTOR 10.3366/j.ctv1kz4g68.11.
  15. Juzjani, Minhaj-i Siraj (1260). தபாகத்-இ நசீரி طبقات ناصری (in Persian). Vol. XXIII. Translated by Raverty, H. G. p. 968.{{cite book}}: CS1 maint: unrecognized language (link)
  16. al-Din, Rashid (c. 1300). Thackston, W. M. (ed.). ஜமி அல்-தவரிக் جامع التواريخ [Compendium of Chronicles] (in Arabic and Persian). Vol. 2. p. 346.{{cite book}}: CS1 maint: unrecognized language (link)
  17. Rossabi, Morris (October 1994). "All the Khan's Horses". Natural History: 49–50. http://afe.easia.columbia.edu/mongols/conquests/khans_horses.pdf. பார்த்த நாள்: 3 February 2022. 
  18. Smith, John Masson (1975). "Mongol Manpower and Persian Population". Journal of the Economic and Social History of the Orient 18 (3): 273–4, 280–4. doi:10.2307/3632138. 
  19. 19.0 19.1 Sverdrup, Carl (2010). "Numbers in Mongol Warfare". Journal of Medieval Military History (Boydell and Brewer) VIII: 109–117. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9781843835967. https://www.jstor.org/stable/10.7722/j.ctt7zstnd.6. பார்த்த நாள்: 3 February 2022. 
  20. Owen, David (2009). The Little Book of Warfare: 50 Key Battles That Trace The Evolution Of Conflict. Fall River Press. pp. 20–21. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9781741109139.
  21. McLynn, Frank (2015). Genghis Khan: His Conquests, His Empire, His Legacy. Hachette Books. இணையக் கணினி நூலக மைய எண் 1285130526.
  22. Barthold, Vasily (1968) [1900]. Turkestan Down to the Mongol Invasion (Third ed.). Gibb Memorial Trust. இணையக் கணினி நூலக மைய எண் 4523164.
  23. பிழை காட்டு: செல்லாத <ref> குறிச்சொல்; Golden2 என்னும் பெயரில் உள்ள ref குறிச்சொல்லுக்கு உரையேதும் வழங்கப்படவில்லை
  24. பிழை காட்டு: செல்லாத <ref> குறிச்சொல்; Jackson2 என்னும் பெயரில் உள்ள ref குறிச்சொல்லுக்கு உரையேதும் வழங்கப்படவில்லை
  25. Sverdrup, Carl (2013). "Sübe'etei Ba'atur, Anonymous Strategist". Journal of Asian History (Harrassowitz Verlag) 47 (1): 37. doi:10.13173/jasiahist.47.1.0033. https://www.jstor.org/stable/10.13173/jasiahist.47.1.0033. 
  26. பிழை காட்டு: செல்லாத <ref> குறிச்சொல்; Timothy2 என்னும் பெயரில் உள்ள ref குறிச்சொல்லுக்கு உரையேதும் வழங்கப்படவில்லை
  27. 27.0 27.1 27.2 27.3 Juvaini, Ata-Malik (c. 1260). தரிக்-இ ஜகான்குசாய் تاریخ جهانگشای [History of the World Conqueror] (in Persian). Vol. 1. Translated by Andrew Boyle, John.{{cite book}}: CS1 maint: unrecognized language (link)
  28. 28.0 28.1 28.2 Sverdrup, Carl (2017). The Mongol Conquests: The Military Campaigns of Genghis Khan and Sübe'etei. Helion & Company. pp. 151–3. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1913336059.
  29. பிழை காட்டு: செல்லாத <ref> குறிச்சொல்; Owen2 என்னும் பெயரில் உள்ள ref குறிச்சொல்லுக்கு உரையேதும் வழங்கப்படவில்லை
  30. 30.0 30.1 Martin, H. Desmond (1943). "The Mongol Army". Journal of the Royal Asiatic Society (Cambridge University Press) 75 (1–2): 46–85. doi:10.1017/S0035869X00098166. 
  31. பிழை காட்டு: செல்லாத <ref> குறிச்சொல்; Mclynn2 என்னும் பெயரில் உள்ள ref குறிச்சொல்லுக்கு உரையேதும் வழங்கப்படவில்லை
  32. பிழை காட்டு: செல்லாத <ref> குறிச்சொல்; Barthold2 என்னும் பெயரில் உள்ள ref குறிச்சொல்லுக்கு உரையேதும் வழங்கப்படவில்லை
  33. Mote, Frederick W. (1999). "The Career of the Great Khan Chinggis". Imperial China 900-1800. Harvard University Press. p. 422. எண்ணிம ஆவணச் சுட்டி:10.2307/j.ctv1cbn3m5.21. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780674445154. JSTOR j.ctv1cbn3m5.21.
  34. D. Buell, Paul (1979). "Sino-Khitan Administration in Mongol Bukhara". Journal of Asian History (Harrassowitz Verlag) 13 (2): 130–131. https://www.jstor.org/stable/41930343. 
  35. பிழை காட்டு: செல்லாத <ref> குறிச்சொல்; Jackson3 என்னும் பெயரில் உள்ள ref குறிச்சொல்லுக்கு உரையேதும் வழங்கப்படவில்லை
  36. பிழை காட்டு: செல்லாத <ref> குறிச்சொல்; Buell3 என்னும் பெயரில் உள்ள ref குறிச்சொல்லுக்கு உரையேதும் வழங்கப்படவில்லை
  37. Man, John (2005). Genghis Khan: Life, Death, and Resurrection. New York: Thomas Dunne Books. pp. 198-9. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0312314442.
  38. Starr, S. Frederick (2013). Lost Enlightenment: Central Asia's Golden Age from the Arab Conquest to Tamerlane. Princeton University Press. p. 236. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-691-15773-3.
  39. Uysal, Muzaffer; Kantarci, Kemal; Magnini, Vincent P. (September 2014). "Bukhara: The Princess of Cities". Tourism in Central Asia. Apple Academic. pp. 79–81. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1774633663.
  40. Chalind, Gérard; Mangin-Woods, Michèle; Woods, David (2014). "Chapter 7: The Mongol Empire". A Global History of War: From Assyria to the Twenty-First Century (First ed.). University of California Press. pp. 144–145. JSTOR 10.1525/j.ctt7zw1cg.13.
  41. பிழை காட்டு: செல்லாத <ref> குறிச்சொல்; Martin2 என்னும் பெயரில் உள்ள ref குறிச்சொல்லுக்கு உரையேதும் வழங்கப்படவில்லை
  42. பிழை காட்டு: செல்லாத <ref> குறிச்சொல்; Mclynn3 என்னும் பெயரில் உள்ள ref குறிச்சொல்லுக்கு உரையேதும் வழங்கப்படவில்லை
  43. பிழை காட்டு: செல்லாத <ref> குறிச்சொல்; Sverdrup12 என்னும் பெயரில் உள்ள ref குறிச்சொல்லுக்கு உரையேதும் வழங்கப்படவில்லை
  44. Foltz, Richard (2019). A History of the Tajiks: The Iranians of the East. I.B. Tauris. p. 94. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1784539559. பார்க்கப்பட்ட நாள் 3 February 2022.
  45. பிழை காட்டு: செல்லாத <ref> குறிச்சொல்; Buell4 என்னும் பெயரில் உள்ள ref குறிச்சொல்லுக்கு உரையேதும் வழங்கப்படவில்லை
  46. Chih'ch'ang, Li (1935). Kuo-Wei, Wang (ed.). Hsi-yu chi [Record of a Pilgrimage to the West]. p. 327.
  47. May, Timothy (2019). "The Rise of Chinggis Khan and the Mongol Empire". The Mongols. Amsterdam University Press. p. 39. எண்ணிம ஆவணச் சுட்டி:10.1017/9781641890953.002. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9781641890953. S2CID 240850353.
  48. Blair, S. (2000). "13: Language Situation and Scripts (Arabic)". In Bosworth, C.E.; Asimov, M.S. (eds.). History of Civilizations of Central Asia. Vol. IV / #2. UNESCO Publishing. p. 347. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9231034677.
"https://ta.wikipedia.org/w/index.php?title=புகாரா_முற்றுகை&oldid=3848631" இலிருந்து மீள்விக்கப்பட்டது