மதீனா மாகாணம் (சவுதி அரேபியா)

சவூதி அறேபியாவிலுள்ள ஒரு பிராந்தியம்

மதீனா மாகாணம் (Medina Province, அரபு மொழி: مِنْطَقَة ٱلْمَدِيْنَة ٱلْمُنَوَّرَة ) என்பது சவூதி அரேபியாவின் ஹெஜாஸ் பிரதேசத்தில் அமைந்த ஒரு மாகாணம் (மினாக்கா ) ஆகும். இது நாட்டின் மேற்குப் பகுதியில், செங்கடல் கடற்கரையில் அமைந்துள்ளது. இதன் பரப்பளவு 151,990 கிமீ² ஆகும். இதன் மக்கள் தொகையானது 2,132,679 (2017 மக்கள் தொகை கணக்கெடுப்பு) ஆகும். [1] இந்த மாகாணமானது ஏழு முசாஃபாத் (கவர்னரேட்டுகள்) எனப் பிரிக்கப்பட்டுள்ளது:

மதீனா பிராந்தியம்
பிராந்தியம்
ٱلْمَدِيْنَة ٱلْمُنَوَّرَة
மதீனாவில் அல்-மஸ்ஜித் அந்-நபவி பள்ளிவாசல், 2016
மதீனாவுடன் சவுதி அரேபியாவில் மதீனாவின் அமைவிடம்
மதீனாவுடன் சவுதி அரேபியாவில் மதீனாவின் அமைவிடம்
Country சவூதி அரேபியா
தலைநகரம்மதீனா
மாநகராட்சிகள்7
அரசு
 • ஆளுநர்பைசல் பின் சல்மான்
 • துணை ஆளுநர்சவுத் பின் காலித் அல் சவுத்
பரப்பளவு
 • மொத்தம்1,51,990 km2 (58,680 sq mi)
மக்கள்தொகை (2017 கணக்கெடுப்பு)
 • மொத்தம்21,32,679
 • அடர்த்தி14/km2 (36/sq mi)
ISO 3166-203
கவர்னரேட் மக்கள் தொகை
மதீனா 995,619
அல் ஹுனக்கியா 52,549
மஹத் அல் தஹாப் 53,687
அல்-உலா 57,495
பத்ர் 58,088
கைபர் 45,489
யான்பு அல் பஹார் 249,797

பிராந்தியத் தலைநகரமாக மதீனா உள்ளது. இது இஸ்லாத்தின் இரண்டாவது புனிதமான நகரம் ஆகும். [2] மாகாணத்தின் பிற நகரங்களாக யான்புல் அல் பஹ்ர் மற்றும் பத்ர் ஹுனைன் ஆகியவை உள்ளன. யுனெஸ்கோவின் உலக பாரம்பரிய தளமான மடேன் சலேவும் இதில் உள்ளது. [3]

மக்கள் தொகைதொகு

மக்கள்தொகை வளர்ச்சி
ஆண்டு ம.தொ.
1992 1,084,947 —    
2004 1,512,724 0.02%
2010 1,781,733 0.01%
2018 2,188,138 0.01%
source:[4]

ஆளுநர்கள்தொகு

  • முஹம்மது பின் அப்துல்அஜிஸ் (1926-1965) [5]
  • அப்துல் முஹ்சின் பின் அப்துல்அஸிஸ் (1965-1985) [சான்று தேவை]
  • அப்துல் மஜீத் பின் அப்துல்அஜிஸ் (1986-1999) [சான்று தேவை]
  • முக்ரின் பின் அப்துல்அஸிஸ் (1999-2005) [சான்று தேவை]
  • அப்துல்ஸீஸ் பின் மஜித் (2005-2013) [6]
  • பைசல் பின் சல்மான் பின் அப்துல்அஜிஸ் அல் சவுத் (2013 - தற்போது வரை) [சான்று தேவை]


குறிப்புகள்தொகு