மசாட்சுகு அசகாவா
மசாட்சுகு அசகாவா (பிறப்பு 1958), ஒரு சப்பானிய அரசு ஊழியர், ஆசிய வளர்ச்சி வங்கியின் (ADB) தலைவராக உள்ளார். 2020 ஜனவரி 17 அன்று பதவியேற்ற அசகாவா, ஆசிய வளர்ச்சி வங்கியின் 10 வது தலைவராக உள்ளார்.[1] அவர் முன்னர் சப்பானின் பிரதம மந்திரி ஷின்சோ அபே மற்றும் சப்பானின் துணைப் பிரதமரும் நிதி அமைச்சருமான டாரோ அசோ ஆகியோரின் சிறப்பு ஆலோசகராக இருந்துள்ளார். முன்னதாக சப்பானில் நிதி அமைச்சகத்தில் சர்வதேச விவகாரங்களுக்கான துணை அமைச்சராகவும் இருந்தள்ளார்.
மசாட்சுகு அசகாவா Masatsugu Asakawa | |
---|---|
ஆசிய வளர்ச்சி வங்கியின் 10 வது தலைவர் | |
பதவியில் 17 சனவரி 2020 | |
Succeeding | டேகிகோ நகாவோ |
பிரதமரின் சிறப்பு ஆலோசகர் மற்றும் துணை பிரதமர் மற்றும் நிதி அமைச்சர் | |
பிரதமர் | சின்சோ அபே |
அமைச்சர் | டாரோ ஆசோ |
சர்வதேச விவகாரங்களுக்கான நிதி அமைச்சர் | |
பதவியில் 2015–2019 | |
அமைச்சர் | டாரோ ஆசோ |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 1958 (அகவை 65–66) சிசுயோகா மாகாணம், சப்பான் |
தேசியம் | சப்பானியர் |
முன்னாள் கல்லூரி | டோக்கியோ பல்கலைக்கழகம் (BA) பிரின்ஸ்டன் பல்கலைக்கழகம் (MPA) |
வேலை | அரசு பொது பணியாளர் |
ஆரம்ப கால வாழ்க்கை
தொகுசப்பானின் சிசுயோகா மாகாணத்தில் பிறந்த அசகாவா , டோக்கியோ பல்கலைக்கழகத்தின் பொருளாதாரம் படித்து 1981 இல் இளங்கலை பட்டம் பெற்றார்.[2] அதே ஆண்டு சப்பானில் உள்ள நிதி அமைச்சகத்தில் சேர்ந்தார். அசகாவா பின்னர் அமெரிக்காவின் பிரின்ஸ்டன் பல்கலைக்கழகத்தில் 1985 இல் எம்பிஏ பட்டம் பெற்றார்.
அரசு இணைந்த பணிகள்
தொகுசப்பானில் நிதி அமைச்சகத்தில் மசாட்சுகு அசகாவாவின் பணிகள் பின்வருமாறு:
- 2000-2002: பிராந்திய நிதி ஒத்துழைப்பு பிரிவு, வெளியுறவுத்துறை அமைச்சகம்
- 2002-2004: சர்வதேச வரிக் கொள்கை பிரிவு, வருமானவரித்துறை
- 2004-2006: அந்நிய செலாவணி சந்தைகள் பிரிவு
- 2006-2007: வளர்ச்சி கொள்கை பிரிவு
- 2007-2008: சர்வதேச பணியகத்தின் ஒருங்கிணைப்பு பிரிவு இயக்குநர்
- 2009–2013: சர்வதேச விவகாரங்களுக்கான துணை அமைச்சர்
- 2012–2013: சர்வதேச பணியகத்தின் மூத்த துணை இயக்குநர் செனரல் மற்றும் துணை பிரதமர் மற்றும் நிதி அமைச்சரின் நிர்வாக உதவியாளர், நிதி அமைச்சகம்
- 2013–2014: கொள்கை திட்டமிடல் மற்றும் ஒருங்கிணைப்பு துணை அமைச்சர்
- 2014–2015: சர்வதேச பணியகத்தின் இயக்குநர் செனரல்
- 2015–2019: ஜி20 / ஐஎம்எப் பிரச்சினைகள், அந்நிய செலாவணி வீதக் கொள்கை,[3] மற்றும் மேம்பாட்டு உதவி உள்ளிட்ட ஜப்பானிய நிதி அமைச்சகத்தின் அனைத்து சர்வதேச கொள்கைகளுக்கான பொறுப்புகளுடன் சர்வதேச விவகாரங்களுக்கான துணை அமைச்சர்.
ஆசிய வளர்ச்சி வங்கியின் தலைவர்
தொகுஆசிய வளர்ச்சி வங்கியின் ஆளுநர்கள் குழு (ADB) வங்கியின் 10 வது தலைவராக அசகாவா ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டதாக 2 டிசம்பர் 2019 ஆம் தேதி அறிவிக்கப்பட்டது.[4] செப்டம்பர் 2019 இல் சப்பான் அரசு அசகாவாவை ஆசிய வளர்ச்சி வங்கியின் தலைவர் பொறுப்புக்கு வேட்பாளராக பரிந்துரைத்தது.[5] முன்னாள் ஏடிபி தலைவர், டேகிகோ நகாவோ, ஆசிய வளர்ச்சி வங்கியின் தலைவர் பதவியில் இருந்து 16 சனவாி 2020 இல் விலகினார். அசகாவா 17 சனவாி 2020 அன்று ஏடிபியின் 10 வது தலைவராக தனது பதவியை பொறுப்பேற்றுக்கொண்டார்.[6][7]
மேற்கோள்கள்
தொகு- ↑ ADB, 'New ADB President Masatsugu Assumes Office', 'News release, 17 January 2020.
- ↑ "Masatsugu Asakawa elected ADB president". The Jakarta Post (in அமெரிக்க ஆங்கிலம்). 2019-12-03. பன்னாட்டுத் தர தொடர் எண் 0215-3432. பார்க்கப்பட்ட நாள் 2020-01-14.
- ↑ In 2016, the Financial Times described Asakawa as "Japan's top currency official"; see Japan’s Asakawa: will look at how to respond to market', Financial Times, 24 June 2016.
- ↑ ADB, 'Masatsugu Asakawa Elected ADB President', News release, 2 December 2019.
- ↑ 'Japan eyes ex-top currency diplomat Masatsugu Asakawa as next head of ADB', The Japan Times, 17 September 2019.
- ↑ ADB, 'Announcement of Intent of Resignation by ADB President Takehiko Nakao', News release, 17 September 2019.
- ↑ Masatsugu Asakawa, 'My Vision for ADB', 1 October 2019.