மணக்கால் ஐயன்பேட்டை அபிமுகேசுவரர் கோயில்
மணக்கால் ஐயன்பேட்டை அபிமுகேசுவரர் கோயில் தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் காவிரி தென்கரைத் தலங்களில் 92ஆவது சிவத்தலமாகும்.
தேவாரம் பாடல் பெற்ற திருப்பெருவேளூர் அபிமுகேசுவரர் திருக்கோயில் | |
---|---|
பெயர் | |
புராண பெயர்(கள்): | திருப்பெரு வேளூர் |
பெயர்: | திருப்பெருவேளூர் அபிமுகேசுவரர் திருக்கோயில் |
அமைவிடம் | |
ஊர்: | மணக்கால் ஐயன்பேட்டை |
மாவட்டம்: | திருவாரூர் |
மாநிலம்: | தமிழ்நாடு |
நாடு: | இந்தியா |
கோயில் தகவல்கள் | |
மூலவர்: | அபிமுகேசுவரர், பிரியா ஈசுவரர் |
தாயார்: | அபிமின்னாம்பிகை, ஏலவார்குழலம்மை |
தல விருட்சம்: | வன்னி |
தீர்த்தம்: | சரவணப் பொய்கை |
பாடல் | |
பாடல் வகை: | தேவாரம் |
பாடியவர்கள்: | திருஞானசம்பந்தர்,திருநாவுக்கரசர் |
அமைவிடம்
தொகுசம்பந்தர், அப்பர் பாடல் பெற்ற இத்தலம் திருவாரூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது.கும்பகோணம்-குடவாசல், திருவாரூர்ப் பேருந்து சாலையில் மணக்கால் என்ற இடத்தின் அருகே உள்ளது.
சிறப்புகள்
தொகுதிருக்கோயில் உள்ளே வைகுந்த நாராயணப் பெருமாளுக்குத் தனி சந்நிதி உள்ளது. இத்தலத்தில் மோகினி வடிவெடுத்த பெருமாள் இறைவனை வழிபட்டு ஆண்வடிவம் பெற்றார் என்பது தொன்நம்பிக்கை.
வழிபட்டோர்
தொகுபிருங்கி முனிவர், கௌதமர் வழிபட்ட திருத்தலம் [1] சித்தர்களின் பார்வையில் திருப்பெருவேளூர்
பெருவேளூர் பிரியாரைப் போற்றுவார் தமக்கு நாவெழுச்சியாம்
திக்கு சொல் கருகி நிற்ப திக்கலே மணக்க வாழக் காண்பீரே
தன்வந்திரி சித்தர் வன்னித் தலமுடையான் தன் பொய்கை சரவணமாக
அபியமுக்தி நாதனைக் கைத்தொழுவார் பிறவாரே
கோரக்க சித்தர் வள்ளி மணாளனார் தானமர்ந்து தபசு செய்தே
வன்னியாந் தலவிருட் சமேத்தி தந் நாமத்தே பொய்கை புக்கு பெருவேளூரே. 1
அறுமுருகனார் தாம் தபசாற்றி வன்னியோடு தாந் தோற்றிய
சரவண பொய்கை புக்கு கங்கையோடு ஏழவார் குழவிக்கு குழவினானே யடிபணிந்து யருளும் வேலாம் பொருளும் கொள்ள தொழுவார் குறை தீர்த்தே பொருளுமா வாணாளுங் கூட்டு வன் திண்ணமே.
பாமபாட்டிச் சித்தர் குகனாற்றிய பூசாத் தலங்களை யுரைப்ப கீவளு
பெரு வேளூருடனே திருவிடையாஞ் சுழி வைத்தீசனே யென வரிக்கோண வேலாயுதங் கொண்டவித்தலத்தே ஆளுமை யாரிடத் தோதற் பாற்றே.
சட்டை முனிவர் சோமாஸ்கந்த வடிவாய் நின்ற அபினாம்பிகா நாயக
யபிமுக்த தலத்தார் காலத் திரு வடுக பயி ரவணாப் பாடு வாருக்கு சரும வாதை விலகுமே.
சுந்தர நந்தனார் கண்டேன் கலி இருபான் நூறாண்டு கடந்து மனையெலாம்
வாஸ்து தோச முடனே துலங்க பீடை பற்பலவாம் விலகவே வில்லங்க மறுக்கவே சோமாஸ் கந்த வடிவுடை அபினாம்பிகை சரணஞ் செயவே.
அகத்தியர் மும்முறை திங்களதனில் முப் பயிரவரை செம்மலர் கருமலர்
கொண்டேத்த தண்டனை தான் தந்த பஞ்சாயத்தாரும் மாற்றி சாதகஞ் செய்தின் பூட்டுவர் யிது விதியே
அகத்தியர் மாயவனை மன்றாடியே மந்த வாரமேத்த வல் லாருக்கு
மாயமான தனமொடு வடிவழகுங் கலையுஞ் சேருமொன்று மய்யமிலையே.
ராமதேவ சித்தர்
நாவன்மை ஈந்த சரஸ்வதீசனை கொண்டாடி நிற்போருக்கு
ஊமை யூக்கமாய் பாட,கற்ற வித்தையால் பெருமை சேர்க்கலாமே எப் பரீட்சையத் தேர்வுந் தேறலாமே.
பதஞ்சலி முனிவர்
மேற்கோள்கள்
தொகு- ↑ தமிழகச் சிவாலயங்கள்-308; திருமகள் நிலையம்;பக்கம் 231
புகைப்படத்தொகுப்பு
தொகு-
முன் மண்டபம்
-
திருச்சுற்று
-
மூலவர் விமானம்
-
இறைவி விமானம்