மண்வாசனை (தொலைக்காட்சித் தொடர்)

பலிக்க வது என்பது ஒரு இந்தி மொழி தொலைகாட்சித் தொடர் ஆகும். இந்த தொடர் சூலை 21, 2008 முதல் சூலை 31, 2016 வரை கலர்ஸ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி 2,245 அத்தியாங்களுடன் நிறைவு பெற்றது.

பலிக்க வது
மண்வாசனை
வகைநாடகம்
எழுத்துபுர்னேண்டு சேகர்
கஜ்ரா கோத்தாரி
ராஜேஷ் டுபெய்
உஷா டிக்சிட்
ரகுவீர் டோமகோல
மனிஷா சிங்
கோவிட் குப்தா
ராமன் மனக்கடலே
இயக்கம்சிதார்த் செங்குப்தா
பிரதீப் யாதவ்
நடிப்புஅவிகா கோர்
தோரல் ரஸ்புரா
நாடுஇந்தியா
மொழிஇந்தி
பருவங்கள்2
அத்தியாயங்கள்2,245
தயாரிப்பு
ஓட்டம்ஏறத்தாழ 20-22 நிமிடங்கள்
ஒளிபரப்பு
அலைவரிசைகலர்ஸ் தொலைக்காட்சி
படவடிவம்
ஒளிபரப்பான காலம்21 சூலை 2008 (2008-07-21) –
31 சூலை 2016 (2016-07-31)
வெளியிணைப்புகள்
இணையதளம்

இந்த தொடர் தமிழ் மொழியில் 'மண்வாசனை' என்ற பெயரில் மொழிமாற்றம் செய்யப்பட்டு மே 7, 2012 முதல் திங்கள் முதல் வெள்ளிக் கிழமை வரை இரவு 10 முதல் 10:30 மணி வரை [[[ராஜ் தொலைக்காட்சி]]யில் ஒளிபரப்பாகின்றது. இந்த தொடரை குழந்தை திருமணத்தை மையமாக வைத்து சித்தார்த் சென்குப்தா மற்றும் பிரதீப் யாதவ் இயக்கியுள்ளார்.

கதைச்சுருக்கம் தொகு

ஜெய்சர் கிராமத்தில் ஒரு பணக்கார குடும்பத்தில் கல்யாணி என்ற மூதாட்டி இருந்தார். அவருக்கு பிரசாந்த், பைரவ் என்ற இரு மகன்களும் சுமித்ரா, நித்யா என்ற இரு மருமகள்களும் உள்ளனர். பைரவ்-சுமித்ரா தம்பதிக்கு சுகுனா, ஜெகதீஷ் என இரு பிள்ளைகள். பாட்டிக்கு ஜெகதீஷ் செல்ல பேரன். ஆனந்தி ஏழை வீட்டு சிறுமி. ஜெகதீஷ்-ஆனந்தி திருமணம் சிறுவயதிலேயே நடந்தது. புகுந்த வீடு செல்லும் ஆனந்தியை பைரவ்-சுமித்ரா தங்களின் பெறாத மகள் போல அன்புடன் கவனித்தனர். ஆனந்தி செய்யும் சிறு தவறுகளால் பாட்டிக்கு அவளை பிடிக்கவில்லை. பிறகு ஒருநாள் ஜெகதீஷை சுட சிலர் முயன்றனர். ஆனந்தி அவனை காப்பாற்றினாள். இதனால் ஆனந்தி தலையில் குண்டு பாய்ந்தது. அன்று முதல் பாட்டிக்கும் ஆனந்தி மீது பாசம் வர ஆரம்பித்தது.

சில வருடங்களுக்குப் சென்றன. ஆனந்தியும் ஜெகதீசும் வளர்ந்து விட்டனர். அவர்கள் காதலை உணர்ந்தனர். ஜெகதீஷ் மருத்துவ படிப்பிற்காக மும்பை சென்றான். அங்கு கௌரி என்ற பெண்ணுடன் நட்பாகி பிறகு காதல் கொண்டான். ஆனந்தி படிக்காதவள் என்பதால் அவள் தனக்கு ஏற்றவள் இல்லை என்று நினைத்தான். பிறகு கௌரியை தன் குடும்பத்தினரிடம் சொல்லாமல் திருமணம் செய்து கொண்டான். இதை அறிந்த பாட்டி உட்பட அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர். பிறகு அனைவரும் அவனை வெறுக்க ஆரம்பித்தனர். ஆனந்தி தன் வாழ்க்கையில் ஏற்பட்ட துன்பங்களை மறந்து முன்னேற நினைத்தாள். அவள் ஒரு ஆசிரியை ஆனாள். பிறகு ஜெய்சர் கிராமத்தின் பஞ்சாயத்து தலைவியும் ஆனாள்.

கௌரி-ஜெகதீஷ் இடையே அவ்வப்போது சிறுசிறு சண்டைகள் வந்துபோனது. பிறகு கௌரி கர்ப்பமானாள். இதை சாக்காக வைத்து ஜெகதீஷின் வீட்டில் தங்கினாள் கௌரி. ஆனால் ஜெகதீஷ் குடும்பத்தினரின் வெறுப்பான அணுகுமுறையைக் கண்டு கோபமடைந்த கௌரி ஜெகதீஷுடன் மீண்டும் மும்பைக்கே சென்றுவிட்டார். பிறகு ஒரு விபத்தால் அவள் குழந்தை கருவிலேயே அழிந்தது. இதனால் இருவரும் வருத்தம் அடைந்தனர்.

ஆனந்தியின் முயற்சியால் ஜெய்சர் கிராமம் ராஜஸ்தானின் ஒரு மாவட்டமாகியது. அதன் கலெக்டராக வந்த ஷிவ்ராஜ் சேகர் ஆனந்தி மீது காதல் கொண்டார். பாட்டி ஆனந்தியின் நல்வாழ்க்கைக்காக ஆனந்தி-ஷிவ் திருமணத்தை பற்றி யோசித்தாள். ஆனால் ஆனந்தி இனி திருமணம் செய்துகொள்ள மாட்டேன் என்று கூறிவிடுகிறார். பிறகு சாகும் தருவாயில் இருந்த தன் அம்மாவின் இறுதி ஆசை என்பதால் வேறு வழியின்றி ஆனந்தி சம்மதித்தாள். ஷிவ்வின் பெற்றோரும் மகிழ்வுடன் சம்மதித்தனர்.

கௌரி ஒரு சுயநலவாதி என்று அவள் பெரியப்பா மூலம் ஜெகதீஷ் அறிந்தான். கௌரியுடன் தன் உறவை முறித்துக்கொண்டான். தன் தவறை உணர்ந்த ஜெகதீஷ், ஆனந்தியைக் காண ஜெய்சருக்கு வந்தான். ஆனால் ஆனந்தி-ஷிவ் நிச்சயதார்த்தைக் கண்டு அதிர்ந்தான். பிறகு பாட்டியிடம் மன்னிப்பு கேட்டான். ஆனால் அவனை ஏற்றுக்கொள்ள யாரும் தயாராக இல்லை. ஷிவ்-ஆனந்தி திருமணம் நடந்து முடிந்தது. ஆனந்தி மிகுந்த வருத்தத்துடன் ஜெகதீஷின் குடும்பத்திடம் பிரியாவிடை பெற்று சென்றாள்.

பிறகு காலப்போக்கில் ஜெகதீஷ் திருந்திவிட்டான் என்பதை அறிந்த குடும்பத்தினர் அவனை ஏற்றுக் கொண்டனர். பிறகு ஜெகதீஷ் கங்கா என்ற பெண்ணைத் திருமணம் செய்து கொண்டான். தற்போது ஜெகதீஷ்-கங்கா மற்றும் ஆனந்தி-ஷிவ் ஆகியோரின் வாழ்க்கையில் நடக்கும் நிகழ்வுகளை வைத்து மண் வாசனை தொடர் ஒளிபரப்பாகி வருகிறது.

நடிகர்கள் தொகு

  • அவிகா கோர்
  • பிரத்தியுஷா பானர்ஜி → தோரல் ரஸ்புரா
  • அவேஷ் முகர்ஜி
  • சஷாங் வியாஸ் → சக்தி ஆனந்த்
  • ஸ்ரிதி ஜா → சர்குன் மேத்தா → ஆசாயா காசி
  • சுரேகா சிக்ரி
  • சித்தார்த் சுக்லா
  • ரூப் துர்காபால்
  • க்ரேசி கோஸ்வாமி

வெளி இணைப்புகள் தொகு