மது கம்பிகர்

இந்திய நாட்டுப்புறக் கலைஞர், நாடக நடிகர், திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி ஆளுமை

மது கம்பிகர் (Madhu Kambikar) இந்திய நாட்டுப்புறக் கலை கலைஞர், நாடக நடிகர் மற்றும் திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி ஆளுமையாவார்.[2] கம்பிகர் மகாராஷ்டிராவைச் சேர்ந்தவர்.[3][4][5][6][7]

மது கம்பிகர்
Madhu Kambikar
பிறப்பு28 சூலை 1953 (1953-07-28) (அகவை 71)[1]
அகமத்நகர், மகாராட்டிரம்
தேசியம்இந்தியர்
பணி
  • நடிகை
  • நாட்டுப்புற நடனக் கலைஞர்
செயற்பாட்டுக்
காலம்
1980–முதல்

வாழ்க்கை

தொகு

கம்பிகர் மகாராட்டிர மாநிலம் பீடு மாவட்டத்தில் உள்ள மாலேகான் என்ற கிராமத்தில், சூலை 28, 1953-ல் கோல்காட்டி சமூகத்தில் பிறந்தார்.[1] இவர் பாதியிலே பள்ளிப் படிப்பினை விட்டு வெளியேறி தனது தந்தையுடன் பணியாற்றத் தொடங்கினார். இவர் மிக இளம் வயதிலேயே ஒரு நடிகையானார். இவர் மறைந்த கிஷோர் சாந்தாபாய் காலேவின் அத்தை ஆவார்.[8]

நவம்பர் 27, 2016 அன்று, மாட்டுங்காவில் உள்ள யஷ்வந்த் நாட்டிய மந்திரில் லாவணி - தமாஷா நிகழ்ச்சியின் போது மேடையில் மயங்கி விழுந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.[9]

நாட்டுப்புற மற்றும் சமகால நாடகம்

தொகு

கம்பிகர் பல நாட்டுப்புற நாடகங்களில் நடித்துள்ளார்.[10]

  • தாது இந்தூரிகரின் " கடவச்ச லக்னம் "
  • ஷங்கர் பாட்டீலின் " பங்காதிஷிவாய புதாரி நஹி "
  • அசோக் பரஞ்சபேவின் " உடே கா அம்பே உடே "
  • வசந்த் சப்னிஸ் ' " விச்சா மஜி பூரி காரா "
  • ஆத்மாராம் சாவந்தின் " முஜ்ரா கியா சர்க்கார் "
  • அசோக் பட்டோல்/ சுயோக்கின் " காஷி மே ராஹு தாஷிச் "
  • கம்பிகரின் சொந்த தயாரிப்பான" சகி மசி லாவனி " உபேந்திரா லிமாயே இயக்கியுள்ளார்

கம்பிகர் 22-25 நாடகங்களில் நடித்துள்ளார். இவற்றுள் சில:[11][2]

  • தும்சா அம்சா செம் அஸ்தா
  • வஸ்த்ரஹரன்
  • புத்திரகாமேஷ்டி
  • பணம் செலுத்தும் விருந்தினர்
  • அஜப் நியாய வர்துலச்சா

தேர்ந்தெடுக்கப்பட்ட திரைப்படவியல்

தொகு

கம்பிகர் நூற்றுக்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். இவற்றில் சில:[12][13][14]

  • ஷபிட்
  • முக்தா
  • ஷோலா அவுர் ஷப்னம் (1992 திரைப்படம்) இந்தித் திரைப்படம்
  • டோகி
  • சங்கர்ஷ் ஜீவனாச்சா
  • டோம்பாரி
  • ஏக் ஹோதா விதுஷாக்
  • ஜபட்லேலா
  • ஜபட்லெலா 2
  • டெபு
  • யூ கா காரத்
  • மாலா கெயூன் சலா
  • சாதிச்சி புண்யாயி
  • லட்சுமி
  • ரகு மைனா
  • சல் ரீ லக்ஷ்ய மும்பை லா
  • ரிக்ஷாவலி
  • மசி சகுலி
  • ராவ்சாகேப்
  • மும்பைச்சா டபேவாலா
  • பாலகந்தர்வா
  • பின் கமச்ச நவரா
  • ஆஜ் ஜலே முக்தா மீ

விருதுகள்

தொகு
  • சிறந்த நடிகைக்கான ஹன்சா வாட்கர் சிறப்பு விருது
  • நட்வர்ய கேசவ்ராவ் நாள் விருது
  • 2013 மகிளா லோககலா சம்மேளனின் தலைவர், நாக்பூர்
  • லோகஷாஹிர் பத்தே பாபுராவ் விருது[15]
  • மகரிஷி சங்கர்ராவ் மோஹிதே-பாட்டீல் லாவனி கலவந்த் விருது 2007
  • ஜீ சித்ரா கௌரவ் வாழ்நாள் சாதனையாளர் விருது 2018

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 Rege, Sharmila. Conceptualising Popular Culture. https://www.academia.edu/4852864. 
  2. 2.0 2.1 "मधू कांबीकर - Saamana" (in en-US) இம் மூலத்தில் இருந்து 2016-12-21 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20161221000027/http://www.saamana.com/thsa/madhu-kambikar#sthash.5BVhMYXL.dpuf. 
  3. Rajadhyaksha, Ashish; Willemen, Paul (2014-07-10). Encyclopedia of Indian Cinema (in ஆங்கிலம்). Routledge. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9781135943189.
  4. Datt, Dr Gopal (1984-01-01). Indian Cinema, the Next Decade (in ஆங்கிலம்). Indian Film Directorsʼ Association.
  5. Contributions to Indian Sociology (in ஆங்கிலம்). Mouton. 1995-01-01.
  6. "Legendary Marathi actress Madhu Kambikar hospitalised - Times of India". http://timesofindia.indiatimes.com/entertainment/marathi/movies/news/Madhu-Kambikar-hospitalised/articleshow/55777862.cms. 
  7. "मधू कांबीकर आयसीयूमध्ये -Maharashtra Times". 2016-12-01 இம் மூலத்தில் இருந்து 2016-12-03 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20161203185719/http://maharashtratimes.indiatimes.com/maharashtra/mumbai-news/actress-madhu-kambikar-in-icu/articleshow/55712173.cms. 
  8. "A life lived for the community - Indian Express". archive.indianexpress.com. பார்க்கப்பட்ட நாள் 2016-12-20.
  9. "मधु कांबीकर यांची प्रकृती अत्यवस्थ". beta1.esakal.com. Archived from the original on 2016-12-21. பார்க்கப்பட்ட நாள் 2016-12-20.
  10. "Upendra Limye - Theatre". www.upendralimaye.com. Archived from the original on 2016-03-08. பார்க்கப்பட்ட நாள் 2016-12-20.
  11. "सिनेअभिनेत्री कांबीकरांच्या लावणीने प्रेक्षक भारावले". பார்க்கப்பட்ட நாள் 2016-12-20.
  12. "Of talking dolls and 3D effects". www.afternoondc.in. பார்க்கப்பட்ட நாள் 2016-12-20.
  13. "Adhir Man Zale' Looks Like A Tribute?-Nilkath Master-Pooja Sawant, Ajay-Atul!". www.msn.com. பார்க்கப்பட்ட நாள் 2016-12-20.
  14. "Rediff On The NeT: Mohan Gokhale is dead". m.rediff.com. பார்க்கப்பட்ட நாள் 2016-12-20.
  15. "मधू कांबीकर यांना पठ्ठे बापूराव पुरस्कार". பார்க்கப்பட்ட நாள் 2016-12-20.[தொடர்பிழந்த இணைப்பு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=மது_கம்பிகர்&oldid=4110470" இலிருந்து மீள்விக்கப்பட்டது