மதகிரி

இந்திய கிராமம்

மதகிரி (Madagiri) இந்தியாவின் கர்நாடக மாநிலத்தில் உள்ள ராய்ச்சூர் மாவட்டத்தின் சிர்வார் தாலுக்காவில் உள்ள ஒரு கிராமமாகும். சில சமயங்களில் இக்கிராமம் மதிகிரி, மதகெரா என்ற பெயராலும் அழைக்கப்படுகிறது.[1] ராய்ச்சூர் மாவட்டத்தில் பருத்தி விளையும் மிகப்பெரிய கிராமமாக மதகிரி பிரபலமான கிராமமாகும்.

மதகிரி
Madagiri

மதகிரி
கிராமம்
மதகிரி கிராமம், ஆளில்லா வான்கலக் காட்சி
மதகிரி கிராமம், ஆளில்லா வான்கலக் காட்சி
மதகிரி Madagiri is located in கருநாடகம்
மதகிரி Madagiri
மதகிரி
Madagiri
அமைவிடம், கருநாடகம்
மதகிரி Madagiri is located in இந்தியா
மதகிரி Madagiri
மதகிரி
Madagiri
இந்தியாவில் அமைவிடம்
ஆள்கூறுகள்: 16°05′N 77°04′E / 16.09°N 77.07°E / 16.09; 77.07
நாடுஇந்தியா
மாநிலம்கருநாடகம்
மாவட்டம்ராய்ச்சூர் மாவட்டம்
வட்டம் (தாலுகா)சிர்வார்
அரசு
 • வகைபஞ்சாயத்து ராச்
 • நிர்வாகம்கிராம ஊராட்சி
மக்கள்தொகை (2001)
 • மொத்தம்4,621
மொழிகள்
 • அதிகாரப்பூர்வம்கன்னடம்
நேர வலயம்இந்திய சீர் நேரம் (ஒசநே+5:30)
ஐ.எஸ்.ஓ 3166 குறியீடுIN-KA
வாகனப் பதிவுகேஏ-36
இணையதளம்karnataka.gov.in

வரலாறு தொகு

கர்நாடகாவில் கிராம பஞ்சாயத்துகள் வருவதற்கு முன்பு மண்டல் பஞ்சாயத்துகள் செயல்பட்டு வந்தன. கர்நாடகாவில் உள்ள பல மண்டல பஞ்சாயத்துகளில் மதகிரி மண்டல் பஞ்சாயத்தும் ஒன்றாகும். இந்த மண்டல பஞ்சாயத்தின் கீழ் மதகிரி, அள்ளி ஓசூர், சகபாவி, மச்சனூர், கணதிண்ணி, லக்கதிண்ணி, துபடூர், பொம்மனாலா, இயல்பூர் ஆகிய கிராமங்கள் இருந்தன. பஞ்சாயத்து ராச் சட்டம் 1993 ஆம் ஆண்டின் படி மதகிரி மண்டல் பஞ்சாயத்து நிறுத்தப்பட்டு, அதற்கு பதிலாக மதகிரி கிராமப் பஞ்சாயத்து ஆக செயல்படுகிறது.[2]

மக்கள் தொகையியல் தொகு

2011ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, மதகிரியில் 2332 பெண்கள் மற்றும் 2289 ஆண்கள் என மொத்தம் 4621 பேர் வசித்தனர்.[3]

மேலும் காண்க தொகு

மேற்கோள்கள் தொகு

  1. "Madagiri - Yahoo Search Results". search.yahoo.com. பார்க்கப்பட்ட நாள் 2022-10-25.
  2. "Grama panchayatha Madagiri, Shaktinagar, karnataka, India". indiasthan.com (in அமெரிக்க ஆங்கிலம்). 2021-09-09. பார்க்கப்பட்ட நாள் 2022-10-25.
  3. https://censusindia.gov.in/census.website/data/data-visualizations/PopulationSearch_PCA_Indicators

புற இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=மதகிரி&oldid=3870983" இலிருந்து மீள்விக்கப்பட்டது