மனத்துயர் செபம்

மனத்துயர் செபம் என்பது ஒருவர் தாம் செய்த பாவங்களுக்காக மனத்துயரினை வெளிப்படுத்தி கடவுளிடம் மன்னிப்பை வேண்டும் கத்தோலிக்க மன்றாட்டாகும். இது திருவழிபாட்டிலோ, திருஅருட்சாதனங்களிலோ அல்லது ஆன்ம சோதனையின்போதோ பயன்படுத்தப்படலாம். மனத்துயர் செபம் என்பது கத்தோலிக்க திருச்சபையின் ஒரு தனி செபத்துக்கு அளிக்கப்படும் பெயரல்ல. மாறாக இது ஒரு செப வகையாகும். பலன்கள் குறித்த விதிமுறைகல் நூல் எல்லாம் வல்ல இறைவனிடமும், திருப்பாடல் 130, திருப்பாடல் 51, தவத்திருப்பாடல்கள் ஆகியவற்றை பரிந்துரைக்கின்றது.[1]

லூதரனியம் மற்றும் ஆங்கிலிக்க திருச்சபையிலும் இதனை ஒத்த பழக்கம் உண்டு.

மனத்துயர் செபம் தொகு

திருப்பலிக்கு வெளியே, குறிப்பாக ஒப்புரவு அருட்சாதனத்தில் மனத்துயர் செபம் என்பது பின்வரும் செபத்தினைக்குறிக்க பயன்படுகின்றது:

என் இறைவா, நன்மை நிறைந்தவர் நீர். அனைத்திற்கும் மேலாக அன்புக்கு உரியவர் நீரே. என் பாவங்களால் உம்மை மனநோகச் செய்துவிட்டேன். ஆகவே, நான் குற்றங்கள் பல செய்தேன் எனவும், நன்மைகள் பல செய்யத் தவறினேன் எனவும், மனம் நொந்து வருந்துகிறேன். உமது அருள் துணையால் நான் மனம் திரும்பி இனிமேல் பாவம் செய்வதில்லை என்றும், பாவத்துக்கு ஏதுவான சூழ்நிலைகளை விட்டு விலகுவேன் என்றும் உறுதி கொடுக்கிறேன். எங்கள் மீட்பராம் இயேசு கிறிஸ்துவின் பாடுகளின் பயனாக, இறைவா, என்மேல் இரக்கமாயிரும். ஆமென்.

இதன் சுருக்கமான வடிவம்:

என் இறைவனாகிய தந்தையே! நீர் நன்மை நிறைந்தவர், எனவே எல்லாவற்றிற்கும் மேலாக உம்மை நான் அன்பு செய்கிறேன்.என் பாவங்களால் உமது அன்பை மறந்ததற்காக மனம் வருந்துகிறேன்.உமது அருளுதவியால் இனிமேல் பாவம் செய்வதில்லையென்று உறுதி கூறுகிறன். ஆமென்.

மேற்கோள்கள் தொகு

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=மனத்துயர்_செபம்&oldid=3223766" இருந்து மீள்விக்கப்பட்டது