மடாயி காவு என்பதானது திருவற்காடு பகவதி கோயில் என்று அழைக்கப்படுகின்ற, கேரளாவின் அனைத்து பத்ரகாளி கோயில்களுக்கும் தாய்க்கோயில் ஆகும். இது, இந்தியாவின் கேரள மாநிலத்தில் உள்ளது. மூலவரான பத்ரகாளி இங்கு உக்கிர வடிவில் உள்ளார். இதனால் பகவதியை அங்குள்ள தந்திரிகள் இவரை திருவற்காடு ஆச்சி என்று அழைக்கின்றனர். இக்கோயில் மலபார் தேவசம் போர்டு நிர்வாகத்தின்கீழ் உள்ளது. இது முன்னர் சிரக்கல் தேவஸ்வத்தின் கோயிலாகவும், தொடர்ந்து சிரக்கல் அரச குடும்பத்தின் புனிதத் தலமாகவும் இருந்து வருகிறது. இக்கோயில் பையங்காடியில் மடாய் அமைந்துள்ளதால், இது மடாய் காவு என்று அழைக்கப்படுகிறது.

மடாயி காவு திருவற்காடு பகவதி கோயில்
திருவற்காடு பகவதி கோயிலின் முன்புறத்தில் அரயல் தரை. மலையாளத்தில் அரையல் என்பது போதி மரத்தை ஒத்தது.

ஆடைக்கான நெறிமுறை

தொகு
  • ஆண்கள்: பாரம்பரிய முண்டு அனுமதிக்கப்படுகிறது. கருவறைக்குள் லுங்கி, சட்டை, பனியன் அணிய அனுமதி இல்லை.
  • பெண்கள்: சல்வார் கமீஸ், சேலை, செட் முண்டு, பாவாடை, ரவிக்கை அனுமதிக்கப்படுகிறது. ஜீன்ஸ் அணிய அனுமதி இல்லை.

பெயர்க்காரணம்

தொகு

இக்கோயில் திருவற்காடு பகவதி என்று அழைக்கப்படுகிறது, தமிழில் - மணிப்பிரவாள நடையில் சிவனை அழைக்க திருவார் என்பர். அது மரியாதைக்குரிய ஒன்றாகும். இப்பகுதியில் உள்ள சில சன்னதிகளின் கட்டிடக்கலை அமைப்புகள் மூலமாக இப்பகுதியில் தேவி எவ்வாறு உணரப்படுகிறாள் என்பதை உணர்த்துகின்றன. அன்னபூர்ணேசுவரி கோயில், மாடாய்க்காவு போன்ற கோயில்களில் அதிகமானவ பிராமணத் தாக்கத்தைக் பண்டைய காலத்தில் பிராமணப் பெண்கள், சிட்-அவுட்டில் முகத்தைக் காட்ட அனுமதிக்கப்படவில்லை. அவர்கள் பெரும்பாலும் தங்கள் வீட்டிற்குள்ளேயே இருந்தார்கள். இதனைக் குறிக்கும் விதத்தில் கேரளப்பிராமணர்கள் அவர்களைஅந்தர்ஜனம் என்று அழைக்கப்பட்டனர். தேவி பிராமணத் தாயாகக் கருதப்படுகிறாள். ஆதலால், கோயில் நுழைவு வாயிலை எதிர்கொண்டு அமையவில்லை. அவரின் கருவறையானது சன்னதி உள்ளே அமைந்துள்ளது. முன் நுழைவாயிலின் வழியே உள்ளே நுழையும் போது பார்க்கக்கூடிய சன்னதியாக சிவனின் சன்னதி உள்ளது. அதற்கு மற்றொரு காரணம் அது தாந்திரீயக் கோயில் கட்டிடக்கலைப் பாணியிலமைந்த ருருஜித் விதானம் ஆகும். அன்னபூர்ணேசுவரி கோவிலின் முன் நுழைவாயிலில் கிருஷ்ணரின் சன்னதி உள்ளது. ஆதலால்தான் இக்கோயில் அம்மனின் பெயரைவிட சிவன் பெயரால் அறியப்படுகிறது. திருவற்காடு என்றால் இறைவனின் காடு என்று பொருளாகும்.[1]

புராணம்

தொகு

இக்கோயிலின் தோற்றம் பற்றி பல்வேறுவிதமான நாட்டுப்புறக் கதை வழக்காறுகள் உள்ளன. இராஜராஜேசுவரர் கோயிலில் பகவதியான மடைக்காவிளம்மை தங்கியிருந்ததாக ஒரு புராணத்தில் கூறப்பட்டுள்ளது. ஆனால், அவர் அசைவமாக இருந்ததால், சிவன் கோயிலில் இருக்க முடியவில்லை. அவர் தனக்காக ஒரு தனி சன்னதியைக் கட்டும்படி அப்பகுதியின் அப்போதைய அரசனுக்கு கட்டளையிட்டார்.

 
சரசுவதி மண்டபம்

மற்றொரு புராணக்கதையில், நீண்ட காலத்திற்கு முன்பு மடாய்க்கு தாரிகா என்ற அரக்கன் தொந்தரவு செய்தான். மடாயிகாவிலம்மா அவனைக் கொன்று, சிவனிடம், அருகில் தனக்கு ஒரு சன்னதி அமைத்துத்தரும்படி வேண்டினார். சிவபெருமான் தனது சீடரான பரசுராமரிடம் சக்திக்காக ஒரு சன்னதியை அமைக்க கட்டளையிட்டார். பரசுராமர் மடைப்பாறையையும் அதன் மீது புனித சன்னதியையும் உருவாக்கினார்.[2]

வரலாறு

தொகு

சுமார் 1780 இல் ஹைதர் அலி மலபாருக்குள் ஊடுருவியபோது, மடாய்காவுவில் பெரும்பாலான இடங்கள் கால்நடைகளின் வெட்டப்பட்ட குடல்களால் இழிவுபடுத்தப்பட்டன. அப்போது உள்ளூர் நாயர் வீரரான வெங்கையில் சாத்துக்குட்டி அந்தச் செயலுக்குக் காரணமான குற்றவாளியின் தலையை துண்டித்து, துண்டிக்கப்பட்ட தலையை கோயில் அலுவலர்களிடம் ஒப்படைத்தார். இதுவே வேங்கையில் நாயர் குடும்பம் நாயனார் பட்டம் பெறக் காரணமாக அமைந்தது.[3]

வழிபாடு

தொகு

கட்டுமடம் ஈசானன் நம்பூதிரிப்பாட் சன்னதியின் தந்திரி (தலைமை அர்ச்சகர்) ஆவார். கேரளாவில் உள்ள பிராமண குடும்பங்களின் நான்கு முக்கிய மந்திரவாத குலங்களில் கட்டுடமும் ஒன்றாகும்.[4]

இக்கோயிலின் சடங்குகள் கௌல விதிமுறைகளைப் பின்பற்றுகின்ற பிராமணர்களால் செய்யப்படுகின்றன. அதில் உள்ள அஷ்டபாஷாக்கள் தியானத்தில் முக்கியமானவையாகும். ஒரு பக்தன் இவற்றைக் கட்டுப்படுத்த முடிந்தால், பகவதி ஆசீர்வதித்து, அதனை சிவனுக்கு உணர்விப்பார் என மக்கள் நம்புகின்றனர்.[5] கோயிலின் முக்கிய திருவிழா மார்ச் மாதம் பூரத்தில் நடைபெறுகிறது. மீனத்தில் பூரம் தவிர மலையாள மாதங்களான துலாம், விருச்சிகம், மகரம் ஆகிய மாதங்களிலும் திருவிழாக்கள் நடைபெறுகின்றன. பெரும்காளியாட்டம் என்பது மலையாள மாதமான இடவத்தைக் குறிக்கும்.[6]

இங்கு சிவன் சன்னதி கிழக்கு நோக்கியும், பத்ரகாளி சன்னதி மேற்கு நோக்கியும் உள்ளது. கோயிலின் ஒரு குறிப்பிட்ட அம்சமாக கோழி கலசத்தைக் கூறலாம்.இது அம்மனுக்கு கோழி பலியிடுவது உயர்வாகக் கொண்டாடப்படுகிறது.[7][8]

மேலும் பார்க்கவும்

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. "Thayi paradevata". பார்க்கப்பட்ட நாள் 18 August 2013.
  2. "Legend". Archived from the original on 22 September 2013. பார்க்கப்பட்ட நாள் 18 August 2013.
  3. "MadayiKavu". Archived from the original on 22 September 2013. பார்க்கப்பட்ட நாள் 18 August 2013.
  4. ""Manthravaadam" (Conjuration / Sorcery)". பார்க்கப்பட்ட நாள் 14 August 2013.
  5. "The Ashta Paasha (8 chains)". பார்க்கப்பட்ட நாள் 18 August 2013.
  6. "Madayi Kavu". Archived from the original on 6 டிசம்பர் 2013. பார்க்கப்பட்ட நாள் 18 August 2013. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  7. "Madayi Kavu Bhagwathi temple - Hindupedia, the Hindu Encyclopedia". பார்க்கப்பட்ட நாள் 31 December 2018.
  8. "Comment jar: കമന്റു ഭരണി: മാടായി കാവ് Madayi Kavu". பார்க்கப்பட்ட நாள் 18 August 2013.
"https://ta.wikipedia.org/w/index.php?title=மடாயி_காவு&oldid=4108743" இலிருந்து மீள்விக்கப்பட்டது