மதய் பள்ளி

கேரள பள்ளிவாசல்

மதய் பள்ளிவாசல் ( மலையாளம் : മാടായി പള്ളി, மதய் பள்ளி; பழயங்காடி மசூதி) என்பது வடக்கு கேரளத்தின் கண்ணூர் மாவட்டம், பழயங்காடியில் உள்ள பள்ளிவாசல் ஆகும். இது கேரளத்தின் பழமையான பள்ளிவாசல்களில் ஒன்றாகும். இதுகுறித்த உள்ளூர் தொன்மக்கதைகள் கி.பி 7 ஆம் நூற்றாண்டுக்கு முந்தையவை. இது மாலிக் இப்னு தினாரால் நிறுவப்பட்டதாக நம்பப்படுகிறது. மேலும் பள்ளிவாசலுக்கு தேவையான பளிங்குகற்களை மக்காவிலிருந்து இப்னு தினார் கொண்டு வந்ததாகக் கூறப்படுகிறது. [1] பழயங்காடி / பயங்காடியைச் சுற்றியுள்ள பல பள்ளிவாசல்களில் இதுவும் ஒன்றாகும். இது குப்பம் ஆற்றின் கரையில் அமைந்துள்ளது, இது வளபட்டணம் ஆறு அதன் கழிமுகத்தில் இணைகிறது.

மதய் பள்ளிவாசல்
அடிப்படைத் தகவல்கள்
அமைவிடம்வட கேரளம், கண்ணூர் மாவட்டம், பழயங்காடி
சமயம்சுன்னி இசுலாம் - சூபியிசம்

இந்த பள்ளிவாசல் சுப்பிரமணியருக்கு கட்டபட்ட முன்னாள் இந்து கோவிலாகும். பள்ளிவாசலின் தூண்களிலும் அடித்தளச் சுவர்களில் உள்ள இந்து கல்வெட்டுகளை இன்னும் காணலாம். கோலாத்திரி மன்னரின் உதவியுடன் மதாய் மசூதி கட்டப்பட்டது. [2]

மேற்கோள்கள் தொகு

  1. "Pilgrim's progress". தி இந்து. 30 June 2003. பார்க்கப்பட்ட நாள் 26 March 2014.[தொடர்பிழந்த இணைப்பு]
  2. Husain Raṇṭattāṇi. Mappila Muslims: A Study on Society and Anti Colonial Struggles Other Books, Calicut (2007)
"https://ta.wikipedia.org/w/index.php?title=மதய்_பள்ளி&oldid=3315155" இலிருந்து மீள்விக்கப்பட்டது