மனபாச குருபரா

ஒடியா இந்துக்களால் கொண்டாடப்படும் ஒரு திருவிழா

  மானபசா குருபரா என்பது இந்தியாவின் ஒடிசா மாநிலத்தில் உள்ள ஒடியா இந்துக்களால் கொண்டாடப்படும் ஒரு திருவிழா ஆகும். ஆந்திரப்பிரதேசம், சத்தீஸ்கர், தெற்கு ஜார்க்கண்ட் மற்றும் தென்மேற்கு வங்காளத்தில் வாழும் ஒடிய மக்களும் இவ்விழாவை சிறப்பாக கொண்டாடுகிறார்கள். இத்திருவிழாவில் மகாலக்ஷ்மி தேவியே பிரதான தெய்வம். தேவி, ஒவ்வொரு வீட்டிலும் வந்து துன்பம் நீக்கி இன்பத்தை அளிப்பாள் என்பது மக்களின் நம்பிக்கை.மார்கழி மாதம் ஒவ்வொரு வியாழன் அன்றும் இவ்விழா நடைபெறுகிறது. [1] [2] [3]

மனபாச குருபரா
Manabasa Gurubara Mahalaxmi puja.jpg
கடைபிடிப்போர்ஒடிய மக்கள்
வகைஇந்து
அனுசரிப்புகள்லட்சுமி பூஜை
தொடக்கம்ஒடிய நாட்காட்டியில் மார்கசிரா மாதத்தின் முதல் வியாழக்கிழமை
முடிவுஒடிய நாட்காட்டியில் மார்கசிரா மாதத்தின் கடைசிவியாழக்கிழமை
நிகழ்வுவருடந்தோறும்

லட்சுமி தேவி சுத்தமான வீடுகளுக்கு செல்லவே விரும்புவதாக நம்பப்படுகிறது, எனவே அனைத்து பெண்களும் தங்கள் வீடுகளை சுத்தம் செய்து பின்னர் வீட்டை ஜோதி சிட்டா எனப்படும் மாவுக்கோலம் இட்டு தேவியை வரவேற்கும் பொருட்டு தங்கள் வீடுகளை அலங்கரிக்கிறார்கள்.[4] கிராமத்தின் மிக அழகான வீட்டிற்கு லட்சுமி தேவி வருகை தருவதோடு, அந்த வீட்டில் உள்ளவர்களுக்கு பணமும் செழிப்பும் கிடைக்கும் என்று நம்பப்படுகிறது.

வீட்டை சுத்தப்படுத்தி, தேவியை வரவேற்க இடப்பட்டுள்ள கோலம்

வரலாறுதொகு

இந்த திருவிழா லக்ஷ்மி புராணத்தில் உள்ள லட்சுமி தேவியின் புராணத்தை அடிப்படையாகக் கொண்டது. இந்த புராணத்தில், ஒருமுறை லக்ஷ்மி தேவி, தாழ்த்தப்பட்ட சாதிப் பெண்ணான ஷ்ரியாவைச் சந்தித்தாள், அதற்காக ஜெகநாதரின் மூத்த சகோதரர் பலராம் லட்சுமியிடம் கோபமடைந்தார், இதனால் லட்சுமி இந்தியாவின் நான்கு புனித ஸ்தலங்களில் ஒன்றான பூரியில் உள்ள ஜகன்னாதர் கோயிலில் இருந்து வெளியேற்றப்பட்டார். லக்ஷ்மி கோவிலை விட்டு வெளியேறி, தனது கணவனையும் மூத்த மைத்துனரையும் உணவு, தண்ணீர் அல்லது தங்குமிடம் இல்லாமல் நீண்டகால சோதனையை அனுபவிக்கும்படி சபித்து அவமானத்திற்குப் பழிவாங்குகிறார். இது அந்த காலத்தில் சமூகத்தில் நிகழ்ந்த தீண்டாமை கொடுமையை விவரிக்கிறது. அப்படி வெளியேற்றப்பட்ட லட்சுமி தேவியை ஓடிய மக்கள் ஒவ்வொருவரும் தங்கள் வீடுகளில் ஏற்றுக்கொண்டு உணவளித்து வருவது என்பது சடங்காகும். இது சமூகத்தில் நிலவும் தீண்டாமைக் கொடுமைகளுக்கு எதிராக புராணம் குரல் எழுப்புகிறது. மேலும் இது பெண்ணியத்தின் முக்கியத்துவத்தையும் வலியுறுத்துகிறது, மேலும் ஆண் மேலாதிக்கத்தை எதிர்க்க பெண் சக்திக்கு அதிகாரம் அளிக்கிறது. இந்த லட்சுமி புராணத்தின் படி, லட்சுமி தேவிக்கு மட்டுமே பூஜை செய்யப்படுகிறது. [5]

மேற்கோள்கள் தொகு

  1. "In Pics: Manabasa Gurubar enters its third phase". 2015-12-15 அன்று மூலம் பரணிடப்பட்டது.
  2. "Manabasa Gurubara".
  3. "Manabasa Gurubara". 2017-01-11 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2023-02-22 அன்று பார்க்கப்பட்டது.
  4. "Jhooti, Gurubara Chitta - Rangoli :- A Symbol of Traditional Odia Culture : Margasira Masa Sesa Gurubar #Odisha #Festival #Odia". eodisha.org. 29 September 2016 அன்று பார்க்கப்பட்டது.
  5. "Laxmi Purana" (PDF).
"https://ta.wikipedia.org/w/index.php?title=மனபாச_குருபரா&oldid=3716835" இருந்து மீள்விக்கப்பட்டது