மட்டை அரிசி

MATTA RICE

கேரளா மட்டை அரிசி (ரோசுமட்டை அரிசி, பாலக்காடு மட்டை அரிசி, அரிசி அல்லது சிவப்பு அரிசி என்றும் அறியப்படுகிறது) (மலையாளம்: കേരള മട്ട) என்பது கேரளாவின் பாலக்காடு மாவட்டத்தில் விளையும் நெல் வகை ஆகும்.[1] இது பழுப்பு அரிசியில் இருந்து வேறுபட்டது. கேரளா மற்றும் கர்நாடகாவிலும், இந்தியா மற்றும் இலங்கையின் கரையோரங்களில் இது பிரபலமாக உள்ளது. இது இட்லி, ஆப்பம் மற்றும் அரிசி சாதம் என பல வகைகளில் உணவுக்காக வழக்கமாகப் பயன்படுத்தப்படுகிறது. சிவப்பு அரிசியின் வலுவான மண் வாசனையானது இதனை ஆட்டிறைச்சி மற்றும் மாட்டிறைச்சியுடன் உண்பதற்கு ஏற்றதாக ஆக்குகிறது.[2][3]

மட்டை அரிசி

தோற்றம்

தொகு

கேரளா மட்டை அரிசி அதன் தனித்துவமான சுவை காரணமாக வரலாற்றுப் புகழ் பெற்றுள்ளது. முறுக்கு போன்ற அரிசித் திண்பண்டங்களை தயாரிக்க இது பயன்படுத்தப்படுகிறது.[4] 1966ம் ஆண்டு சிரீ பி.சி. சகாதேவன் என்பவரால் எழுதப்பட்ட "கேரளாவின் அரிசி" என்ற நூல் கேரள அரசால் வெளியிடப்பட்ட பிறகே "கேரளா மட்டை அரிசி" என்று அழைக்கப்பட்டது. திருக்குறள் போன்ற தமிழ் இலக்கியங்களிலும் இந்த அரிசி பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது.[சான்று தேவை] சேர, சோழ ஆட்சிகளின் போது இது அரச உணவாகக் கருதப்பட்டது. உழைக்கும் வர்க்கங்கள் சாமை (ஒரு குறைந்த தானிய வகை) உண்டனர்.

சாகுபடி மற்றும் வணிகம்

தொகு

கேரளா மட்டை அரிசி கருநாடகா, கேரளா போன்ற தென்னிந்திய மாநிலங்களில் வளர்கின்றது. விவசாயிகளுக்கு ஒரு கிலோ நெல்லுக்கு ரூபாய் 300 முதல் 500 வரை கிடைக்கிறது. மட்டை அரிசி மீதான மூன்றாண்டு ஏற்றுமதித் தடை பிப்ரவரி 2011 க்கு பிறகு ஓரளவு நீக்கப்பட்டது. 2011 ஆம் ஆண்டு 25,000 டன்கள் ஏற்றுமதி செய்யப்பட்டது.[5]

பண்புகள்

தொகு

இந்த அரிசி மஞ்சள் நிற இளஞ்சிவப்பு நிறத்துடன், வெளிப்புறம் சிவந்த நிறக்கோடுகளுடன் காணப்படுகிறது. ரோசு மட்டை அரிசி அதன் சிவந்த நிறத்தை அதிகமாகக் கொண்டுள்ளது. மேலும் இது உணவிற்கு தனித்துவமான சுவையை அளிக்கிறது. அனைத்து பழுப்பு மற்றும் புழுங்கல் அரிசிகளைப் போல சிவப்பு மட்டை அரிசியும் வேகவைப்பதற்கு அதிகமான நேரம் மற்றும் அதிக தண்ணீர் தேவைப்படுகிறது.

 
கேரள மட்டை அரிசி / பாலக்காடு மட்டை அரிசி

தனித்தன்மை

தொகு

பாலக்காடு மட்டை அரிசி, பொருட்களின் புவியியல் அடையாளங்கள் (பதிவு மற்றும் பாதுகாப்பு சட்டம்) 1999 இல் பாலக்காடு மட்டை விவசாயிகள் உற்பத்தியாளர் கம்பெனி லிமிடெட் என்ற நிறுவனத்தால் பதிவு செய்யப்பட்டுள்ளது.[6] இது தடிமனான சிவப்புப் புள்ளிகளுடன் கூடிய அரிசி வகை ஆகும்.[6] இந்த அரிசிக்கு தனித்துவமான சுவை உண்டு. அதிக ஊட்டச்சத்துக்கள் நிறைந்த கரடுமுரடான சிவந்த வெளிப்புற அடுக்கு கொண்டது. பாதி வேக வைக்கும் முறையால் அதன் சத்துகள் அதிலேயே தக்க வைக்கப்படுகின்றன. கனமான மண்ணான 60 முதல் 80% களிமண், குறைந்த நீர் குறைந்த ஊடுருவும் திறன், நீரை அதிகமாக தக்க வைக்கும் மண்ணில் வளர்கிறது. சுண்ணாம்பு பாறைகளில் இருந்து உருவான மண்ணில், கருப்பு பருத்தி மண், ரேகர் மண்ணில் வளர்கிறது.  பாலக்காட்டில் உள்ள பூந்தல்படத்தில் உற்பத்தி செய்யப்படுகிறது.

குறிப்புகள்

தொகு
  1. "Recognition for two rice varieties". The Hindu. Archived from the original on 2008-03-21. பார்க்கப்பட்ட நாள் 2019-03-14.
  2. "Travel Thursday #12 – Rosamatta Rice – Puzhukkalari – Chambaavari". A Life (Time) of Cooking.
  3. "Mahanandi". Archived from the original on 2020-01-15. பார்க்கப்பட்ட நாள் 2019-03-14.
  4. "Kerala exporters appeal against rice export ban". Sify.
  5. "Govt lifts export ban on certain rice, onion varieties". The Hindu Business Line. 11 February 2011. http://www.thehindubusinessline.com/industry-and-economy/agri-biz/article1383905.ece#. பார்த்த நாள்: 19 June 2011. 
  6. 6.0 6.1 Kochhar, Sudhir (July 2008). "Institutions and Capacity Building for the Evolution of Intellectual Property Rights Regime in India: IV– Identification and Disclosure of IP Products for their IPR Protection in Plants and Animals". Journal of Intellectual Property Rights (CSIR): 336–343. பன்னாட்டுத் தர தொடர் எண்:0975-1076. http://nopr.niscair.res.in/handle/123456789/1782. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=மட்டை_அரிசி&oldid=3566170" இலிருந்து மீள்விக்கப்பட்டது