மண்டலி வெங்கட கிருஷ்ணராவ்

இந்திய அரசியல்வாதி

மண்டலி வெங்கட கிருஷ்ணா ராவ் (Mandali Venkata Krishna Rao) (ஆகஸ்ட் 4, 1926 - 27 செப்டம்பர், 1997), எம். வி. கிருஷ்ணா ராவ் என்றும் அழைக்கப்படும் இவர்,ஆந்திரப் பிரதேசத்தைச் சேர்ந்த அரசியல்வாதியும் அமைச்சரும் ஆவார். 1975 இல் நடந்த முதல் உலகத் தெலுங்கு மாநாட்டின் தலைமை அமைப்பாளராகவும், ஒருங்கிணைப்பாளராகவும் இருந்தார்.[1][2]

மண்டலி வெங்கட கிருஷ்ணராவ்
మండలి వెంకట కృష్ణారావు
நாடாளுமன்ற உறுப்பினர்
முன்னையவர்சானக புச்சிகோட்டையா
பின்னவர்மண்டலி வெங்கேடச சுவாமி நாயுடு
தொகுதிமச்சிலிப்பட்டிணம்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு4 ஆகஸ்ட் 1926
கைகலூர் வட்டம், ஆந்திரப் பிரதேசம்
இறப்பு27 செப்டம்பர் 1997
அரசியல் கட்சிஇந்திய தேசிய காங்கிரசு
துணைவர்பிரபாவதி தேவி
பிள்ளைகள்2 மகன்கள்,2 மகள்கள்
As of 20 ஆகஸ்ட், 2009

சுயசரிதை

தொகு

மண்டலி என்று அழைக்கப்படும் மண்டலி வெங்கட கிருஷ்ணா ராவ், 1926 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 4 ஆம் தேதி, இந்தியாவின் ஆந்திரப் பிரதேசம், கிருஷ்ணா மாவட்டத்தில் உள்ள கைகலுரு வட்டத்தில் உள்ள பல்லேவாடா கிராமத்தில் பிறந்தார். இவரது தந்தை வெங்கட்ராமையா கிருஷ்ணா மாவட்டத்தில் உள்ள திவி வட்டத்தில் உள்ள பவதேவரப்பள்ளியில் ஒரு பள்ளி ஆசிரியராக இருந்தார். மண்டலி தனது தொடக்கக் கல்வியை பல்லேவாடா மற்றும் பவதேவரப்பள்ளியிலும், உயர்நிலைப் பள்ளிக் கல்வி அவனிகட்டாவிலும், கல்லூரிக் கல்வியை மச்சிலிப்பட்டணத்தில் உள்ள இந்துக் கல்லூரியிலும் பெற்றார்.

அரசியல்

தொகு

இவரது அரசியல் வாழ்க்கை இளம் வயதிலேயேத் தொடங்கியது. வெள்ளையனே வெளியேறு இயக்கத்தின் போது, தேசிய மாணவர் சங்கத்தின் அவனிகட்டா கிளையின் தலைவராகப் பணியாற்றினார். மாபெரும் இயக்கத்திற்குப் பிறகு காங்கிரசு கட்சி தடை செய்யப்பட்டபோது, திவி வட்டத்தின் காங்கிரசு கட்சியின் செயலாளராக கிராமப்புறங்களில் கட்சியை திறம்பட ஒழுங்கமைத்து, அதன் மறைமுக நடவடிக்கைகளில் பங்கேற்றார். 1945ல் மாவட்ட மாணவர் காங்கிரசின் அமைப்புச் செயலாளராக நியமிக்கப்பட்டார். 1948 ஆம் ஆண்டு தில்லியில் நடைபெற்ற ஆசிய மாணவர் மாநாட்டில் அப்போதைய சென்னை மாகாணத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தினார். 1948-52ல் மாவட்ட இளைஞர் காங்கிரசின் தலைவராகப் பணியாற்றினார். இவர் 1953-56 இல் கிருஷ்ணா மாவட்ட காங்கிரசு கட்சியின் செயலாளராகவும், 1956-58 இல் அகில இந்திய காங்கிரசு கட்சியின் இணைச் செயலாளராகவும் இருந்தார். தனது பிரதேச காங்கிரசு கட்சியின் ஆக்கபூர்வமான பணிக்குழு மற்றும் நிலக்கொடை இயக்கக் குழுவின் அழைப்பாளராகவும் பணியாற்றினார். இவர் 1957 இல் மச்சிலிப்பட்டணம் தொகுதியில் இருந்து மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார் மற்றும் 1957-62 வரை நாடளுமன்றத்தில் பணியாற்றினார்.

கௌரவங்கள்

தொகு

கிருஷ்ணா ஆற்றின் மீது புலிகடா-பெனுமுடி இடையே உள்ள சாலைப் பாலத்திற்கு இவரது பெயரிடப்பட்டது. இது 28 மே 2006 அன்று முதல்வர் எ. சா. ராஜசேகர ரெட்டியால் பொதுமக்களுக்கு திறந்து வைக்கப்பட்டது.[3]

“மண்டலி வெங்கட கிருஷ்ணா ராவ் கலாச்சார விருது” 2007 இல் நிறுவப்பட்டது. முதல் முறையாக மலேசிய தெலுங்குச் சங்கத்தின் நிறுவனர் பொதுச் செயலாளர் மதினி சோமா நாயுடுவுக்கு வழங்கப்பட்டது.[4]

மேற்கோள்கள்

தொகு
  1. Cohen, Stephen P.; C. V., Raghavulu (1979). The Andhra Cyclone of 1977: Individual and Institutional Responses to Mass Death (in ஆங்கிலம்). Vikas. p. 101. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-7069-0765-0.
  2. B. Prabhakara Sarma (2012-12-06). "World Telugu Conference: Then and now". The Hindu. பார்க்கப்பட்ட நாள் 2013-02-03.
  3. "Archive News – The Hindu". Hinduonnet.com. Archived from the original on 12 July 2007. பார்க்கப்பட்ட நாள் 2016-12-01.{{cite web}}: CS1 maint: unfit URL (link)
  4. "Archive News". The Hindu. Archived from the original on 2018-06-29. பார்க்கப்பட்ட நாள் 2016-12-01.

3

  • Manava Manikyam(by Dr. Gandham Subba rao)
  • Telugu jathi Sphurthipradhatha(by Buddiga Subbarayan,published by Potti Sreeramulu Telugu University)
  • Man with Mission Mandali Venkata Krishna Rao(by Govindaraju Ramakrishna Rao,published by Potti Sreeramulu Telugu University)
  • 20th Century Luminaries, Potti Sreeramulu Telugu University, Hyderabad, 2005.