மதுரை என். கிருஷ்ணன்
மதுரை நாராயணன் கிருஷ்ணன் (Madurai N. Krishnan) (1928-2005) ஒரு இந்திய இசைக்கலைஞராக இருந்தார். இவர் கர்நாடக இசையில் தேர்ச்சி பெற்றவர். இவர், இசையின் மூன்று அம்சங்களான பாடல்களைப் பாடுவது, பாடல்களை எழுதுவது, மற்றும் இசையமைத்தல் போன்றவற்றில் சிறந்து விளங்கினார். 1992 இல், நான்காவது மிக உயரிய சிவிலியன் விருதான பத்மஸ்ரீ விருது, இந்திய அரசால் அவருக்கு வழங்கப்பட்டது. மற்றும் அதைத் தொடர்ந்து 2003இல், மூன்றாவது மிக உயரிய சிவிலியன் விருதான பத்ம பூசண் விருது வழங்கப்பட்டது.[1] மேலும், அவர் சங்கீத நாடக அகாதமி விருது , யுனெஸ்கோ விருது மற்றும் கலைமாமணி விருதினைப் பெற்றவராவார்.
மதுரை என். கிருஷ்ணன் | |
---|---|
பிறப்பு | மதுரை, தமிழ்நாடு, இந்தியா | அக்டோபர் 31, 1928
இறப்பு | அக்டோபர் 9, 2005 சென்னை, தமிழ்நாடு, இந்தியா | (அகவை 76)
மற்ற பெயர்கள் | மதுரை நாராயணன் கிருஷ்ணன் ஐயங்கார் |
பணி | பாடகர், பாடலாசிரியர், இசை அமைப்பாளர் |
அறியப்படுவது | கருநாடக இசை |
விருதுகள் |
|
சுயசரிதை
தொகுமதுரை என் கிருஷ்ணன் அக்டோபர் 31, 1928 இல் தென் இந்திய மாநிலமானதமிழ்நாட்டிலுள்ள மதுரையில் பிறந்தார்.[2] இவரது தந்தை நாராயண ஐயங்கார், ஒரு ஹரிகதா சொற்பொழிவாளர் மற்றும் சமஸ்கிருதப் பண்டிதராவார். இசைக்கலைஞர்கள் குடும்பத்தில் பிறந்த இவரின் [3] மூத்த சகோதரர் மதுரை என். ஸ்ரீனிவாச ஐயங்கார், நன்கு அறியப்பட்ட வயலின் கலைஞர் ஆவார். மற்றும் புகழ்பெற்ற இசைக்கலைஞர்களான அரியக்குடி ராமானுஜ ஐயங்கார் மற்றும் ராமநாதபுரம் பூச்சி சீனிவாச ஐயங்கார் ஆகியோர் இவரது உறவினர்கள் ஆவார்கள். இவர், தனது ஆரம்பகால இசை பயிற்சியினை தந்தை மற்றும் மூத்த சகோதரரிடமிருந்து பெற்றுக்கொண்டார். பின்னர், காரைக்குடி தமிழ் இசைப் பள்ளியில் முறையாகப் பயிற்சி பெற்றார்.[4] பின்னர், அரியக்குடி வித்துவானிடம், 18 ஆண்டுகள் குருகுல வழியில் , மெலவூரில் தங்கியிருந்து, இசையைக் கற்றுக்கொண்டார். புகழ்பெற்ற இசைக்கலைஞர்களான பாலக்காடு டி. எஸ். மணி ஐயர் மற்றும் வேலூர் ஜி. ராமபத்ரன் ஆகியோருடன் இணைந்து திருப்பதியில் முதன்முறையாகப் பாடினார்.[5]
கிருஷ்ணன், நடனங்களுக்காகவும், மற்றும், திருப்பாவை , நாலாயிர திவ்ய பிரபந்தம் மற்றும் திருவாசகம் போன்ற இலக்கிய படைப்புகளுக்காகவும் இசையமைத்திருக்கிறார்.[4] மூன்று அம்சங்களில் அவரது இசைத் திறமை வெளிப்பட்டது. அவை பாடல்கள் பாடுவது, பாடல்கள் எழுதுவது மற்றும் எழுதிய பாடல்களுக்கு இசையமைப்பு செய்வது போன்றவை ஆகும். இந்த மூன்று திறனையும் ஒருங்கே பெற்றதால், அவர் மோனிகர் மற்றும் வாகீயக்காரா என்று அழைக்கப்பட்டார்.[6] சுதாகரன் ரகுபதி மற்றும் சித்ரா விஸ்வேஸ்வரன் உள்ளிட்ட பல குறிப்பிடத்தக்க நடன கலைஞர்கள் கிருஷ்ணனின் பாடல்களுக்கு நடனமாடியுள்ளனர். மேலும், அவர் 1965 ஆம் ஆண்டில் சுதாராணி ரகுபதி மற்றும் இவரால் தொடங்கப்பட்ட ஸ்ரீ பாரதாலயாவின் இயக்குனராகவும் பணியாற்றினார்.[3]
2005 ஆம் ஆண்டு அக்டோபர் 9 ம் தேதி, தனது 76வது வயதில், சென்னை மருத்துவமனையில் , கிருஷ்ணன் இறந்தார்.[7] அவர் தன் நான்கு மகள்களின் உதவியோடு வாழ்ந்தார்.[8]
குறிப்புகள்
தொகு- ↑ "Padma Awards". Government of India. 2018-05-17. Archived from the original on 2018-10-15. பார்க்கப்பட்ட நாள் 2019-03-21.
- ↑ "A conversation with Madurai N.Krishnan". 2018-11-25.
- ↑ 3.0 3.1 "A tribute to Vidwan Madurai N. Krishnan". 2018-11-25. Archived from the original on 2018-07-16. பார்க்கப்பட்ட நாள் 2019-03-21.
- ↑ 4.0 4.1 "Vidwan Madurai N. Krishnan passes away". 2018-11-25. Archived from the original on 2018-11-12. பார்க்கப்பட்ட நாள் 2019-03-21.
- ↑ "Madurai N.Krishnan, a multi-faceted artiste". 2018-11-25. Archived from the original on 2018-11-25. பார்க்கப்பட்ட நாள் 2019-03-21.
- ↑ "Madurai N Krishnan is no more". 2005-10-10.
- ↑ "Profiles - A SPIRIT FLOWS INTO THE GREAT BEYOND... Composer Madurai N Krishnan passes away". 2018-11-25.
- ↑ "The Hindu : National : N. Krishnan passes away". October 10, 2005.