மதிரா

பாகிஸ்தானிய மாடல், நடிகை

மதிரா (Mathira) என்கிற மதிரா முகமது பாகிஸ்தானி மாடல், நடனக்கலைஞர், தொலைக்காட்சித் தொகுப்பாளினி, பாடகர் மற்றும் நடிகை ஆவார். [1] இவர் பல தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியுள்ளார் மற்றும் இசை காணொளிகளில் தோன்றியுள்ளார். மெயின் ஹூன் ஷாஹித் அப்ரிடி மற்றும் இந்திய பஞ்சாபி திரைப்படமான யங் மலாங் ஆகியவற்றில் அவரது குத்தாட்டப் பாடல்களுக்காக அவர் அறியப்படுகிறார்.

ஆரம்பகால வாழ்க்கை மற்றும் தொழில் தொகு

ஜிம்பாப்வேயின் ஹராரேவில் ஒரு முஸ்லீம் குடும்பத்தில் தென் ஆப்பிரிக்க தந்தை மற்றும் பாகிஸ்தான் தாய்க்கு மதிரா பிறந்தார். [2] இவரது சகோதரி ரோஸ் முஹம்மதுவும் ஒரு நடிகை ஆவார். ஜிம்பாப்வேயில் அமைதியின்மைக்கு மத்தியில் தனது குடும்பத்துடன் பாகிஸ்தானுக்குச் செல்வதற்கு முன்பு அவர் ஜிம்பாப்வேயில் கல்வி கற்றார். ஜடுகர், தேசி பீட் மற்றும் மல்கூவின் நாச்டி கமல் பில்லோ மற்றும் ரிஸ்வான்-உல்-ஹக் எழுதிய வோ கவுன் தி ஆகியோரின் இசை காணொளிகளில் அறிமுகமானார். மார்ச் 2011 இல், வைப் டிவியில் “லவ் இன்டிகேட்டர்” என்ற தலைப்பில் ஒரு இரவு நிகழ்ச்சியை நடத்த அவருக்கு வாய்ப்பு கிடைத்தது.

பாலிவுட் அறிமுகம் தொகு

மதிரா ஒரு முன்னணி பாகிஸ்தான் நவீன ஆடை வடிவமைப்பு பத்திரிகையின் அட்டைப்படத்திற்காக படமாக்கப்பட்டார். [3] 2011 ஆம் ஆண்டில் அவர், இளைஞர்களின் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் நிறைந்த ஆக் தொலைக்காட்சியில் "பாஜி இணையதளம்" என்ற நிகழ்ச்சியையும் தொகுத்து வழங்கினார். 2013 ஆம் ஆண்டில் இந்திய பஞ்சாபி திரைப்படமான யங் மலாங்கில் லக் சி கரண்ட் என்ற குத்தாட்டப்பாடலை மேற்கொண்டு பாலிவுட்டில் அறிமுகமானார். [4] ஹுமாயூன் சயீத் நடித்த மெயின் ஹூன் ஷாஹித் அப்ரிடி படத்தில் மாஸ்தி மெய்ன் டூபி ராத் ஹை என்கிற பாடலையும் பாடியுள்ளார். [5]

இசை காணொளிகள் தொகு

பின்னர் 2013 ஆம் ஆண்டின் இறுதியில், தனது புதிய இசை காணொளியான ஜூட்டாவில் இளம் ராப்பர் அர்பாஸ் கானுடன் தோன்றினார். இது 31 டிசம்பர் 2013 அன்று வெளியிடப்பட்டது.

மதிரா, 2014 இல் விபின் சர்மா இயக்கிய படத்தில் நடித்தார். [6] 2015 ஆம் ஆண்டில், அட்னான் சாமிகானின் "பீகி பீகி ராட்டன் மே" பாடலுக்கு அஞ்சலி செலுத்துவதன் மூலம் ஃபுர்கான் மற்றும் இம்ரானுடன் "பியா ரே" பாடலில் இடம்பெற்றுள்ளார்.[7] [8]

தொலைக்காட்சி தொடர்/திரைப்படங்கள் தொகு

பின்னர், 2017 முதல் 2019 வரை, ஜியோ கஹானியின் தொடரான நாகினில் துணை கதாபாத்திரத்தில் நடித்தார். [9] 2019 ஆம் ஆண்டில், டேனிஷ் தைமூருக்கு ஜோடியாக காதல்-திருப்பங்கள் பல நிறைந்த திரைப் படமான சிர்ஃப் டம் ஹாய் டூ ஹோவில் நடித்தார். இதுவரை இவர் ஏழு திரைப்படங்களில் நடித்துள்ளார். [10]

தனிப்பட்ட வாழ்க்கை தொகு

மதிரா பஞ்சாபி பாடகர் ஃபரன் ஜே மிர்சாவை ( பிளின்ட் ஜே என்றும் அழைக்கப்படுகிறார்) [11] 2012 இல் திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு அஹில் ரிஸ்வி என்ற மகன் 2014 இல் பிறந்தார். [12] தவறான புரிதல்களால் இந்த ஜோடி 2018 இல் பிரிந்தது. [13] மதிரா ஒரு முஸ்லீம், தனது கடவுளுடனான தனது உறவை தனிப்பட்டதாக கருதுகிறார்.

தொலைக்காட்சி தொகு

புனைகதை நிகழ்ச்சிகள் தொகு

  • 2017–2019 : மஸ்தானியாக "நாகின்" (ஜியோ கஹானி) - தொலைக்காட்சி தொடர்
  • 2017: விருந்தினராக பிவி சே பிவி தக் போன்ற தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்றுள்ளார்.

இசை சரிதம் தொகு

2015 ஆம் ஆண்டில், "பியா ரே" என்கிற இசை காணொளியில் ஃபுர்கான் மற்றும் இம்ரான் பாடிய பாடல்கள் பெரும் வரவேற்பை பெற்று சாதனை படைத்தன. இதில் மதிராவும் இடம் பெற்றுள்ளார்.

குறிப்புகள் தொகு

  1. "I don't take bakwas: Mathira".
  2. https://www.dawn.com/news/597317
  3. "Yes, I'm bold & it is not a sin: Mathira Khan".
  4. "Mathira Khan to Appear in Bollywood Exposing Herself Boldly". Archived from the original on 2012-10-04. பார்க்கப்பட்ட நாள் 2019-12-06.
  5. ON. "Masti Mai Dobay Raat | Full Film Version Item Song | Main Hoon Shahid Afridi Movie 2013 | KING MNA - Video Dailymotion". Dailymotion.com. பார்க்கப்பட்ட நாள் 2013-09-29.
  6. Nabi, Zehra (1 January 2014). "Mathira's back with new music video 'Jhootha'". tribune.com.pk. http://tribune.com.pk/story/653350/mathiras-back-with-new-music-video-jhoota/. பார்த்த நாள்: 3 January 2014. 
  7. "Bringing back the Band Culture - Furqan & Imran". The Express Tribune. http://tribune.com.pk/story/881441/bringing-back-the-band-culture/. 
  8. "Mathira croons a tribute to Adnan Sami Khan". The News International. April 20, 2015 இம் மூலத்தில் இருந்து நவம்பர் 22, 2015 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20151122010501/http://magazine.thenews.com.pk/mag/detail_article.asp?magId=11&id=10657. 
  9. Haq, Irfan Ul (2017-09-26). "Mathira is back with a supernatural serial" (in en-US). Images. https://images.dawn.com/news/1178500. 
  10. "Danish Taimoor, Mathira-starrer ‘Tum Hi To Ho’ will hit theatres on Eidul Fitr - The Express Tribune" (in en-US). The Express Tribune. 2016-02-22. https://tribune.com.pk/story/1052154/danish-taimoor-mathira-starrer-tum-hi-to-ho-will-hit-theatres-on-eidul-fitr/. 
  11. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2019-01-01. பார்க்கப்பட்ட நாள் 2019-12-06.
  12. http://tribune.com.pk/story/757639/mathira-welcomes-arrival-of-a-baby-boy/
  13. "Mathira shares break-up letter on Instagram following divorce with husband". Images (in ஆங்கிலம்). 2018-01-30. பார்க்கப்பட்ட நாள் 2018-02-14.

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=மதிரா&oldid=3566409" இலிருந்து மீள்விக்கப்பட்டது