மனிதத்தோல்

மனித உடலை மூடிக் கொண்டிருக்கும் ஒரு புற உறுப்பு

மனிதத் தோல் (Human skin) என்பது உடலை மூடிக்கொண்டிருக்கும் ஒரு புலனுறுப்பு (Sense organ) ஆகும்.[1] வயது வந்த ஒரு மானுடத் தோலின் மொத்த பரப்பு இரண்டு சதுர மீட்டர்கள் ஆகும். இத்தோலின் அமைப்பு, மானுட உடலின் எல்லாப் பாகங்களிலும், வேறுபட்டு இருக்கிறது. எடுத்துக்காட்டாக, நமது உள்ளங்கை, உள்ளங்கால், உள்மூக்கு, தலை ஆகிய பகுதிகளில் உள்ள மானுடத் தோல், சில மாற்றங்களுடன் காணப்படுகின்றன. பொதுவாகப் பாலுட்டிகளின் தோலானது, பன்றியின் தோலினைப் போன்று வடிவம் ஒத்துக் காணப்படுகிறது.[2][3]

தோல்
மேற்றோல், dermis, & subcutis]], showing a hair follicle, சுரப்பி, & sebaceous gland
விளக்கங்கள்
அமைப்புபுறவுறைத் தொகுதி
அடையாளங்காட்டிகள்
இலத்தீன்cutis
TA98A16.0.00.002
TA27041
THTH {{{2}}}.html HH3.12.00.1.00001 .{{{2}}}.{{{3}}}
FMA7163
உடற்கூற்றியல்

கருவில் தோன்றும் தோல் தொகு

மானுடப் பெண், கருவுற்ற ஆறாவது வாரத்தில் தோல் வளர்ச்சி பெறத்தொடங்கும். அப்பொழுதுள்ள கருவின் நீளம் 14 மி.மீ. ஆகும். அப்பருவத்திலேயே ஒற்றை அணுக்களால் அமைந்திருக்கும். அங்ஙனம் உருவாகியத் தோலானாது, அக் கருவைப் போர்த்திக் கொண்டிருக்கும். மெல்ல மெல்ல கருவளர்ச்சி அடைந்து, ஒன்பதாவது வாரத்தினை அடையும் போது, மெல்லியத் தோலானது, தடிப்புறத் தொடங்கும். ஏனெனில், உற்பத்தித் துவக்க அணு அடுக்கு (Germinative Layer), வெளித்தோல் அணு அடுக்கு (Periderm), இவற்றிற்கிடையே இடை அடுக்கு (Stratum intermedium) என மூன்று அடுக்குகள் தோன்றியிருக்கும். பத்தாவது வாரத்தில், தோலின் நிறமிகள் (Melanocytes) இயல்பாகவே தோன்றும் என்பது குறிப்பிடத் தகுந்த உடற்செயலியல் ஆகும். தொடர்ந்து வளர்ச்சி அடைந்த அக்கருவானது, பன்னிரண்டு வாரத்தில், பதினெந்து செ.மீ. நீளம் வளர்ந்து இருக்கும். அப்பொழுது தோன்றிய மூன்று அடுக்குகளும், வளர்ந்து தடிமனாக மாறியிருக்கும். கருவின் பதினான்காவது வாரம் முதல் பதினாறாவது வாரம் வரை தொடர்ந்து வளர்ச்சி அடைந்து, எட்டு முதல் பன்னிரண்டு செ.மீ. ஆக மாறியிருக்கும். அதன் வெளித்தோல் அணு அடுக்கில், நிறமித் திசுக்கள் தோன்றி இருக்கும். பதினேழாவது வாரத்தில், 'கெரட்டின்' அணுக்கள் உருவாகி, வெளித்தோலானது முழு வளர்ச்சி யுற்றுத் திகழும்.

மனிதத் தோலின் அமைப்பு தொகு

  1. மேற்தோல் (Epidermis)
  2. அடித்தோல் (Dermis) என இரு பகுதிகளாகப் பிரிக்கலாம்.

மேற்புறத் தோல் தொகு

மேற்தோலும், அடித் தோலும் இணையும் பகுதியானது, ஒழுங்கற்ற விளிம்பாக இருக்கும். அத்தோலின், சில அணு அடுக்குகளின் ஒழுங்கற்ற உருவம், மேற்தோலைத் தள்ளிக் கொண்டு இருப்பதால், இந்த ஒழுங்கற்ற வடிவம் தோன்றுகிறது. மேற்தோல் இரண்டு வகையான அணுக்களை உடையன.

  • காழ்ப்புத் திசு அணுக்கள் என்றும்
  • டெண்ட்ரைட்டிக் அணு அடுக்குகள் என்றும் அழைக்கப்படும்.

காழ்ப்புத் திசு அணுக்கள் பின்னிப் பிணைந்து காணப்படுகின்றன. இதனால் மற்ற அணுக்களை விட, மாறுபட்டுத் தோன்றுகின்றன. காழ்ப்புத் திசு அணுக்கள் இயல்பாகக் கொம்பு அணுக்கள் (Horny Cells) ஆகும். எனவே, மற்ற அணு அடுக்குகளை விட, இவை மாறுபட்டு காணப்படுகின்றன. மேலும், கீழிருந்து மேலாக, நான்கு அணு அடுக்குகளைக் கொண்டவையாக உள்ளன.

  1. அடிப்படை அணு அடுக்கு (Basal Cell Layer)
    இந்த அடுக்கு ஓரணு அடுக்காக, மேற்புறத் தோலின் தூண்போல, செங்குத்தாக ஒன்றோடொன்று இணைக்கப்பட்டு அமைந்து இருக்கும். மேலே உள்ள ஸ்குவோமஸ் அடுக்கோடு, இது இணைந்தும் அமைந்திருக்கும். இந்த அடிப்படை அணு அடுக்குகளில் காணப்படும் மெலனின் குருணைகளால் (Melanin granules), மனிதத்தோலில் நிறம் ஏற்படுகிறது. அடிப்படை அணுக்கள், மேற்புறத்தோலின் அடித்தளப் படலத்தோடு இணைந்து உள்ளது.
  2. ஸ்குவேமஸ் அணு அடுக்கு (Squamous Cell Layer)
    இந்த அடுக்கில், அணுக்கள் பல முனைகளோடு காணப்படும். தோலுக்கு அடியில் படுக்கையாகவும், பல அடுக்குகளாகவும், இயல்பாக 5-10அடுக்குகளாக, காணப்படுகின்றன. இந்த அணுக்களுக்கிடையே உள்ளஇடைவெளியும், அந்த இடைவெளியில் அணுக்களை இணைக்கும் பாலமும், தென்படுகிறது. இந்த அடுக்கின் ஆழத்தில், அடிப்படை அணு அடுக்கும், அதன் மேலே குருணை அணு அடுக்கும் அமைந்து இருக்கும். இவ்வாறக அமைந்துள்ள அணுக்களில், ஒவ்வொன்றிலும் உட்கரு காணப்படுகிறது.
  3. குருணை அணு அடுக்கு (Granular Layer)
    இந்த அடுக்கின் அணுக்கள் யாவும், வைர உருவில். தட்டையாக, ஒளிபுகும் உருவற்ற, காழ்ப்புக் குருணைகளால் நிரப்பப்பட்டு, 1-3 அணு அடுக்குகளாக அமைந்து இருக்கும். இவ்வடுக்கில், மானுடத்தோலின் மற்ற அணுக்கள் அழியும் சூழ்நிலையில், இங்கு கரைக்கப் படுகின்றன. இந்த அணுக்களிலும் உட்கரு உண்டு.
  4. கொம்புரு அணு அடுக்கு (Horny Cell Layer) இவைகளோடு மேற்பரப்பில், உள்ளங்கால், உள்ளங்கைப் பகுதிகளில் மட்டும் காணப்படுகின்றன.
    இவ்வணு அடுக்கின்அணுக்கள், தோலின் மேல் மட்ட அணுக்களாகத் திகழ்கின்றன. எனவே, இவற்றின் அணுக்களில், உட்கரு இல்லாமல் இருக்கின்றன. இந்த அடுக்கின் எண்ணிக்கையும், தடிமனையும் கணக்கிட இயலாது.
  5. ஸ்ட்ரேட்டம் லூசிடம் (Stratum Lucidum) என்ற ஐந்தாவது அடுக்கும் உள்ளது. இந்த லூசிடம் அணு அடுக்கு, கொம்புரு அணுக்களின் மேலே, தோலுக்கு வலுவைக் கொடுக்கின்றது. கொம்புரு அணு அடுக்கின் புறப்பகுதிகள், முறையே உள்ளங்கால், உள்ளங்கை என அழைக்கப் படுகின்றன. இந்த பகுதியில் மட்டும். புரதம் பாஸ்பேட்டு (Phosphate) நிறைந்த கொழுப்பினி (Protein Bound Phospholipids) அதிகமாகக் காணப்படுகின்றன. இதனால் உள்ளங்கைகளிலும், உள்ளங்கால்களிலும் உள்ள தோலில், நீர் புகும் தன்மைக் காணப்படுகிறது.

அடித்தோல் தொகு

அடித்தோலின் இருபத்தைந்துக்கும் மேற்பட்ட உட்கூறுகளை கொண்டவையாக திகழ்கிறது. அவை யாதெனில், - கார்னியல் அணு அடுக்கு , ஸ்பைனோச அணு அடுக்கு, தோலின் நுண்காம்பு, தோலின் வலைப்பின்னல் திசு, தோல்முடிவேரின் நீள்வெட்டுத் தோற்றம், தோல்முடி வேரின் குறுக்குவெட்டுத் தோற்றம், கொழுப்பு - எண்ணெய்ச் சுரப்பி, மயிர் நிமிர்த்தத்தசை, வியர்வைச் சுரப்பி நாளங்கள், தோல்முடியின் மொட்டு / தோல்முடியின் அடிவேர், தோல்முடியின் சிம்பு, வியர்வைச் சுரக்கும் பகுதியின் வெட்டுத் தோற்றம், உடல் தசை, மேல் தோலில் அமைந்துள்ள வியர்வை நாளம், எண்ணெய்ச் சுரப்பி, வியர்வை நாளத்தின் நீள்வெட்டுத் தோற்றம், முடியின் புறணி, முடிவேரின் உள் உறை, முடி வேரின் நார்த்திசு உறை, முடிவேரின் வெளி உறை, முடியின் அகணி, திசுக்கூழ், கொழுப்புத் திசு, சிரைகள், நுண்தமனிகள் ஆகியன ஆகும்.

மேற்கோள்கள் தொகு

  1. "Skin care" (analysis), Health-Cares.net, 2007, webpage:HCcare பரணிடப்பட்டது 12 திசம்பர் 2007 at the வந்தவழி இயந்திரம்
  2. Herron, Alan J. (5 December 2009). "Pigs as Dermatologic Models of Human Skin Disease" (PDF). ivis.org. DVM Center for Comparative Medicine and Department of Pathology Baylor College of Medicine Houston, Texas. பார்க்கப்பட்ட நாள் 27 January 2018. pig skin has been shown to be the most similar to human skin. Pig skin is structurally similar to human epidermal thickness and dermal-epidermal thickness ratios. Pigs and humans have similar hair follicle and blood vessel patterns in the skin. Biochemically pigs contain dermal collagen and elastic content that is more similar to humans than other laboratory animals. Finally pigs have similar physical and molecular responses to various growth factors.
  3. Liu, J., Kim, D., Brown, L., Madsen, T., Bouchard, G. F. "Comparison of Human, Porcine and Rodent Wound Healing With New Miniature Swine Study Data" (PDF). sinclairresearch.com. Sinclair Research Centre, Auxvasse, MO, USA; Veterinary Medical Diagnostic Laboratory, Columbia, MO, USA. Archived from the original (PDF) on 27 ஜனவரி 2018. பார்க்கப்பட்ட நாள் 27 January 2018. Pig skin is anatomically, physiologically, biochemically and immunologically similar to human skin {{cite web}}: Check date values in: |archive-date= (help)CS1 maint: multiple names: authors list (link)
"https://ta.wikipedia.org/w/index.php?title=மனிதத்தோல்&oldid=3691938" இலிருந்து மீள்விக்கப்பட்டது