மதுக்கரைச் சுவர்
மதுக்கரைச் சுவர் என்பது ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க ஒரு எல்லைச் சுவர் ஆகும். இது சேர,சோழ, பாண்டிய மன்னர்கள் ஆட்சி புரிந்த எல்லைப் பகுதியை வரையறுக்கின்றது. இச்சுவர் சுமார் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் செல்லாண்டியம்மனால் அமைக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
வரலாற்று எல்லைக்கோடு
தொகுமதுக்கரைச் சுவரானது கல் மற்றும் மண்ணால் உருவாக்கப்பட்டுள்ளது. இச்சுவர் தமிழ்நாட்டின் மையப்பகுதியில் அமைந்துள்ளளது. சேரர், சோழர் மற்றும் பாண்டியர்களின் எல்லைப்பரப்பை வரையறுத்துக் காட்டுவதோடு மூன்று மன்னர்கள் ஆட்சி புரிந்த பகுதியின் மையமாகவும் உள்ளது.[1]
மூன்று மன்னர்களிடையே எல்லைப் பிரச்சனைக் குறித்து சிக்கல்கள் வந்த பொழுது செல்லாண்டியம்மன் ஒரே இரவில் அமைத்து தந்ததாக இப்பகுதி மக்களால் நம்பப்படுகிறது. இத்தெய்வமானது உஜ்ஜெயினி மகாகாளியின் அவதாரமாக கொள்ளப்படுகிறது. சுவர் முழுவதும் எல்லை தெய்வங்களின் உருவங்கள், சிலைகள் அடையாளமாக அமைத்து எல்லையைப் பாதுகாத்து வந்துள்ளன. இதில் சேர நாடு மற்றும் சோழ நாடு என்பது காவிரியாற்றின் கரையோர நகர் என நிர்மாணிக்கப்பட்டுள்ளது. பாண்டிய நாடு என்பது தெற்குப் பகுதியில் அமைந்துள்ளது என அறியப்படுகிறது. இச்சுவர் காவிரியின் தென்கரையில் அமைந்துள்ள செல்லாண்டியம்மன் கோவில் தொடங்கி, மதுரை மீனாட்சியம்மன் கோவில் வரை அமைகிறது.[2] [3]
முக்கியத்துவம்
தொகுஇச்சுவரானது பிரித்தானிய ஆட்சிக் காலத்தின் 1907-ம் ஆண்டுக்குரிய அரசு இதழில் இடம் பெற்று ஒரு வரலாற்றுச் சான்றாக அமைந்தள்ளது.[4] குளித்தலையிலிருந்து 12 மைல் தொலைவில் திருக்காம்புளியூர் அருகே மூன்று மன்னர்கள் ஆட்சிபுரிந்த இடத்தின் மையமாக விளங்குகிறது. இங்குள்ள தெய்வமானது முக்கியத்துவம் வாய்ந்ததாகவும் கருதப்படுகிறது. இக்கோவிலுக்கு ஆடி மாதம் 18-ம் நாள் 'பதினெட்டாம் பெருக்கு' என்ற பெயரில் விழா கொண்டாடப்படுகிறது.
எல்லைகள்
தொகுமதுக்கரைச் சுவர் குறித்து காலம் தெளிவாக அறியப்படாத நிலையில் முதலாம் நூற்றாண்டாக இருக்கலாம் என அறியப்படுகிறது. தமிழ்ப் புலவர் ஒளவையார் சோழப் பேரரசின் எல்லைப் பரப்பினைப் பற்றி கூறுகையில் கிழக்கில் கடலையும், வடக்கில் கடலூர் அருகில் ஓடும் பெண்ணை ஆற்றையும், தெற்கில் தஞ்சாவூர் அருகிலுள்ள வெள்ளாற்றையும், மேற்கில் கோட்டைக்கரை என்றும் வரையறுத்துள்ளார். இவற்றில் கோட்டைக்கரை என்ற ஊர் மதுக்கரையின் குறுக்கில் உள்ளது. என்று மாறி இருக்க வேண்டும் என்று கருதப்படுகிறது. இதன் மூலம் தமிழகத்தின் எல்லைப்பகுதியை மதுக்கரைச் சுவர் நிர்மாணித்தது தெளிவாக வெளிப்படுகிறது. இச்சுவரானது தற்பொழுது குளித்தலை மற்றும் கரூர் வட்டாரத்திற்கு உட்பட்டு தொடர்ந்து திருச்சி மற்றும் திண்டுக்கல் மாவட்டத்தின் வழியே மதுரை வரை செல்கின்றது.[5]
பார்வை நூல்
தொகு- Hemingway, F.R. Trichinopoly. Madras District Gazetteers. Government Press, Madras, 1907.
சான்றுகள்
தொகு- ↑ Hemingway, F.R. Trichinopoly. Madras District Gazetteers. Government Press, Madras, 1907. Page 8. Retrieved 13 December 2011. Trichinopoly Gazetteer: Madukkarai
- ↑ Wikimapia: Madukkarai Sellandiyamman Temple at Mayanur
- ↑ Wikimapia: Madurai Meenakshi Amman Temple
- ↑ Hemingway, F.R. Trichinopoly. Madras District Gazetteers. Government Press, Madras, 1907. Page 281. Retrieved 13 December 2011. Trichinopoly Gazetteer: Madukkarai
- ↑ Hemingway, F.R. Trichinopoly. Madras District Gazetteers. Government Press, Madras, 1907. Pages 27-28. Retrieved 13 December 2011. Trichinopoly Gazetteer: Madukkarai