மண்டா
மண்டா (Manda), இந்தியாவின் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் ஜம்மு மாவட்டத்தில் உள்ள சிந்துவெளி நாகரிக கால தொல்லியல் மேடு அமைந்த கிராமம் ஆகும்.
மண்டா मांदा | |
---|---|
இருப்பிடம் | மண்டா, ஜம்மு காஷ்மீர், இந்தியா |
பகுதி | இந்தியா |
ஆயத்தொலைகள் | 32°56′00″N 74°48′00″E / 32.93333°N 74.80000°E |
வகை | தொல்லியல் களம் |
பகுதி | சிந்துவெளி நாகரிகம், மௌரியப் பேரரசு மற்றும் குசானப் பேரரசு |
வரலாறு | |
கட்டப்பட்டது | கிமு 400 [1][2] |
பயனற்றுப்போனது | 300A.D [2] |
காலம் | கிமு 2350 - கிமு 1750 (சிந்துவெளி நாகரிகம்) (மௌரியப் பேரரசு)[2]கிபி 78-200 (குசான் பேரரசு)[3] |
பகுதிக் குறிப்புகள் | |
அகழாய்வு தேதிகள் | 1976-77 |
அகழாய்வாளர் | ஜெ. பி. ஜோஷி |
நிலை | சிதிலமடைந்துள்ளது |
இந்தியத் தொல்லியல் ஆய்வகம் 1976-77 ஆண்டுகளில் மன்டா கிராமத்தின் தொல்லியல் மேட்டை அகழாாய்வு செய்த போது சிந்துவெளி நாகரீகக் கால தொல்பொருட்கள் கிடைத்தது.[4]
அகழ்வாய்வு
தொகுமண்டா தொல்லியல் மேட்டை அகழ்வாய்வு செய்த போது, மூன்று கால கட்ட நாகரீகங்களின் தொல்பொருட்கள் கிடைத்தது.[5] குசான் பேரரசிற்குப் பின்னர் இத்தொல்லியல் களம் சிதிலமடைந்ததது.[4]
வரலாற்று முக்கியத்துவம்
தொகுபிர் பாஞ்சல் மலைத்தொடரின் அடிவாரத்தில் பாயும் செனாப் ஆற்றின் கரையில் அமைந்த மாண்டா கிராமம், ஜம்மு நகரத்திற்கு வடமேற்கே 28 கிமீ தொலைவில் உள்ளது. மன்டா கிராமத்தின் அகழ்வாய்வு மூலம் கிடைத்த தொல்லியல் எச்சங்களைக் கொண்டு இக்கிராமம் சிந்துவெளி நாகரீகத்தின் வடக்கில் அமைந்த பகுதி என அறிய முடிகிறது.[6][7][8][9][10][11]
தொல்பொருட்கள்
தொகுமண்டா தொல்லியல் களத்தில் கிடைத்த முந்தைய அரப்பா நாகரிகக் காலத்திய தொல்பொருட்களில் குடுவைகள், தட்டுகள், கோப்பைகள், சுடுமண் வளையல்கள், படிவுப் பாறை ஆயுதங்கள், செப்புப் பாத்திரங்கள் உள்ளிட்ட சிவப்பு மட்பாண்டங்கள் கிடைத்துள்ளது. [4]இங்கு முதிர்ந்த அரப்பா காலத்திய சிந்துவெளி எழுத்துக்கள் கூடிய மட்பாண்டங்கள் மற்றும் முடிவுறாத முத்திரை ஒன்று கிடைத்துள்ளது.[4]
இதனையும் காண்க
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ Kumar, Sudershan (2012). "Akhnoor and Indus Valley Civilization" (in English). Daily Excelsior.
{{cite web}}
: Cite has empty unknown parameter:|1=
(help)CS1 maint: unrecognized language (link) - ↑ 2.0 2.1 2.2 KUSHANA SETTLEMENTS AND THEI R MATERIAL CULTURE (PDF). p. 162.
- ↑ Higham, Charles (2014-05-14). Encyclopedia of Ancient Asian Civilizations (in ஆங்கிலம்). Infobase Publishing. p. 212. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9781438109961.
- ↑ 4.0 4.1 4.2 4.3 Indian Archaeology 1976-77, A Review. Archeologival Survey of India, New Delhi.1980. Page 19-21. ASI
- ↑ Archaeological Survey of India
- ↑ Kumar, Sudershan (2012). "Akhnoor and Indus Valley Civilization" (in English). Daily Excelsior.
{{cite web}}
: Cite has empty unknown parameter:|1=
(help)CS1 maint: unrecognized language (link) - ↑ Higham, Charles (2014-05-14). Encyclopedia of Ancient Asian Civilizations (in ஆங்கிலம்). Infobase Publishing. p. 212. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9781438109961.
- ↑ Shinde, Vasant (Feb 1, 2016). "Harappan Civilization: Current Perspective and its Contribution – By Dr. Vasant Shinde". Origin and Extent.
- ↑ Roy, T.N (1984). The Concept, Provenance and Chronology of Painted Grey Ware (in English). Vol. 34. Istituto Italiano per l'Africa e l'Oriente (IsIAO). pp. 127–137.
{{cite book}}
: CS1 maint: unrecognized language (link) - ↑ Pokharia, Anil K,Jeewan Singh Kharakwal,Alka Srivastava. Archaeobotanical evidence of millets in the Indian subcontinent with some observations on their role in the Indus civilization (PDF). Journal of Archaeological Science 42 (2014). p. 442-455.
{{cite book}}
: Cite has empty unknown parameter:|1=
(help)CS1 maint: multiple names: authors list (link) - ↑ McIntosh, Jane.(2008) The Ancient Indus Valley, New Perspectives. ABC-CLIO.Page 209,412