மச்சியர்
மச்சியர் (Machiyar) இந்தியாவில் குஜராத் மாநிலத்தில் காணப்படும் இந்து மற்றும் முஸ்லீம் சமூகத்தினர். இவர்கள் மச்சி என்றும் அழைக்கப்படுகின்றனர். [1]
வரலாறு மற்றும் தோற்றம்
தொகுமச்சியர் என்பது குஜராத்தின் கடலோரப் பகுதிகளான கட்ச் முதல் தெற்கு குஜராத் வரை பரவலாகக் காணப்படும் மீன்பிடித்தலை தொழிலாகக்கொண்ட சமூகத்தினராவார்கள். இவர்கள் முதலில் குஜராத்தின் வரலாற்றுத் தலைநகரான பதானில் குடியேறியதாகக் கூறப்படுகிறது. இந்த சமூகம் சிந்து மாகாணத்திலிருந்து வந்ததாகவும், மல்லா கோத்திரத்தைச் சேர்ந்தவர்கள் என்றும் கூறப்படுகிறது. இவர்கள் தங்களுக்குள் குச்சி மொழியில் பேசுகிறார்கள். பிறமரபுகளின்படி, இவர்கள் கார்வா சாதியைச் சேர்ந்தவர்கள், முஸ்லிம்களாக மதம் மாறியவர்கள்.[2]
தற்போதைய சூழ்நிலைகள்
தொகுமீன்பிடித்தல் என்பது இச்சமூகத்தின் பாரம்பரிய தொழிலாக உள்ளது. அவர்கள் அரபிக் கடலில் மீன் பிடிக்கிறார்கள். மீன்பிடித்தலுக்கு ஹோரி எனப்படும் தங்களுடைய பாரம்பரிய கலன்களைப் பயன்படுத்துகிறார்கள். இவர்கள் மூன்று அல்லது நான்கு நபர் குழுக்களாகக் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்கிறார்கள். இவர்கள் மீன்களை மேமன் அல்லது படாலா சமூகங்களுக்கு விற்கிறார்கள். மற்ற முஸ்லீம்கள் போல இவர்கள் சமூகத்தில் வலிமையுடன் சமூகக் கட்டுப்பாடுடன் உள்ளனர். குறிப்பிட்ட சாதிக்குள்ளாகத் திருமணப் பந்தங்களைக் கொண்டுள்ளனர். ஆனால் மக்ரானி மற்றும் மாலிக் சமூகங்கள் தங்களுக்குள் திருமண உறவுகொண்டுள்ளனர். இவர்கள் கோத்ரா எக்சோகாமியைப் பயிற்சி செய்வதில்லை, மேலும் நெருங்கிய உறவினர்களிடையேயான திருமணங்களும் நடைபெறுகின்றன. இந்த சமூகம் படேலியா, வெசிலியா, லோகானி, ஈஸ்வானி, ராரியா மற்றும் நோதியா ஆகிய ஆறு குலங்களைக் கொண்டுள்ளது. [3]
மேலும் காண்க
தொகு- குஜராத்தி முஸ்லிம்கள்
- படாலா
- கார்வா