மத்திய கடல்மீன்வள ஆராய்ச்சி நிலையம்

மத்தியக் கடல்மீன்வள ஆராய்ச்சி நிலையம் (Central Marine Fisheries Research Institute - CMFRI) இந்திய அரசின் வேளாண்மை அமைச்சகத்தின் வாயிலாக 1947 ஆம் ஆண்டு நிறுவப்பட்டது. இது 1967 ஆம் ஆண்டு இந்திய வேளாண் ஆய்வுக் கழகத்தின் அங்கமானது. இவ்வாய்வு நிறுவனம் கடல் மீன் வளம் அதன் உற்பத்தி பெருக்கம், பாதுகாப்பு ஆகியவற்றைச் சார்ந்து செயல்பட்டு வருகிறது.

Central Marine Fisheries Research Institute
மத்திய கடல்மீன்வள ஆராய்ச்சி நிலையம்
Logo of CMFRI
நிலையத்தின் சின்னம்
அமைவிடம், ,
இணையதளம்http://www.cmfri.com/

இதன் தலைமையகம் தற்போது கேரளாவில் உள்ள கொச்சி நகரத்தில் இயங்கிவருகிறது. இது 1971 ஆம் ஆண்டு தமிழகத்தில் இராமநாதபுரம் மாவட்டத்தின் மண்டபத்திலிருந்து மாற்றப்பட்டதாகும். இது கடல் மீன் வள ஆய்வில் தனக்கென பல வளர்ச்சிகளை உலகளவில் எட்டியுள்ளது.

கொள்கைகள் தொகு

இந்நிறுவனம் தனக்கென தலையாயக் கொள்கைகளை இந்திய வேளாண்மை ஆய்வுக் கழகத்தின் ஒப்புதலின் படி செயற்படுத்தி வருகிறது.

  • பொருளாதாரத் தனியுரிமைப் பகுதியில் (Exclusive Economic Zone - EEZ) கடல் மீன் வளத்தை சுரண்டுதல் மற்றும் மிதமிஞ்சியிருத்தலைக் கண்காணித்தல்.
  • சூற்றுச்சூழல் மாறுபாடுகள் குறித்து மீன் வளத்தில் ஏற்படும் மாறுபாடுகளை உணர்தல்.
  • துடுப்புமீன் (Finfish), ஓடுமீன் (Shellfish) மற்றும் இதை தவிர்த்த திறந்த கடல்வெளி வளர்ப்புயிர்களை பிடிப்பதற்கு மற்றும் பெருக்குவதற்கு ஏதுவாக தொழில்முறைகளை உருவாக்கல்.
  • கடல் மீன் வளத்தை திட்டமிட்டத் தரவுத்தளத்துடன் தகவர்களஞ்சியமாகச் செயற்பட.
  • தொழில்முறையைக் வணிகரீதியாக இடைமாற்ற, முதுநிலை மற்றும் சிறப்பு பயிற்சிகள், கற்பித்தல் மற்றும் நீட்டிக்கப்பட்ட கல்வித்திட்டத்தை நடத்த.
  • இக்கடல்மீன்கள் குறித்த விழிப்புணர்ச்சியும் படிப்பினையும் கொடுக்க, என்பன. [1]

ஆய்வு நிலையங்கள் தொகு

இந்நிறுவனம் தனக்கென வெவ்வேறு பகுப்புகளை ஏற்படுத்தி வெவ்வேறு இடங்களில் செயற்படுத்தி வருகிறது. அவை நான்கு பகுப்புகளாக ஏற்படுத்தப்பட்டுள்ளன. அவை மேற்மொள்ளும் பணிகள் குறித்து அதன் செயற்பாடு விரிவாக்கம், அதன் ஆளுமை ஆகியவற்றைக் கொண்டு வட்டார மையம், ஆய்வு மையம், களப்பணிமையம், படிப்பினை மையம் என வகுத்து நடத்தி வருகிறது.

வட்டார மையம் தொகு

இந்நிறுவனம் தனக்கென மூன்று வட்டார மையங்களை நடத்தி வருகிறது. அவை மண்டபம் - தமிழ் நாடு, விசாகப்பட்டினம் - ஆந்திர மாநிலம், வெராவல் - குசராத் மாநிலம் ஆகிய இடங்களில் இயங்குகின்றன. இந்நிறுவனங்கள் ஆய்வு, வளர்ச்சி மற்றும் செயலாக்கம் ஆகியவற்றை முறையே செயற்படுத்தி வருகிறது.

ஆய்வு மையம் தொகு

மேற்குக்கடல் மற்றும் கிழக்குக்கடல் ஆகியவற்றில் மீன் வளம் குறித்து கண்காணிக்க ஏழாய்வு மையங்களை நாடு முழுவதும் மங்களூர், கோழிக்கோடு, மும்பை, விழிஞ்சம், கார்வார், தூத்துக்குடி மற்றும் சென்னை ஆகியவற்றில் செயல்படுத்திவருகிறது.

களப்பணிமையம் தொகு

நாடு முழுவது 14 களப்பணி மையங்கள் உள்ளன. அவை கன்னியாக்குமரி, ஓங்கோல், அலிபாக், பட்டுக்கோட்டை, கொடாய், சிரிக்காகுளம், கோவா, நர்சாபூர், நாகப்பட்டினம், சாம்நகர், பாட்கல், பூரி, கொல்லம், ரத்னகிரி, கடலூர் ஆகியன.

படிப்பினை மையம் தொகு

கிரிசி விக்யான் கேந்தரா என்றப் பெயரில் ஞாரக்கல், கொச்சின் என்னும் இடத்தில் நடத்தி வருகிறது.[2]

மேற்கோள் தொகு