இந்திய வேளாண் ஆராய்ச்சிக் குழுமம்

(இந்திய வேளாண் ஆய்வுக் கழகம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

இந்திய வேளாண் ஆராய்ச்சிக் குழுமம் (Indian Council of Agricultural Research – ICAR), இந்தியாவின் தலைநகரமான, புது தில்லியில் இயங்கி வரும் ஒரு தன்னாட்சி அமைப்பாகும். இது இந்திய நடுவண் வேளாண் அமைச்சகத்தின் வேளாண் ஆய்வு மற்றும் கல்வித்துறையின் கீழ் இயங்கிவருகிறது. இதற்கு முன்னர் இக்குழுமம் வேந்திய வேளாண் ஆய்வுக் குழுமமாக அறியப்பட்டது (Imperial Council of Agricultural Research). இந்நிறுவனம் 1860ல் வேளாணரசு ஆணைக்குழுவின் ஆணைக்கிணங்க 16 சூலை, 1929 ஆம் ஆண்டு சமூககப்பதிவுச் சட்டத்தின் கீழ் பதிவுச்சமூகமாக நிறுவப்பட்டது.

இந்திய வேளாண் ஆராய்ச்சிக் குழுமம்
ஆங்கிலத்தில் குறிக்கோளுரை
"Agrisearch with a human touch"
வகைபதிவுசெய்யப்பட்ட சங்கம்
உருவாக்கம்16 சூலை 1929
நிதிநிலை5,392 கோடி (US$680 மில்லியன்) (2012–13)[1]
தலைவர்ராதா மோகன் சிங்
அமைவிடம், ,
வளாகம்நகரம்
சுருக்கப் பெயர்ICAR
இணையதளம்www.icar.org.in

இக்குழுமமானது வேளாண்மையில் ஒருங்கிணைந்த, வழிநடத்தல் மற்றும் மேலாண் ஆய்வு மற்றும் கல்விப் பணிகளில் தலைச்சிறந்த அமைப்பாக இயங்கிவருகிறது. இதில் தோட்டக்கலை, மீன்வளம் மற்றும் விலங்கியல் ஆகியவற்றை நாடு முழுவதும் ஒருங்கிணைக்கும் அமைப்பாகச் செயல்படுகிறது. இவ்வமைப்பின் கீழ் 90க்கும் மேற்பட்ட நிறுவனங்களும் மற்றும் 45 விவசாயப் பல்கலைக்கழகங்களும் நாடு முழுவதும் பரவிக்கிடக்கின்றன. இது உலகில் காணப்படும் மிகப்பெரிய தாயக வேளாண் அமைப்புகளுள் ஒன்றாகும்.

1950–51களிலிருந்து வேளாண் ஆய்வு மற்றும் தொழில்நுட்ப பங்களிப்பின் மூலம் பசுமைப்புரட்சியில் முதன்மைப் பங்கும் மற்றும் நாட்டின் விவசாய வளர்ச்சியில் பெரும்பங்காற்றியதுடன், நாட்டின் உணவுதானிய உற்பத்தியில் 4 மடங்கு கூடுதல் பெருக்கமும், தோட்டப்பயிர்களில் ஆறுமடங்கும், மீன் உற்பத்தியில் ஒன்பது மடங்கும், பால் மற்றும் முட்டை உற்பத்தியில் முறையே ஆறு மற்றும் 27 மடங்கும் முன்னேற்றம் பெற காரணமாய் இருந்துள்ளது. இது நாட்டின் வேளாண் கல்வியில் தன்னிகர் அடையும் அளவுக்கு பங்களித்துவருகிறது.

இதன் தற்போதைய தலைவர் மத்திய வேளாண் அமைச்சர் [[ராதா மோகன் சிங்]; முனைவர் ஐயப்பன் இதன் தலைமை இயக்குனராகவும் செயற்பட்டு வருகின்றார்.[2]

இந்திய வேளாண் ஆராய்ச்சி நிறுவனங்கள்

தொகு

அக்டோபர்,2017ன் படி இந்திய வேளாண் ஆராய்ச்சி நிறுவனம் (ICAR) பின்வரும் நிறுவனங்களை கொண்டுள்ளது.:[3]

  • 4 தன்னாட்சி பல்கலைக்கழங்கள்
  • 64 ICAR நிறுவனங்கள்
  • 15 தேசிய ஆராய்ச்சி மையம்
  • 6 தேசியப் பணியகம்
  • 13 இயக்குனரகம்/ திட்ட இயக்குனரகம்

தன்னாட்சி பல்கலைக்கழங்கள்

தொகு

நிறுவனங்கள்

தொகு
  • மத்திய வேளாண்வன ஆராய்ச்சி மையம், ஜான்சி
  • வறட்சி மண்டல மைய ஆராய்ச்சி நிறுவனம், ஜோத்பூர்
  • பறவை மைய ஆராய்ச்சி நிறுவனம், இசட்நகர்
  • மத்திய கடலோர வேளாண் ஆராய்ச்சி நிறுவனம், எலா, பழைய கோவா, கோவா
  • மத்திய உள்நாட்டு மீன்வள ஆராய்ச்சி நிறுவனம் பராக்பூர்
  • மத்திய உவர்நீர் மீன் வளர்ப்புக் கழகம் (இந்தியா), சென்னை
  • வறண்டநில தோட்டக்கலை மத்திய நிறுவனம், பிகானர்
  • எருமைமாடு மைய ஆராய்ச்சி நிறுவனம், ஹிஸார்
  • கால்நடை ஆராய்ச்சி மையம், மீரட், உத்தர பிரதேசம்
  • ஆடுகள் ஆராய்ச்சி மையம், மக்தூம்
  • மத்திய மகளிர் வேளாண்மை நிறுவனம், புவனேஸ்வர்
  • மத்திய வேளாண் பொறியியல் நிறுவனம், போபால்
  • மத்திய பருத்தி ஆராய்ச்சி நிறுவனம், நாக்பூர்
  • மீன்வள தொழில்நுட்ப மைய நிறுவனம், கொச்சி
  • நன்னீர் மீன்வளர்ப்பு மைய நிலையம், புவனேசுவர்
  • பருத்தி தொழில்நுட்ப ஆராய்ச்சி மைய நிறுவனம், மும்பை
  • வெப்பமண்டல தோட்டக்கலை மைய நிறுவனம், லக்னோ
  • மிதவெப்பமண்டல தோட்டக்கலை மைய நிறுவனம், ஸ்ரீநகர்
  • அறுவடைக்கு பிந்தைய பொறியியல் மற்றும் தொழில்நுட்பம் மைய நிறுவனம், லூதியானா
  • தீவு வேளாண் ஆராய்ச்சி மைய நிலையம், போர்ட் பிளேர்
  • மத்திய கடல்மீன்வள ஆராய்ச்சி நிலையம், கொச்சி
  • மத்திய பெருந்தோட்ட பயிரக ஆராய்ச்சி நிலையம், காசர்காட்
  • மத்திய உருளைக்கிழங்கு ஆராய்ச்சி நிறுவனம், சிம்லா
  • சணல் மற்றும் நேசிய இழைகள் மத்திய ஆராய்ச்சி நிறுவனம், பாரக்ஸ்போர்
  • வறண்டநில விவசாய மைய ஆராய்ச்சி மையம், ஹைதராபாத்
  • செம்மறி மற்றும் கம்பளி மைய ஆராய்ச்சி நிறுவனம், அவிகானாகர், ராஜஸ்தான்
  • மத்திய உவர்மண் ஆராய்ச்சி நிறுவனம், கர்ணால்
  • மத்திய புகையிலை ஆராய்ச்சி நிறுவனம், ராஜமுந்திரி
  • கிழங்கு பயிர்கள் மைய ஆராய்ச்சி நிறுவனம், திருவனந்தபுரம்
  • கிழக்கு பிராந்தியத்திற்கான இவேஆக ஆராய்ச்சி வளாகம், பாட்னா
  • NEH பிராந்தியத்திற்கான இவேஆக ஆராய்ச்சி வளாகம், பராபனி
  • இந்திய விவசாய ஆராய்ச்சி நிறுவனம், ஜார்கண்ட்
  • இந்திய விவசாய புள்ளிவிவர ஆய்வு நிறுவனம், புது தில்லி
  • இந்திய புல்வெளி மற்றும் ஃபீவென்னர் ஆராய்ச்சி நிறுவனம், ஜான்சி
  • இந்திய வேளாண் பயோடெக்னாலஜி நிறுவனம், ராஞ்சி
  • இந்திய வேளாண் சிஸ்டம்ஸ் ஆராய்ச்சி நிறுவனம், மோடிபுரம்
  • இந்திய தோட்டக்கலை ஆராய்ச்சி நிறுவனம், பெங்களூரு
  • இந்திய சோள ஆராய்ச்சி நிறுவனம், புது தில்லி
  • இந்திய கம்பு ஆராய்ச்சி நிறுவனம், ஹைதராபாத்
  • நேஷனல் ரெசின்ஸ் அண்ட் கூம்ஸ் இன் இந்திய நிறுவனம், ராஞ்சி
  • இந்திய பாம்ஆயில் ஆராய்ச்சி நிறுவனம், ஏலூர், பெடவேகி, மேற்கு கோதாவரி
  • இந்திய எண்ணெய்வித்து ஆராய்ச்சி நிறுவனம், ஐதராபாத்
  • இந்திய அரிசி ஆராய்ச்சி நிறுவனம், ஐதராபாத்
  • இந்திய பருப்பு ஆராய்ச்சி நிறுவனம், கான்பூர்
  • இந்திய விதை ஆராய்ச்சி நிறுவனம், மயூ
  • இந்திய மண் அறிவியல் நிறுவனம், போபால்
  • இந்திய மண் மற்றும் நீர் பாதுகாப்பு நிறுவனம், டெஹ்ராடூன்
  • இந்திய நறுமணப் பொருள் ஆய்வு நிறுவனம், காலிகட்
  • இந்தியக் கரும்பு ஆராய்ச்சி மையம், லக்னோ
  • இந்திய காய்கறி ஆராய்ச்சி நிறுவனம், வாரணாசி
  • இந்திய நீர் மேலாண்மை நிறுவனம், புவனேஸ்வர்
  • இந்திய கோதுமை மற்றும் பார்லி ஆராய்ச்சி நிறுவனம், கர்னல்
  • கரும்பு இனப்பெருக்க ஆராய்ச்சி நிறுவனம், கோயம்புத்தூர்
  • தேசிய கால்நடை மருத்துவ நோய் மற்றும் நோயியல் தகவல் நிறுவனம், ஹெபல், பெங்களூரு
  • தேசிய கால்நடை உணவியல் மற்றும் உடலியல் நிறுவனம், பெங்களூரு
  • தேசிய வேளாண் ஆராய்ச்சி மற்றும் மேலாண்மை அகாடமி, ஹைதராபாத்
  • தேசிய உயிரற்ற கட்டுப்பட்டு மேலாண்மை நிறுவனம், மாலிகோன், மகாராஷ்டிரா
  • தேசிய வேளாண் பொருளியல் மற்றும் கொள்கை ஆராய்ச்சி நிறுவனம், புது தில்லி
  • தேசிய உயிரியல் கட்டுப்பாட்டு மேலாண்மை நிறுவனம், ராய்பூர்
  • தேசிய உயர் பாதுகாப்பு விலங்கு நோய்களுக்கான நிறுவனம், போபால்
  • தேசிய சணல் மற்றும் அல்பேடி ஃபைபர் டெக்னாலஜி ஆராய்ச்சி நிறுவனம், கொல்கத்தா
  • தேசிய நெல் ஆராய்ச்சி நிறுவனம், கட்டாக்
  • விவேகானந்தா பரவதிய கிருஷி அனுசந்தன் சன்ஸ்தான், அல்மோரா

தேசிய ஆராய்ச்சி மையங்கள்

தொகு
  • தேசிய ஒருங்கிணைந்த பூச்சி மேலாண்மை மையம், புது தில்லி
  • தேசிய வாழை ஆராய்ச்சி மையம், திருச்சி
  • தேசிய சிட்ரஸ் ஆராய்ச்சி மையம், நாக்பூர்
  • தேசிய திராட்சை ஆராய்ச்சி மையம், புனே
  • தேசிய லிச்சி ஆராய்ச்சி மையம், முசப்தர்பூர்
  • தேசிய மாதுளை ஆராய்ச்சி மையம், சோலாப்பூர்
  • தேசிய ஓட்டக ஆராய்ச்சி மையம், பிகானர்
  • நேஷனல் ரிசர்ச் சென்டர் ஆன் ஈக்வின்ஸ், ஹிஸார்
  • தேசிய ஒருங்கிணைந்த வேளாண்மை ஆராய்ச்சி மையம், மோதிஹாரி
  • தேசிய இறைச்சி ஆராய்ச்சி மையம், ஹைதராபாத்
  • தேசிய மிதுன் ஆராய்ச்சி மையம், மெட்ஸிபீமா, நாகாலாந்து
  • தேசிய மல்லிகை ஆராய்ச்சி மையம், பாக்கிங், சிக்கிம்
  • தேசிய பன்றி ஆராய்ச்சி மையம், குவஹாத்தி
  • தேசிய தாவர பயோடெக்னாலஜி ஆய்வு மையம், புது தில்லி
  • தேசிய விதை மசாலா ஆராய்ச்சி மையம், அஜ்மீர்
  • தேசிய யாக் ஆராய்ச்சி மையம், மேற்கு கெமாங்

செயலகம்

தொகு
  • தேசிய வேளாண் பூச்சி வளங்கள் செயலகம், பெங்களூரு
  • தேசிய வேளாண் முக்கிய குறு உயிரினங்களின் செயலகம், மாவ் நாத் பன்ஜன், உத்தரப் பிரதேசம்
  • தேசிய விலங்கு மரபணு வளங்கள் செயலகம், கர்னல், ஹரியானா
  • தேசிய மீன் மரபியல் வளங்களின் செயலகம், லக்னோ, உத்தரப் பிரதேசம்
  • தேசிய தாவர மரபணு செயலகம், புது தில்லி
  • தேசிய நில கணக்கெடுப்பு மற்றும் நில பயன்பாட்டு திட்டமிடல் பணியகம், நாக்பூர், மகாராஷ்டிரா

இயக்குநரகம் / திட்ட இயக்குநரகம்

தொகு
  • முந்திரி ஆராய்ச்சி இயக்குநரகம், புட்டூர்
  • குளிர் நீர் மீன்பிடி ஆராய்ச்சி இயக்குநரகம், பீம்தால், நைனிடால்
  • மலர் ஆராய்ச்சி இயக்குநரகம், புனே, மகாராஷ்டிரா
  • வேளாண் ஆராய்ச்சி இயக்குநரகம், ஜுனாக்
  • விவசாயம் சார்ந்த அறிவு மேலாண்மை இயக்குநரகம் (DKMA), புது தில்லி
  • மருத்துவ மற்றும் நறுமண தாவரங்கள் ஆராய்ச்சி இயக்ககம், ஆனந்த்
  • காளான் ஆராய்ச்சி இயக்குநரகம், சோலன்
  • கோழி வளர்ப்பு இயக்குநரகம், ஹைதராபாத்
  • ரேபீஸ் & கடுகு ஆராய்ச்சி இயக்குநரகம், பரத்பூர்
  • சோயா ஆராய்ச்சி மையம், இந்தோர்
  • களை ஆராய்ச்சி இயக்குநரகம், ஜபல்பூர்
  • வெங்காயம் மற்றும் பூண்டு ஆராய்ச்சி இயக்குநரகம், புனே
  • கால் மற்றும் வாய் நோய் திட்ட இயக்குநரகம், முக்தேஷ்வர்

விருதுகள்

தொகு

இந்திய வேளாண் ஆராய்ச்சி குழுமம் பின்வரும் விருதுகளை வழங்குகிறது:[4]

  • சௌத்ரி தேவி லால் சிறந்த அகில இந்திய ஒருங்கிணைந்த ஆராய்ச்சி திட்ட விருது
  • ரஃபி அகமது கித்வாய் விருது
  • பழங்குடியினப் பகுதிகளுக்கான பக்ருதீன் அலி அகமது விருது
  • அரி ஓம் ஆசிரம அறக்கட்டளை விருது
  • சிறந்த முனைவர் பட்ட ஆய்வறிக்கைக்கான ஜவஹர்லால் நேரு விருது
  • வசந்தராவ் நாயக் விருது
  • லால் பகதூர் சாஸ்திரி இளம் விஞ்ஞானி விருது
  • பாரதரத்னா முனைவர் சி சுப்பிரமணியம் சிறந்த ஆசிரியர் விருது
  • பஞ்சாப் ராவ் தேஷ்முக் பெண் வேளாண் விஞ்ஞானி விருது
  • வேளாண்மை ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டில் இதழியல் துறையில் சிறந்து விளங்கியதற்காக சவுத்ரி சரண் சிங் விருது
  • என்.ஜி. பலதரப்பட்ட விவசாயத்துக்கான ரங்கா விவசாயி விருது
  • ஜக்ஜீவன் ராம் விவசாய விருது
  • சுவாமி சகஜானந்த் சரஸ்வதி விரிவாக்க விஞ்ஞானி/தொழிலாளி விருது
  • வேளாண்மை மற்றும் அதனுடன் தொடர்புடைய அறிவியல் துறையில் சிறந்த பல்துறை குழு ஆராய்ச்சிக்கான விருது
  • தேசிய க்ரிஷி விக்யான் கேந்திரா விருது
  • முனைவர் ராஜேந்திர பிரசாத் புருஸ்கர் விவசாயம் மற்றும் அதனுடன் தொடர்புடைய அறிவியல் துறையில் இந்தியில் தொழில்நுட்ப புத்தகங்களுக்கு
  • பழங்களை வளர்ப்பதில் சிறந்து விளங்கும் உதயன் பண்டிட் விருது

சர்ச்சைகள்

தொகு

மத்திய அரசாங்கம் தனது 103 தேசிய வேளாண் ஆராய்ச்சி மையங்களுள் ஒரே பயிருக்காக இருவேரு இடங்களில் செயல்படும் 43 நிறுவனங்களை மூட நிதி ஆயோக் பரிந்துரைத்துள்ளது, இதில் தமிழ்நாட்டிலுள்ள மூன்று தேசிய விவசாய ஆராய்ச்சி நிறுவனங்களை மூட உத்தேசித்துள்ளதாகவும் தெரிகிறது. சென்னையிலுள்ள மத்திய உவர்நீர் மீன் வளர்ப்பு ஆராய்ச்சி மையத்தினை கொச்சியில் செயல்படும் நிறுவனத்துடன் இணைக்க உள்ளதாகவும் நவம்பர் 2017ல் செய்தி வந்ததையடுத்து தமிழக விவசாயிகள் சார்பில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. [5]

மேற்கோள்

தொகு
  1. "icar". ICAR.
  2. http://www.icar.org.in/en/aboutus.htm
  3. "ICAR Institutions, Deemed Universities, National Research Centres, National Bureaux & Directorate/Project Directorates | भारतीय कृषि अनुसंधान परिषद". icar.gov.in. Indian Council of Agricultural Research. பார்க்கப்பட்ட நாள் 26 October 2017.
  4. "Merits and Awards - ICAR". www.icar.org.in. Archived from the original on 2003-08-29.
  5. "தமிழகத்தில் இயங்கி வரும் மத்திய வேளாண் ஆராய்ச்சி நிலையங்களை மூட முடிவு". தினமணி. பார்க்கப்பட்ட நாள் 24 நவம்பர் 2017.