மசூமா ரணல்வி

மசூமா ரணல்வி இந்தியாவில் பெண் பிறப்புறுப்பு சிதைவை (FGM) முடிவுக்கு கொண்டுவருவதற்காக போராடி வரும் ஒரு சமூக ஆர்வலர் ஆவார்.

ரணல்வி, மேற்கு இந்தியாவில் உள்ள தாவூதி போஹ்ரா என்ற ஷியா முஸ்லிம் சமூகத்தின் பெண்களுக்கு பெண் பிறப்புறுப்பு சிதைவிலிருந்து தப்பிக்க அல்லது குணமடைய உதவுவதற்காக அர்ப்பணிக்கப்பட்ட வீ ஸ்பீக் அவுட்,[1] என்ற அமைப்பின் நிறுவனர் ஆவார்.[2] பெண் பிறப்புறுப்பு சிதைவுக்கு எதிராக மற்ற பெண்கள் வெளிப்படையாக விவாதிக்கவும், அரசியல் ரீதியாக போராடவும் ஒரு தளத்தை உருவாக்கி விரிவுபடுத்துவதே அவரது நோக்கமாகும். பெண்களுக்கு எதிரான வன்முறைகள், பாலியல் துன்புறுத்தல்கள் மற்றும் பாரம்பரிய விதிமுறைகளில் காணப்படும் பாலினப் பாகுபாடு ஆகிய தலைப்புகளில் விவாதிக்கவும், அவைகளை ஒரு முடிவுக்கு கொண்டுவரவும் தனது தனிப்பட்ட அனுபவத்தோடு பல்வேறு நிகழ்ச்சிகளில் பேசி வருகிறார்.[3]

அவருடைய உண்மைக்கதை

தொகு

2015 ஆம் ஆண்டில், நாங்கள் பேசுகிறோம் என்ற இயக்கத்தைத் தொடங்கிய புதிதில் ரணல்வி தனது கதையை பின்வருமாறு ஒரு நிகழ்ச்சியில் பகிர்ந்து கொண்டார். ரணல்வி தனது ஏழு வயதில் எவ்வாறு இவரது பாட்டி இனிப்புகளைத் தருவதாக ஏமாற்றி அழைத்துச் சென்று, ஒரு பெண் செவிலியரால், தனது பிறப்புறுப்பைச் சிதைத்தார் என கூறியுள்ளார். அதன்படி அவர்களது சமூகமான, முஸ்லீம் மதத்திற்குள் உள்ள வெளிப்படையாகவே, பழமைவாதத்தையும், ஆணாதிக்கத்தையும் பின்பற்றும் ஒரு குழுவினருக்கு பெண் பிறப்புறுப்பு சிதைப்பு (எஃப்.ஜி.எம், பெண் விருத்தசேதனம் மற்றும் 'கட்னா' என்றும் அழைக்கப்படுகிறது)  என்பது  ஒரு பாரம்பரிய வழக்கமாகும்.[2]

செயற்பாடு

தொகு

ரணல்வி நாங்கள் பேசுகிறோம் என்ற அமைப்பை நிறுவி, அதன் மூலம்[4] சஹியோ, என்ற பெண்ணிய உரிமைக் குழுவுடன் பணிபுரிந்து [5] போஹ்ரா சமூகத்தில் பெண் பிறப்புறுப்பு சிதைவை நிறுத்த ஒரு இணையதள மனுவை உருவாக்கினார், அந்த மனுவில், ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட பெண்கள் தங்களின் கையொப்பங்களை இவர்களின் இந்த கோரிக்கைகளுக்கு ஆதரவாக வழங்கியுள்ளனர்.[6] ரணல்வியின் பணி எஃப்ஜிஎம் செய்யப்படாமல் தடுப்பதோடு மட்டுமல்லாமல் அதில் தப்பிப்பிழைத்தவர்களின் மன ஆரோக்கியத்திலும் கவனம் செலுத்துகிறது.[7] போரா சமூகத்தில் மட்டுமல்லாது இந்திய அளவில், எந்த ஒரு சமூகத்திலும் இத்தகைய கொடூரமாக எஃப்ஜிஎம்-ஐ முழுவதுமாக சட்டப்படி தடை செய்ய ஏதுவான உரையாடல்களை வெளிப்படையாக செய்வதும், இதை நாடு முழுவதும் நீட்டிப்பதும் இந்த அமைப்பின் நோக்கமாக உள்ளது..[8]

மேற்கோள்கள்

தொகு
  1. "Masooma Ranalvi – Fighting The Odds Of Female Genital Cutting In India". Life Beyond Numbers. 28 April 2020. பார்க்கப்பட்ட நாள் 2021-03-29.
  2. 2.0 2.1 "Opinion: I Was Circumcised When I Was a Girl of 7". NDTV.com. பார்க்கப்பட்ட நாள் 2021-03-31.
  3. Sahiyo (2018-11-05). "Aarefa Johari and Masooma Ranalvi discuss FGC at We the Women Bangalore". SAHIYO (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-04-12.
  4. "Masooma Ranalvi – Fighting The Odds Of Female Genital Cutting In India". Life Beyond Numbers. 28 April 2020. பார்க்கப்பட்ட நாள் 2021-03-29."Masooma Ranalvi – Fighting The Odds Of Female Genital Cutting In India". Life Beyond Numbers. 28 April 2020. Retrieved 2021-03-29.{{cite web}}: CS1 maint: url-status (link)
  5. "SAHIYO". SAHIYO (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-03-31.
  6. "Muslim Women and the Challenge of Religion in Contemporary Mumbai" (in en). Economic and Political Weekly 52 (42–43): 7–8. 2015-06-05. https://www.epw.in/journal/2017/42-43/review-womens-studies/muslim-women-and-challenge-religion-contemporary-mumbai. 
  7. Cousins, Sophie (2016-05-17). "Health workers should reverse FGM procedures by deinfibulation, WHO says" (in en). BMJ 353: i2788. doi:10.1136/bmj.i2788. பன்னாட்டுத் தர தொடர் எண்:1756-1833. பப்மெட்:27189752. https://www.bmj.com/content/353/bmj.i2788. 
  8. "WeSpeakOut: For Women's Rights". www.wespeakout.org. பார்க்கப்பட்ட நாள் 2021-04-02.
"https://ta.wikipedia.org/w/index.php?title=மசூமா_ரணல்வி&oldid=3931316" இலிருந்து மீள்விக்கப்பட்டது