மட்காய் (Madkai) என்பது இந்தியாவின் கோவா மாநிலத்தில் வடக்கு கோவா மாட்டத்தில் போண்டா வட்டத்தில் உள்ள ஒரு நகரமாகும். [1] அதன் குடியிருப்பாளர்கள் பலருக்கு காமத் என்ற கடைசி பெயர் உள்ளது, மேலும், இவர்கள் இந்து கவுட் சாரஸ்வத் பிராமண சமூகத்தைச் சேர்ந்தவர்கள்.

மட்காய்
மார்காய்ம்
கிராமம்
ஆள்கூறுகள்: 15°25′23″N 73°57′04″E / 15.4230481°N 73.9511311°E / 15.4230481; 73.9511311
நாடு இந்தியா
மாநிலம்கோவா (மாநிலம்)
மாவட்டம்வடக்கு கோவா
மக்கள்தொகை
 (2011)
 • மொத்தம்6,215
இனம்Indian
Languages
 • Officialகொங்கணி
நேர வலயம்ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்)
அஞ்சல் குறியீட்டு எண்
403404
வாகனப் பதிவுGA
இணையதளம்goa.gov.in
[1]

இங்குள்ள நவ்துர்கா கோயில் பிரபலமான ஒன்றாகும். தெய்வத்தின் சிலை சாய்ந்த தலையைக் கொண்டுள்ளது, இங்கு ஒவ்வொரு ஆண்டும் கார்த்திகை மாத சுக்கில பட்ச அஷ்டமியன்று (நவம்பர் மாதத்தில்) "ஜத்ரா" என்று அழைக்கப்படும் ஆண்டு விழாவை நடத்தப்படுகிறது.

நவ்துர்கா கோயில் நுழைவு வாயில் (1950 கள்)

தேவி நவதுர்கா பிரதிஷ்டான் உறுப்பினர்கள் (கிராமவாசிகள்) கோயிலில் இருந்து பொருள்களை எடுத்து ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு மாற்றியதாக குற்றம் சாட்டி மகாஜன்கள் (கோயில் நிர்வாகம்) கோவா உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள சட்ட வழக்கினாலும் இந்த கோயில் புகழ் பெற்றது. [2]

மேற்கோள்கள்

தொகு
  1. Madkai on wikimapia
  2. "Court modifies order on articles for Marcaim's temple". The Goan EveryDay. 2 December 2018. http://englishnews.thegoan.net/story.php?id=47287. பார்த்த நாள்: 6 December 2018. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=மட்காய்&oldid=3103072" இலிருந்து மீள்விக்கப்பட்டது