மதுக்கரை செல்லாண்டியம்மன் கோவில்

திருச்சி கரூர் பாதையில் கரூரில் இருந்து இருபது கிலோ தொலைவில் உள்ளது மாயனூர். மாயனூரை அடுத்த மதுக்கரையில் செல்லாண்டியம்மன் மூலக்கோவில் அமைந்துள்ளது. இக்கோவில் காவிரி ஆற்றங்கரையில் அமைந்துள்ளபடியால் காவிரியே இத்தலத்தின் தீர்த்தமாகும். செல்லாண்டியம்மனுக்கு மற்ற தெய்வங்களைப் போல தலை, கை மற்றும் உடல் இல்லை. கருவறையில் உள்ள மூலவர் சிலை இடுப்புக்குக் கீழே உள்ள அங்கங்கள் மட்டும் உள்ளன. இது சற்று மாறுபட்ட சிலை அமைப்பாகும்.மூவெந்தர்கள் அம்மனை பிரித்துக்கொண்டதாக சொல்லப்படுகிறது.

தலை உறையூரில் என்றும்,உடல் மதுரை செல்லாத்தம்மன் என்றும் சொல்லப்படுகிறது.https://www.maalaimalar.com/devotional/temples/2017/08/31113448/1105440/sellandi-amman-kovil.vpf