மட்டியாரி மாவட்டம்
மட்டியாரி மாவட்டம் (Matiari District) (சிந்தி மொழி: ضِلعو مٽیاري) தெற்காசியாவின் பாகிஸ்தான் நாட்டின் சிந்து மாகாணத்தின் ஐதராபாத் கோட்டத்தின் ஆறு மாவட்டங்களில் ஒன்றாகும். இம்மாவட்டத் தலைமையிடம் மட்டியாரி நகரம் ஆகும். இம்மாவட்டம் 2005-ஆம் ஆண்டில் ஐதராபாத் மாவட்டத்தின் மூன்று தாலுக்காக்களைக் கொண்டு துவக்கப்பட்டது.[2]
மட்டியாரி மாவட்டம்
ضِلعو مٽیاري | |
---|---|
மாவட்டம் | |
சிந்து மாகாணத்தில் மட்டியாரி மாவட்டத்தின் அமைவிடம் | |
நாடு | பாகிஸ்தான் |
மாகாணம் | சிந்து மாகாணம் |
நிறுவிய ஆண்டு | 2005 |
தலைமையிடம் | மட்டியாரி நகரம் |
பரப்பளவு | |
• மொத்தம் | 1,417 km2 (547 sq mi) |
மக்கள்தொகை (2011est.)[1] | |
• மொத்தம் | 7,38,322 |
நேர வலயம் | ஒசநே+5 (பாக்கிஸ்தான் சீர் நேரம்) |
தாலுக்காக்கள் | 3 |
இணையதளம் | http://www.matiari.net/ |
பெயர்க் காரணம்
தொகுகுளிர்ந்த நீருக்கு பயன்படும் பானை செய்வதற்கு தேவையான களிமண், நீர் மற்றும் குயவர் ஆகியவற்றை குறிக்க மட் - யாரி எனும் இரண்டு சொல்லின் சேர்கையே மட்டியாரி ஆகும்.
மாவட்ட நிர்வாகம்
தொகு1,417 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட மட்டியாரி மாவட்டம் ஹலா, மட்டியாரி மற்றும் சகீதாபாத் என மூன்று வருவாய் வட்டங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது.[3]
மக்கள் தொகையியல்
தொகு2011-ஆம் ஆண்டின் மக்கள் தொகை மதிப்பீட்டின் படி, மட்டியாரி மாவட்டத்தின் மக்கள் தொகை 7,38,322 ஆகும். 1998-ஆம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, இம்மாவட்டத்தில் சிந்தி மொழியை 91.75% மக்களும், 3.61% மக்கள் உருது மொழியையும் பேசினர். பிறர் பஞ்சாபி மொழி, பலூச்சி மொழி, சிராய்கி மொழி, மார்வாரி மொழிகளையும் பேசினர்.
மேற்கோள்கள்
தொகு- ↑ "Sindh population surges by 81.5 pc, households by 83.9 pc". Thenews.com.pk. 2 April 2012 இம் மூலத்தில் இருந்து 2015-10-17 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20151017232747/http://www.thenews.com.pk/Todays-News-13-13637-Sindh-population-surges-by-81.5-pc,-households-by-83.9-pc. பார்த்த நாள்: 2016-12-26.
- ↑ "District Profile: Upper Sindh - Matiari". Archived from the original on 2013-06-24. பார்க்கப்பட்ட நாள் 2017-01-29.
- ↑ "NRB: Local Government Elections". nrb.gov.pk. Archived from the original on 26 மார்ச் 2012. பார்க்கப்பட்ட நாள் 27 January 2012.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help)
ஆதாரம்
தொகு- 1998 District census report of Hyderabad. Census publication. Vol. 59. Islamabad: Population Census Organization, Statistics Division, Government of Pakistan. 1999.
வெளி இணைப்புகள்
தொகு