மஞ்சுஸ்ரீ தபா
மஞ்சுஶ்ரீ தபா (நேபாளி: मञ्जुश्री थापा) காட்மாண்டுவில் பிறந்தார். கனடா எழுத்தாளர், கட்டுரையாளர் மற்றும் மொழிபெயர்ப்பாளரான இவர் நேபாள வம்சாவளி பெண் ஆவார்.[1] இவர் புனைவு எழுத்தாளராகவும் தனது படைப்புகளை வழங்கிவருகிறார். நேபாள நூல்களை முதன்மையாக கொண்டு ஆங்கில மொழியில் இலக்கியங்களை மொழிபெயர்த்துள்ளார். நேபாள நாட்டின் ஆட்சி மாற்றம், சுயசரிதைய, நேபாள மக்களின் உள்ள பிரதிபளிப்பு பற்றிய நூல்கள் பல வெளியிட்டுள்ளார்.
மஞ்சுஶ்ரீ தபா | |
---|---|
மஞ்சுஶ்ரீ தபா | |
பிறப்பு | 1968 காட்மாண்டு, நேபாளம் |
தொழில் | எழுத்தாளர் |
தேசியம் | கனடா |
காலம் | 1989 - முதல் |
வகை | நாவல், சிறுகதைத் தொகுப்பு, கட்டுரை |
குறிப்பிடத்தக்க படைப்புகள் | காட்மாண்டுவே மற(2005) வரலாற்றின் போதகர்(2001) பறக்கும் தறுவாயில்(2010) |
குடும்பத்தினர் | Dr. பேக் பஹதூர் தபா (தந்தை), பாஸ்கர் தபா (சகோதரர்) |
இணையதளம் | |
www |
குடும்பம்
தொகுமஞ்சுஶ்ரீ தபா அவர்கள் 1968 ஆம் ஆண்டு நேபாளத்தில் உள்ள காட்மாண்டுவில் பிறந்தார். பேக் பகதூர் தபா மற்றும் ரீட்டா தபா இவரின் பெற்றோர்கள் ஆவர். இவரின் தந்தை நேபாள நாட்டின் முன்னாள் நிதி அமைச்சராகவும், வெளியுறவு துறை அமைச்சராகவும் மற்றும் இந்தியா, அமெரிக்க ஐக்கிய நாடுகளுக்கான நேபாள தூதரக அதிகாரியாக பணியாற்றினார். இவரின் தாயார் ரீட்டா தபா ஒரு பொது சுகாதார நிபுணத்துவ மருத்துவர் ஆவார். இவருக்கு பாஸ்கர தபா என்ற மூத்த சகோதரரும் தேஜ்ஶ்ரீ தபா என்ற மூத்த சகோதரியும் இருக்கின்றனர். தேஜ்ஶ்ரீ பெல்ஜியம் நாட்டில் வசித்துவருகிறார். பாஸ்கர தபா ஒரு பொறியியல் நிபுணர் ஆவார்.
சுயசரிதை
தொகுஇவர் நேபாளம், கனடா மற்றும் அமெரிக்காவில் வளர்ந்தவர். பின்னாளில் இவர் ஓர் ஆங்கில எழுத்தாளரானார். வடிவமைப்பு துறைக்கான ரூடு தீவு கல்விநிலையத்தில் புகைப்பட துறையில் இளங்கலை பட்டம் பெற்று தனது படைப்புகளை தொடங்கினார். 1992 ஆம் ஆண்டு தனது முதல் படைப்பான உடைந்த துண்டின் என்ற நூல் ஆகும். 2001 ஆம் ஆண்டில் தனது நாவலான வரலாற்றின் போதகர் என்ற படைப்பை வெளிட்டார். பின்னர் புகைப்படத் துறையில் முதுகலை பட்டம் பெற்றார். தன் முதுகலை படிப்புக்காக சியாட்டில் உள்ள வாசிங்டன் பல்கலைக்கழகத்தில் படைப்பு எழுதும் திட்டத்திற்கான ஆய்வறிக்கை செய்து முடித்தார். இந்திர பகதூர் ராய் என்ற இந்திய-நேபாள எழுத்தாளரின் படைப்பான இன்று ஒரு திருவிழாவை மொழிபெயர்ப்பு செய்தார். அமெரிக்காவின் நியுயார்க் நகரை தலைமை இடமாகக் கொண்டு இயங்கும் அமெரிக்க எழுதுகோள் (ஆங்கிலம்:PEN AMERICA) நிறுவனம் குறிப்பிடத்தக்க இலக்கிய மொழிபெயர்ப்பாளருக்கான ஊக்கத்தொகை இம் மொழிபெயர்ப்புக்கு வழங்கியது.[2] 2005 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட படைப்பான காட்மாண்டுவே மற: ஜனநாயகத்திற்கான ஒரு இரங்கற்பா என்ற நூலினால் இவர் மிகவும் அறியப்படுகிறார். 2006 ஆம் ஆண்டு இப் படைப்புக்கு ஜெர்மனிநாடாடின் பெர்லின் நகயில் எழுத்துக்கான அலைசிஸ் விருது வழங்கப்பட்டது.[3]
இந்நூல் வெளியீட்டுக்குப் பின் நாட்டைவிட்டு வெளியேறினார் ஆட்சிக்கவிழ்ப்புக்கு எதிராக எழுதினார். 2007 ஆம் ஆண்டில் புதைக்கப்பட்ட பூமி என்ற சிறுகதை தொகுப்புகளை உருவாக்கினார். 2009 ஆண்டு நேபாள சுற்றுசூழலியலாளர் பற்றிய சுயசரிதையை வெளியிட்டார். 2010 ஆம் ஆண்டு பறக்கும் தறுவாயில் என்ற நாவலை வெளியிட்டார். 2011 ஆம் ஆண்டு தனது நூற்பு சேகரிப்பான வாழ்க்கையை நாம் இழந்துவிட்டோம் : நேபாளத்தின் கட்டுரைகள் மற்றும் கருத்துகள் என்ற படைப்பை வெளியிட்டார். இவரது அன்மைகால படைப்பு 2016 ஆம் ஆண்டு தெற்காசியாவில் வெளியிடப்பட்டது. இது நம் சொந்த வாழ்வில் நம் அனைவருக்கும் என்ற நாவல் ஆகும்.
மேலும் மஞ்சுஶ்ரீ தபா அமெரிக்காவின் ஆங்கில நாளிதழான த நியூயார்க் டைம்ஸ் பத்திரிகையின் ஒரு திறந்த பதிப்பாளராகவும் எழுத்தாளராகவும் தனது பங்களிப்பை வழங்கிவருகிறார்.[4][5]
மேற்கோள்கள்
தொகு- ↑ Kathmandu Centre for Social Research and Development. Nepal Studies (2005). Studies in Nepali history and society. Mandala Book Point. p. 459. பார்க்கப்பட்ட நாள் 5 April 2011.
ஆங்கில பதிப்பு
- ↑ "2017 PEN America Literary Awards Winners - PEN America" (in en-US). PEN America. 2017-03-27 இம் மூலத்தில் இருந்து 2017-08-02 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20170802211202/https://pen.org/2017-pen-literary-awards-winners/.
- ↑ "Forget Kathmandu: An Elegy for Democracy". openDemocracy. 2006-09-15. பார்க்கப்பட்ட நாள் 2012-07-15.
- ↑ Thapa, Manjushree (22 February 2011). "Nepal's Stalled Revolution". The New York Times. https://www.nytimes.com/2011/02/23/opinion/23thapa.html.
- ↑ Thapa, Manjushree. "Waiting at the Top of the World". Waiting at the Top of the World. New York Times. பார்க்கப்பட்ட நாள் 22 May 2016.
புற இணைப்புகள்
தொகு- Manjushree Thapa's website பரணிடப்பட்டது 2018-12-05 at the வந்தவழி இயந்திரம்.
- http://www.bookslut.com/features/2014_10_020904.php பரணிடப்பட்டது 2019-10-20 at the வந்தவழி இயந்திரம்