மதுபாலா (தொலைக்காட்சித் தொடர்)
மதுபாலா என்பது ஒரு இந்தி மொழி தொலைகாட்சித் தொடர் ஆகும். இந்த தொடர் மே 28, 2012 முதல் ஆகத்து 9, 2014 வரை திங்கள் முதல் வெள்ளி வரை கலர்ஸ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி 648 அத்தியாங்களுடன் நிறைவு பெற்றது.[1] இந்த தொடர் இந்திய திரைப்படத்துறை நூற்றாண்டுகால வரலாற்றினை உடையது. இதனை நினைவு கூறும் விதமாக தயாரிக்கப்பட்டது.[2]
மதுபாலா: கொஞ்சம் இஷ்டம் கொஞ்சம் கஷ்டம் | |
---|---|
வகை | காதல் நாடகம் |
இயக்கம் | ரவீந்திர கவுதம் தேவஷிஷ் தார் இந்தர் தாஸ் பிரசாத் |
நடிப்பு | திராஷ்டி தமி |
நாடு | இந்தியா |
மொழி | இந்தி |
பருவங்கள் | 2 |
அத்தியாயங்கள் | 648 |
ஒளிபரப்பு | |
அலைவரிசை | கலர்ஸ் தொலைக்காட்சி |
ஒளிபரப்பான காலம் | 28 மே 2012 9 ஆகத்து 2014 | –
இந்தத் தொடர் பாலிமர் தொலைக்காட்சியில் மொழிமாற்றம் செய்யப்பட்டு பிப்ரவரி 18, 2013 முதல் திங்கள் முதல் வெள்ளி வரை மாலை 6:30 மணிக்கு மற்றும் இரவு 8 மணிக்கும் ஒளிபரப்பானது.[3]
கதைச்சுருக்கம்
தொகுதிரைப்பட படப்பிடிப்புத் தளத்தில் பிறக்கும் மதுபாலா என்ற நடுத்தர வர்க்க பெண்ணின் ஆசைகளை மதிப்பீடுகளை திரைப்படப்பிடிப்புத் தள பின்னணியில் விளக்குகிறது அதே தருணம் பிரபல நடிகரான ஆர் கேக்கும் மதுபாலாவுக்கும் இடையில் வரும் காதலையும் இந்த தொடர் விளக்குகிறது.
நடிகர்கள்
தொகு- திராஷ்டி தமி
- விவியன் ட்சென
- பல்லவி புரோஹித்
- ஆர்த்தி பூரி
- ராகீ டான்டன்
- பூபீந்தர் சிங்
- ராசா முராட்
வேறு மொழிகள்
தொகுஇந்த தொடர் தமிழ், தெலுங்கு மற்றும் மலையாளம் மொழிகளில் மொழி மாற்றம் செய்யப்பட்டு ஒளிபரப்பானது. கன்னட மொழியில் மறு தயாரிப்பு செய்யப்பட்டுள்ளது.
மேற்கோள்கள்
தொகு- ↑ "Madhubala to end". PinkVilla. 13 June 2014. Archived from the original on 16 செப்டம்பர் 2018. பார்க்கப்பட்ட நாள் 18 ஜனவரி 2019.
{{cite web}}
: Check date values in:|access-date=
and|archive-date=
(help) - ↑ "COLORS launches its new show "Madhubala...Ek Ishq, Ek Junoon"". AdGully. 22 May 2012.
- ↑ "மதுபாலா… பாலிமர் டிவியில் புதிய தொடர்". tamil.filmibeat.com. February 12, 2013.