மதுகா போர்டில்லோனி

மதுகா போர்டில்லோனி(Madhuca bourdillonii) என்பது சப்போட்டாசி குடும்பத்தில் உள்ள ஒரு வகை பூக்கும் தாவரமாகும். இது இந்தியாவில் உள்ள கேரளாவின் பாலக்காடு பகுதிகளில் மட்டுமே காணப்படுகிறது. இது 20 மீட்டர் உயரம் வரை வளரும் ஒரு பசுமையான மரமாகும். [2] முற்றிலும் அழிந்துவிட்டதாக கருதப்பட்ட இந்த மரம் அதன் அசல் வசிப்பிடமான பாலக்காட்டிலிருந்து, 700 கி.மீ தொலைவில் உள்ள உத்தர கன்னடாவில் சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்டது [3] . இந்த மரங்கள் முன்னதாக பழைய குகைகளிலும் காடுகளிலும் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம், பண்டைய காடுகள் மற்றும் முதன்மை காடுகளை பாதுகாப்பதன் மூலம் பல்வேறு தாவரங்களைப் பாதுகாக்க முடியும் என அறியலாம். [4]

மதுகா போர்டில்லோனி
உயிரியல் வகைப்பாடு e
திணை:
உயிரிக்கிளை:
பூக்கும் தாவரம்
உயிரிக்கிளை:
மெய்இருவித்திலி
உயிரிக்கிளை:
வரிசை:
குடும்பம்:
பேரினம்:
இனம்:
M. bourdillonii
இருசொற் பெயரீடு
Madhuca bourdillonii
(Gamble) H.J.Lam

மேற்கோள்கள் தொகு

  1. World Conservation Monitoring Centre (1998). "Madhuca bourdillonii". IUCN Red List of Threatened Species 1998: e.T31216A9614835. doi:10.2305/IUCN.UK.1998.RLTS.T31216A9614835.en. https://www.iucnredlist.org/species/31216/9614835. பார்த்த நாள்: 16 November 2021. 
  2. "ആർക്കൈവ് പകർപ്പ്". Archived from the original on 2012-10-09. பார்க்கப்பட்ட நாள் 2012-10-30.
  3. http://wgbis.ces.iisc.ernet.in/energy/water/paper/Relic/index.htm
  4. http://www.downtoearth.org.in/node/4876
"https://ta.wikipedia.org/w/index.php?title=மதுகா_போர்டில்லோனி&oldid=3879423" இலிருந்து மீள்விக்கப்பட்டது