இந்தியக் கால்நடை ஆராய்ச்சி நிறுவனம்
இந்தியக் கால்நடை ஆராய்ச்சி நிறுவனம் (Indian Veterinary Research Institute)(IVRI) உத்தரப் பிரதேசம் மாநிலத்தில் பரேலியில் உள்ள உள்ள இட்டாநகரில் உள்ளது. இது கால்நடை மருத்துவம் மற்றும் அதனுடன் தொடர்புடைய துறைகளில் மேம்பட்ட ஆராய்ச்சி நிறுவனமாகும். முக்தேஷ்வர், பெங்களூர், பாலம்பூர், புனே, கொல்கத்தா மற்றும் ஸ்ரீநகர் ஆகிய இடங்களில் இந்நிறுவனத்தின் வட்டார வளாகங்கள் உள்ளன. முன்பு இம்பீரியல் பாக்டீரியாலஜி ஆய்வகம் என்று அழைக்கப்பட்ட இந்நிறுவனம் 1925ஆம் ஆண்டில் இம்பீரியல் கால்நடை ஆராய்ச்சி நிறுவனம் என மறுபெயரிடப்பட்டது. இந்திய விடுதலைக்குப் பின் இந்தியக் கால்நடை ஆராய்ச்சி நிறுவனம் என்று பெயர் மாற்றப்பட்டது. இந்த நிறுவனத்தின் நிர்வாக கட்டுப்பாடு அலுவலகம், புது தில்லியில் உள்ள இந்திய வேளாண் ஆராய்ச்சி குழுமத்தின் (ஐ.சி.ஏ.ஆர்) கீழ் உள்ளது. கல்வி அமைச்சு, அரசு பல்கலைக்கழக மானியக் குழு பரிந்துரையின் பேரில் இந்நிறுவனம் நவம்பர் 16, 1983 அன்று பல்கலைக்கழக மானியக் குழு சட்டம்,1956இன் பிரிவு 3இன் கீழ் நிகர்நிலை பல்கலைக்கழக தகுதிபெற்றது. 2015ஆம் ஆண்டில் 20 சேர்க்கை இடங்களுடன் இளநிலை பாட வகுப்பு தொடங்கப்பட்டது. பின்னர் இந்த இடங்களின் எண்ணிக்கை 2019ஆம் ஆண்டில் 24 என உயர்த்தப்பட்டது.
நுழைவாயில் | |
வகை | ஆராய்ச்சி நிறுவனம் |
---|---|
உருவாக்கம் | 1889 |
பணிப்பாளர் | மருத்துவர் திரிவேணி தத் (பொ.)[1] |
கல்வி பணியாளர் | 250 |
பட்டப்பின் படிப்பு மாணவர்கள் | 350 |
அமைவிடம் | , , இந்தியா |
வளாகம் | நகரம் |
இணையதளம் | www |
குறிப்பிடத்தக்க பழைய மாணவர்கள்
தொகுகண்ணேபொயினா நாகராஜு, பேராசிரியர்; ஸ்தாபகத் தலைவர், ஸ்கூல் ஆஃப் பார்மசி மற்றும்பார்மாசூட்டிகல் சயின்சஸ், பிங்காம்டன் பல்கலைக்கழகம்