மத்திய அமெரிக்க பசிபிக் தீவுகள்

மத்திய அமெரிக்க பசிபிக் தீவுகள் (Central American Pacific Islands) என்பவை புவியின் மேற்பரப்பில் தாவரங்களின் பரவலை பதிவு செய்வதற்காக உலக புவியியல் திட்டத்தில் பயன்படுத்தப்படும் ஓர் உயிர்ப்புவியியல் பகுதி ஆகும். இத்தீவு நிலை 3 என்ற குறியீட்டால் அடையாளப்படுத்தப்படுகிறது. பசிபிக் பெருங்கடலில் உள்ள மத்திய அமெரிக்காவின் மேற்கு கடற்கரையில் இடம்பெற்றுள்ள கிளிப்பர்டன் தீவு, கோகோசு தீவு மல்பெலோ தீவு போன்ற தீவுகள் இப்பிரிவில் அடங்கியுள்ளன. [1] அரசியல் ரீதியாக பிரான்சுக்குச் சொந்தமான கிளிப்பர்டன் தீவு[2] நிக்கராகுவா மற்றும் கோசுடாரிகா நாடுகளுக்கு வடமேற்கில் அமைந்துள்ளது. கோகோசு தீவும் மால்பெலோ தீவும் பனாமாவிற்கு தெற்கே அமைந்துள்ளன. [3] கோகோசு தீவு கோஸ்டாரிகாவுக்கும்[4] மால்பெலோ தீவு கொலம்பியாவுக்கும்[3] சொந்தமானவைகளாகும்.

மேற்கோள்கள்

தொகு
  1. Brummitt, R.K. (2001), World Geographical Scheme for Recording Plant Distributions: Edition 2 (PDF), International Working Group on Taxonomic Databases For Plant Sciences (TDWG), archived from the original (PDF) on 2016-01-25, பார்க்கப்பட்ட நாள் 2018-01-17
  2. "Eastern Pacific Ocean, southeast of Mexico", Terrestrial Ecoregions, World Wildlife Fund, பார்க்கப்பட்ட நாள் 2018-01-17
  3. 3.0 3.1 Schneider, P., "Malpelo Island the "Mount Everest" of shark and large pelagic diving", Advanced Diver Magazine Digital, பார்க்கப்பட்ட நாள் 2018-01-17
  4. Hogue, C.; Miller, S. (1981), "Entomofauna of Cocos Island, Costa Rica", Atoll Research Bulletin, 250: 1–29