மது சாலினி ஓர் இந்தியத் திரைப்பட நடிகையும் தொகுப்பாளினியும் ஆவார். குச்சிப்புடி நடனத்தை நன்கு கற்ற நடனக் கலைஞர் ஆவார். இவர் தமிழ், தெலுங்கு, இந்தித் திரைப்பட நடிகையாவார்.

Madhu Shalini watching CCL 2012 match
பிறப்புஅசுமா பர்வீன்
21 சூலை 1983 (1983-07-21) (அகவை 41)
ஐதராபாத்து, ஆந்திரப் பிரதேசம்
பணிநடிகை, தொகுப்பாளினி
செயற்பாட்டுக்
காலம்
2005 – தற்போதுவரை

தொழில்

தொகு

மது சாலினி பிறந்ததும் வளர்ந்ததும் ஹைதராபாத் நகரமாகும். இவரது தந்தை ஒரு தொழிலதிபர்; தாயார் ஒரு வழக்குரைஞர். தந்தை இசுலாமிய மதத்தைச் சேர்ந்தவர், தாய் இந்து மதத்தைச் சேர்ந்தவர்.[1] தாயைப் போல குச்சிப்புடி நடனம் கற்ற இவர் முதலில் விளம்பரப் படங்களில் நடித்தார். தொலைக்காட்சித் தொகுப்பாளினியாக சிலகாலம் இருந்தார். பின் நடிகையாகத் தெலுங்கு திரைப்படத்துறைக்குள் நுழைந்தார்.[2]

2005 ஆம் ஆண்டு முதல் தெலுங்குத் திரைப்படத்தில் அறிமுகமாகி பரவலாகப் பேசப்பட்ட இவர் தொடர்ந்து பல தெலுங்குத் திரைப்படங்களில் நடித்து புகழ்பெற்றார்.[1][2][3][4][5] [6][7][8] [9] [10] [11]

தெலுங்கில் அடைந்த வெற்றியைத் தொடர்ந்து இவர், குறைந்த செலவில் எடுக்கப்பட்ட பழனியப்பா கல்லூரி என்ற தமிழ்த் திரைப்படத்தில் நடித்தார். ஆனால் அப்படம் வெற்றிபெறவில்லை.[12] இவரது அடுத்த தமிழ்த் திரைப்படம் பதினாறு.[12] மிகவும் காலம் சென்று வெளியான இத்திரைப்படம் சுமாரான படமாக அமைந்தாலும் அதில் இவரது கதாபாத்திரமான இந்து, இவருக்கு நல்ல விமர்சனத்தைப் பெற்றுத் தந்தது.[13][14][15] பிரபல தமிழ்த் திரைப்பட இயக்குனர் பாலா இயக்கிய அவன் இவன் திரைப்படத்தில் தன் சொந்தக் குரலில் பேசி நடித்துள்ளார்.[16]

பாலிவுட் திரையுலகில் இயக்குனர் ராம் கோபால் வர்மாவின் டிபார்ட்மெண்ட் என்ற இந்தித் திரைப்படம் மூலம் அறிமுகமானார்.[17]

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 "Madhu Shalini talks about Films >> Tollywood Star Interviews". Ragalahari.com. 13 June 2006. பார்க்கப்பட்ட நாள் 21 October 2011.
  2. 2.0 2.1 "Naa Pranamkante Ekkuva – audio function – Telugu Cinema – Dr. Nirajj & Madhu Shalini – Sashi Preetam". Idlebrain.com. பார்க்கப்பட்ட நாள் 21 October 2011.
  3. "Naa Pranamkante Ekkuva – Telugu cinema Review – Dr. Neeraj, Madhu Shalini – Sashi Preetam". Idlebrain.com. 6 May 2005. பார்க்கப்பட்ட நாள் 21 October 2011.
  4. "Reviews : Movie Reviews : Naa Pranam Kante Ekkuva – Movie Review". Telugucinema.com. Archived from the original on 6 ஏப்ரல் 2012. பார்க்கப்பட்ட நாள் 21 October 2011. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  5. "Naa Praanam Kante Ekkuva Review - Naa Praanam Kante Ekkuva Movie Review on fullhyd.com". Fullhyderabad.com. பார்க்கப்பட்ட நாள் 21 October 2011.
  6. "Naa Pranamkante Ekkuva – Telugu cinema Review – Dr. Neeraj, Madhu Shalini – Sashi Preetam". Idlebrain.com. 6 May 2005. பார்க்கப்பட்ட நாள் 21 October 2011.
  7. "Reviews : Movie Reviews : Naa Pranam Kante Ekkuva – Movie Review". Telugucinema.com. Archived from the original on 6 ஏப்ரல் 2012. பார்க்கப்பட்ட நாள் 21 October 2011. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  8. "Naa Praanam Kante Ekkuva Review - Naa Praanam Kante Ekkuva Movie Review on fullhyd.com". Fullhyderabad.com. பார்க்கப்பட்ட நாள் 21 October 2011.
  9. "Friday Review Hyderabad / On Location : Comedy with a message". The Hindu (India). 9 March 2007 இம் மூலத்தில் இருந்து 5 செப்டம்பர் 2013 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20130905034517/http://www.hindu.com/fr/2007/03/09/stories/2007030900420200.htm. பார்த்த நாள்: 21 October 2011. 
  10. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2010-08-11. பார்க்கப்பட்ட நாள் 2012-11-26.
  11. "State Rowdy Review – Telugu Movie Review by Kishore". Nowrunning.com. 9 December 2007. Archived from the original on 2 ஏப்ரல் 2015. பார்க்கப்பட்ட நாள் 21 October 2011. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  12. 12.0 12.1 "It's talent that matters: Madhu". Times Of India. 29 January 2011. http://timesofindia.indiatimes.com/entertainment/regional/news-interviews/Its-talent-that-matters-Madhu/articleshow/7378489.cms. பார்த்த நாள்: 21 October 2011. 
  13. "Pathinaru Tamil Movie Review – cinema preview stills gallery trailer video clips showtimes". IndiaGlitz. 28 January 2011. Archived from the original on 31 டிசம்பர் 2010. பார்க்கப்பட்ட நாள் 21 October 2011. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  14. "Pathinaaru Movie Review – Tamil Movie Pathinaaru Movie Review". Behindwoods.com. பார்க்கப்பட்ட நாள் 21 October 2011.
  15. "Review: Pathinaru is average – Rediff.com Movies". Rediff.com. 28 January 2011. பார்க்கப்பட்ட நாள் 21 October 2011.
  16. "Madhu Shalini - Tamil Cinema Actress Interview - Madhu Shalini | Bala | Vishal | Avan Ivan | Arya". Videos.behindwoods.com. பார்க்கப்பட்ட நாள் 21 October 2011.
  17. "Madhu Shalini turns gangster". Times Of India. 26 August 2011. http://timesofindia.indiatimes.com/entertainment/regional/news-interviews/Madhu-Shalini-turns-gangster/articleshow/9734471.cms. பார்த்த நாள்: 21 October 2011. 

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=மது_சாலினி&oldid=3691859" இலிருந்து மீள்விக்கப்பட்டது