மடிகொண்டா (Madikonda) என்பது இந்தியாவின் தெலுங்கானாவில் உள்ள வாரங்கல்லின் அருகிலுள்ள பகுதியாகும். இது ஐதராபாத்து வாரங்கல் தேசிய நெடுஞ்சாலை 163இல் (இந்தியா) வாரங்கல் அருகே அமைந்துள்ளது. 2011 ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின்போது, கிராமப்புற பகுதியாக இருந்த மடிகொண்டா, வாரங்கல் நகர்ப்புற கூட்டமைப்பில் முழுமையாக வளர்ச்சியடைந்த பகுதியாக வகைப்படுத்தப்பட்டு, பெருநகர வாரங்கல் மாநகராட்சியின் ஓர் பகுதியாக மாறியுள்ளது.

மடிகொண்டா
மடிகொண்டா is located in தெலங்காணா
மடிகொண்டா
மடிகொண்டா
தெலங்காணா, இந்தியா
மடிகொண்டா is located in இந்தியா
மடிகொண்டா
மடிகொண்டா
மடிகொண்டா (இந்தியா)
ஆள்கூறுகள்: 17°57′41″N 79°29′09″E / 17.961487°N 79.485891°E / 17.961487; 79.485891
நாடு இந்தியா
மாநிலம்தெலங்காணா
மாவட்டம்வாரங்கல்
அரசு
 • நிர்வாகம்பெருநகர வாரங்கல் மாநகராட்சி
மொழி
 • அலுவல்தெலுகு
நேர வலயம்ஒசநே+5:30 (இ. சீ. நே.)
வாகனப் பதிவுTS
இணையதளம்telangana.gov.in

கலாச்சாரம்

தொகு

மடிகொண்டாவில் நான்கு வரலாற்று முக்கியத்துவமுடைய கோயில்கள் உள்ளன. இவை சிவன் கேசவ கோயில், வேணு கோபாலசாமி கோயில், அனுமங்கி மற்றும் மேட்டு இராம லிங்கேசுவர சுவாமி கோயில்.

மேட்டு குட்டாவில் மேட்டு இராம இலிங்கேசுவர சுவாமி கோயில் உள்ளது. இங்கு இரண்டு கோயில்கள் உள்ளன - ஒன்று சிவன் கோயில் மற்றொன்று சிறீ இராமன் கோயில். வாரங்கலில் உள்ள முக்கிய ஆன்மீக சுற்றுலா சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாக இதனை மாநில அரசு உருவாக்கியுள்ளது.[1]

பொருலாதாரம்

தொகு

தகவல் தொழில்நுட்ப சிறப்புப் பொருளாதார மண்டலம் தெலுங்கானா அரசால் மடிகொண்டாவில் நிறுவப்பட்டுள்ளது. [2]

வாரங்கல்லில் உள்ள சியண்டின் 70,000 சதுர அடி அதிநவீன தொழில்நுட்ப மேம்பாட்டு மையத்தின் ஒரு பகுதியாக, இந்நிறுவனம் தனது செயல்பாடுகளைத் தெலுங்கான மாநில தொழில்துறை உள்கட்டமைப்புக் கழகத்தின் அடைகாக்கும் மையத்தில் நிறுவியுள்ளது.[3] [4]

மேற்கோள்கள்

தொகு
  1. http://www.thehindu.com/news/national/telangana/big-plans-on-tourism/article7522190.ece
  2. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2018-09-06. பார்க்கப்பட்ட நாள் 2020-12-12.
  3. "Cyient begins operations in Warangal". The Hindu. 24 January 2017. https://www.thehindu.com/news/national/telangana/Cyient-begins-operations-in-Warangal/article17082587.ece. பார்த்த நாள்: 12 November 2018. 
  4. http://www.business-standard.com/article/pti-stories/it-incubation-centre-inaugurated-in-warangal-116021900844_1.html
"https://ta.wikipedia.org/w/index.php?title=மடிகொண்டா&oldid=3566195" இலிருந்து மீள்விக்கப்பட்டது