மேற்றோல்
மேற்றோல் அல்லது மேற்தோல் (epidermis) எனப்படுவது மனித தோலின் வெளியே உள்ள படையில் காணப்படும் உயிரணுக்கலால் உருவாக்கப்பட்டதொன்றாகும்.[1]
மேற்றோல் Epidermis | |
---|---|
வெள்ளைப் பட்டியில் பிரிக்கப்பட்ட மேற்தோல் திசுவியல் படம் | |
மேற்தோலிற்குரிய அடுக்குகளை விவரிக்கும் திசுவியல் படம். | |
விளக்கங்கள் | |
அடையாளங்காட்டிகள் | |
இலத்தீன் | Epidermis |
MeSH | D004817 |
TA98 | A16.0.00.009 |
TA2 | 7046 |
TH | TH {{{2}}}.html HH3.12.00.1.01001 .{{{2}}}.{{{3}}} |
FMA | 70596 |
உடற்கூற்றியல் |
மேற்றோல் ஆனது செதில்கலாளான வரிகொண்ட புறத்தோலாகும் . இவை பெருகும் மற்றும் பெருகா கொம்புறுக்கலங்களால் ஆக்கப்பட்டுள்ளது. இதுவே உடலை பல்வேறுபட்ட எதிரிகளிடம் இருந்து பாதுகாக்கும் பிரதான தடுப்பு வேலி ஆகும். இது தொற்று நோய்க்காரணிகளை உடலினுள் செல்லவிடாது தடுக்கிறது. மேலும் நீரிழப்பின் மூலம் உடலிலிருந்து வெளியேறும் நீரின் அளவையும் சீராக்குகிறது.
மனித உடலின் மிகவும் மெல்லிய மேற்றோல் கண் இமையிலும் (0.05 mm/0.020 in) மிகவும் தடித்த மேற்றோல் உள்ளங்கை மற்றும் உள்ளங்காலிலும் (1.5mm/0.059 in) காணப்படுகிறது
கட்டமைப்பு
தொகுகலக்கூறுகள்
தொகுமேற்றோலானது கலனற்றது. இது பொதுவாக சூழ்ந்துள்ள காற்றில் கலந்துள்ள ஒட்சிசனாலேயே பிரத்தியேகமாக ஊட்டமடைகிறது. இது 95% கொம்புறுக்கலங்களால் ஆனது. இருப்பினும் மெலனோசைட், இலங்ககானின் கலங்கள், மேர்கல் கலங்கள் மற்றும் அழற்சி கலங்களும் காணப்படுகிறது. தோல் காம்புகளிடையே கீழ்நோக்கி வெளியே நீட்டப்பட்டுள்ள தடிப்பாக்கங்கள் “Rete ridges” எனப்படும். மேற்றோலுக்கு கீழே புன்னாளம் மற்றும் புன்னாடி உடன் தொடர்புபட்ட நிலையில் குருதி மயிர்த்துளைகள் காணப்படுகிறது
படைகள்
தொகுமேற்றோலானது 4 அல்லது 5 படைகளால் ஆக்கப்பட்டிருக்கும். இந்த படைகளின் எண்ணிக்கை தோலின் பகுதிகளுக்கு ஏற்றாற் போலவே மாறுபடும். இப்படைகளின் வரிசையானது,
- கரட்டுப்படை: (stratum corneum)
-
- இவை 10 முதல் 30 வரையான பன்முகி உருவான, கருவற்ற கோர்னியோசைட்டு (கொம்புறுக்கல திரிபடைதலின் இறுதிப்படி) இனால் உருவாகும். உள்ளங்கை மற்றும் உள்ளங்காலில் அதிகளவான படைகள் காணப்படும். கோர்னியோசைட்டு புரத உறையினால் சூழபட்டிருக்கும்.
- இவற்றுள் நீரை தேக்கி வைத்துள்ள கெரட்டின் புரதங்களும் காணப்படும். இவை வெளிக்கல இடைவெளியில் இலிப்பிட்டு படையினால் சூழப்பட்டிருக்கும். மேற்றோலின் தடுப்புக்கான தொழிற்பாடுகள் பல இப்படையினாலேயே ஆகும்.
- கசிவுப்படை (stratum lucidum, உள்ளங்கை, உள்ளங்காலில் மட்டும் காணப்படும் )
- உள்ளங்கை மற்றும் உள்ளங்காலில் காணப்படும் தோல் தடிப்பான தோல் எனப்படும். ஏனெனில் 4 மேற்றோல் படைக்கு பதிலாக இங்கு 5 படைகள் காணப்படும் .
- மணியுருப்படை : (stratum granulosum)
- கொம்புறுக்கலங்கள் தனது கருவை இழப்பதால் தோன்றும் குழியவுரு மணியுருவாகும். மடிப்பு நிலை உடல்களின் இடையிலிருக்கும் கொம்புறுக்கலங்களிலுள்ள இலிப்பிட்டுகள் புறக்குழியமாதலூடாக மேலதிக கல இடைவெளியில் வெளியேற்றி ஒரு இலிப்பிட்டு தடுப்பினை உருவாக்கும். இந்த முனைவாக்கமுடைய இலிப்பிட்டு பின்னர் முனைவாக்கமற்ற இலிப்பிட்டாக மாற்றியமைக்கப்பட்டு கல மேற்பரப்பிற்கு சமாந்தரமாக அடுக்கப்படும். உதாரணமாக பொஸ்போ இலிப்பிட்டு சுயாதீன கொழுப்பமிலமாக மாறும்.
- கூறணுப்படை (stratum spinosum)
- கொம்புறு கலங்கள் ஊடாக தொடர்புபட்டு மடிப்புநிலை உடல்களை கொல்கி உடலிலிருந்து தயாரிக்க தொடங்கும் . இது முனைவாக்கமுடைய இலிப்பிட்டு, பொஸ்போ இலிப்பிட்டு மற்றும் அவசேப நொதியங்களால் செறிவுற்றிருக்கும் . இலங்ககானின் கலங்கள் மற்றும் நோய் எதிர்ப்புள்ள கலங்கள் இப்படையின் நடுவே காணப்படும் .
- அடித்தளப்படை/கிருமிகளின் படை(stratum basale/germinativum).
- பெருகும் மற்றும் பெருகா கொம்புறுக்கலங்களால் பிரதானமாக ஆக்கப்பட்டு இழைமத்தினால் அடித்தள மென்றகற்றோடு இது இணைக்கப்பட்டிருக்கிறது. இந்தப்படை மற்றும் இதர படைகளில் ஒருங்குமுனைப்புகளினூடாக பெருமளவான கொம்புறுக்கலங்களோடு மெலனோசைட் காணப்படுகிறது. விரல் நுனி மற்றும் உதடு போன்ற தொடு உணர்திறன் கூடிய இடங்களின் மேல் கூடிய அளவில் மெர்கல் கலங்கள் காணப்படுகிறது. இவை சரும நரம்புகளுடன் அதிகம் தொடர்புபட்டிருக்கும். .
அடித்தளப்படை மற்றும் கூறணுப்படையினை ஒன்று சேர “மல்பிகியன் படை” (stratum malpighi) என அழைப்பர்.
மேற்றோலானது அதன் அடித்தள இழையமான அடித்தோலிலிருந்து அடித்தள மென்றகட்டின் மூலம் பிரிக்கப்பட்டுள்ளது
கலஇயக்கவியல்
தொகுகலப்பிரிகை
தொகுசெதில்களாலான வரியுடைய புறத்தோல் அடித்தள படையில் நிகழும் கலப்பிரிகையின் மூலம் பராமரிக்கப்படுகிறது. திரிபடையும் கலமானது அடித்தள மென்றகட்டில் இருந்து பிரிந்து மேற்றோல் படையூடாக வெளிநோக்கி இடம்பெயரும் . இத்திரிபடைதலானது கரட்டுப்படையில் பல்வேறு நிலைகளில் தனது கருவை இழந்து செதில்தாள்களுடன் சேரும். இறுதியில் இவை தோலின் மேற்பகுதியிலிருந்து உதிர்ந்து விழும். திரிபடைந்த கொம்புறுக்கலங்கள் கெரட்டின் புரதத்தை சுரக்கும். இது புறவணுவின் உருவாக்கத்தில் முக்கிய பங்களிப்பு ஆற்றுகிறது. இது தோலின் தடைச்செயற்பாட்டிற்கு மிகவும் முக்கிய பகுதியாகும்.
சாதாரண தோலில், கொம்புறுக்கலங்களின் உற்பத்தியானது அதன் இழப்பிற்கு சமமாக காணப்படும். கலமொன்றிற்கு அடித்தள படையிலிருந்து மணியுரு படைக்கு செல்ல 2 வாரங்கள் எடுக்கும். மேலதிகமாக 4 வாரங்கள் கரட்டுப்படலத்தை கடக்க எடுக்கும். முழு மேற்றோலும் புதிய கலவளர்ச்சியின் மூலம் 48 நாட்களில் மாற்றியமைக்கப்படுகிறது
கல்சிய செறிவு
தொகுமேற்றோல் முழுவதுமான கொம்புறுக்கலத்தின் திரிபானது பகுதியாக கல்சியம் படித்திறனின் ஊடாகவே நிகழ்கிறது. இப்படித்திறனானது அடித்தள படையிலிருந்து வெளியே உள்ள மணியுரு வரை அதிகரிக்கும். கரட்டுப்படலத்தில் இது குறைவடையும். இங்கு கல்சியம் செறிவானது மிகவும் குறைவாகும். ஏனெனில் இந்த காய்ந்த கலங்களால் அயன்களை கரைவடைய செய்ய முடியாது. இந்த கல்சியம் படித்திறன் கொம்புறுக்கல திரிபுக்கு சமாந்தரமாவதால் இது மேற்றோல் உருவாக்கத்தின் பிரதான சீர்படுத்தி எனப்படும்.
வெளிக்கலத்தில் உள்ள கல்சியம் செறிவு உயர்வானது உட்கல சுயாதீன கல்சியம் செறிவை தூண்டும். இந்த கலவக அதிகரிப்பானது ஒரு பகுதியளவு உள்ளக சேமிப்பகத்திலிருந்து வெளியேறும் கல்சியத்தில் இருந்தும் மற்றைய பகுதி கல்சியம் - உணர் குளோரைட்டு பாதைகள் மற்றும் கல்சியம் ஊடுருவக்கூடிய சுயாதீன மின்னழுத்த கற்றயன் பாதைகள் மூலமாக மாற்று மென்படல கல்சியப்பெருக்கிலிருந்தும் ஆகும். மேலும், உட்கல கல்சிய செறிவு அதிகரிப்புக்கு வெளிக்கல கல்சியம்-உணர் (CaSR) வாங்கிகளும் காரணம் என நம்பப்படுகிறது.
வளர்ச்சி
தொகுமேற்றோல் உருவாக்கமானது மைய நரம்புத் தொகுதி உருவாக்கத்துக்கு பின் முளையத்தை சூழ்ந்துள்ள கலங்களில் தொடங்கும். பெருமளவிலான முள்ளந்தண்டுளிகள் இந்த ஒரு படல கட்டமைப்பு விரைவாக இரு-படல இழையமாக மாறும். இந்த தற்காலிக வெளிப்படலம், உள்ளக அடித்தள படை உருவானதன் பின்னர் அகற்றப்படும்.
இந்த உள்படையானது கிருமிகளின் படை எனப்படும். இதுவே அனைத்து மேற்றோல் கலங்களும் உருவாக காரணமாகும். இது பிரிவடைந்து புற கூறணுப்படை உருவாகும். இவ்விரு படைகளிலும் காணப்படும் கலங்கள் மார்செல்லோ மல்பிகி இன் பின்னர் மல்பிகியன் படைகள் என அழைக்கப்படும். இது மேலும் பிரிவடைந்து மேலோட்டமான மணியுருப்படை உருவாக வழிவகுக்கும்.
மணியுரு படையில் காணப்படும் கலங்கள் பிரிவடையாது. மாறாக தோல் கலங்களான கொம்புறுக்கலங்கள் கேரடினிலுள்ள சிறுமணி மூலமாக உருவாகும். இந்த தோல் கலங்கள் இறுதியில் புறத்தே உள்ள மேற்றோல் படையான கரட்டு படையாக மாற்றமடையும். இங்கு கலங்களானது ஒரு முடிவில் கரு காணப்படுமாறு தட்டையான சாக்குகளாக மாற்றமடையும். பிறந்ததன் பின்னர் இந்த மணியுருப்படையானது புதிய கலங்களால் பிரதியிடப்படும். வாழ்நாளில் இக்கலங்களானது ஒரு மணித்தியாலத்திற்கு 0.001-0.003 அவுன்ஸ் தோல் செதில்கள் என்ற வீதத்தில் சிந்தும். (ஒரு நாளைக்கு 0.024-0.072 அவுன்ஸ்)
பல்வேறு வளர்ச்சிக் காரணிகள் மேற்றோல் விருத்தியில் பங்களிப்பு செய்யும். அதில் முக்கிய இரண்டு காரணிகள்:
தொழிற்பாடு
தொகுதடுப்பாக
தொகுமேற்றோலானது உடலை நுண்ணுயிர் கிருமிகள், ஒட்சியேற்ற அழுத்தம் (புற ஊதா கதிர்), இரசாயன கலவைகள் போன்றவற்றிற்கு எதிராக இயந்திர தடையை வழங்கி ஒரு தடுப்பு வேலியாக தொழிற்படுகிறது. இதற்கான பல்வேறு வேலைகளை கரட்டுபடலமே புரியும்.
தடுப்பின் பண்புகள்
தொகு- கல-கல சந்தியின் மூலம் இணைந்துள்ள கொம்புறுக்கலங்களும் அதனோடு சேர்ந்த மேற்றோலுக்கு இயந்திர வலிமையை வழங்கும் உயிரணுக்கூட்டின் புரதமும் பௌதிக எதிரியாய் தொழிற்படுகிறது.
- நன்கு ஒழுங்கமைக்கப்பட்ட இலிப்பிட்டுகள், அமிலங்கள், நீர் பகுப்பு நொதியங்கள் மற்றும் நுண்ணுயிர் கொல்லி பெப்டைட்டுகளின் இருக்கை இரசாயன எதிரியாய் அமைகிறது.
- கரட்டுபடையிலுள்ள நீரின் உள்ளடக்கமானது மேற்பரப்பை நோக்கி குறைவடையும். இது நுண்ணுயிர் கொல்லிகளின் வளர்ச்சிக்கு எதிரான ஒரு சூழலை உருவாக்கும்.
- அமில pH (5.0) மற்றும் குறைந்த அளவிலான நீரானது பல்வேறு நுண்ணுயிர் கொல்லிகளுக்கு எதிரியாய் அமையும்.
- மேற்றோலின் பரப்பில் காணப்படும் நோய் விளைவிக்காத நுண்ணுயிர்கள் உயிர்கொல்லிகளுக்கு எதிராக செயற்படும். இவை நுண்ணுயிர்களின் உணவு கிடைக்கும் அளவை கட்டுபடுத்துவதன் மூலமும் பல்வேறு இரசாயன சுரப்புகளின் மூலமும் காவலாய் உள்ளது
தடுப்பின் பண்பை மாற்றும் காரணிகள்
தொகு- மன அழுத்தம் மூலம் உடலில் அதிகரிக்கும் குளுகோகோர்டிகொய்ட்ஸ் (Glucocorticoids) இனால் கரட்டுப்ப்படல்ம் மற்றும் அதன் தடைத்தன்மை பாதிக்கப்படும்
- திடீர் மற்றும் உயர் ஈரப்பத மாற்றம் கரட்டுப்ப்படலத்தின் நீரேற்ற தன்மையை மாற்றும். இது நுண்ணுயிர் கொல்லிகளின் வருகைக்கு வழிகோலிடும்.
தோல் நீரேற்றம்
தொகுதோலின் நீரை வைத்திருக்கும் திறனிற்கு கரட்டுபடையே காரணமாகும். சுகாதாரமான உடல் தோலை பேணுவதற்கும் இதுவே முக்கியமாகும். கரட்டுபடையின் கலங்களுக்கு இடையிலே ஒழுங்காக அடுக்கப்பட்டுள்ள இலிப்பிட்டு படித்திறன் நீரிழப்பிற்கு தடுப்பாக அமையும்.
தோலின் நிறம்
தொகுமனிதர்களின் தோலின் நிறம் வேறுபட காரணம் மேற்றோலில் காணப்படும் மெலனின் எனும் நிறப்பொருளாகும். மெலனோசைட்டுகளில் தோன்றி சுற்றியுள்ள கொம்புறுக்கலங்களுக்கு இடம்மாற்றப்படும் சிறிய துணிக்கைகளாலான மெலனோசோம்களில் இது காணப்படும். வெவ்வேறு பகுதி வாழ்மக்களுக்கு இடையில் இந்த மெலனோசோம்களின் அளவு, எண்ணிக்கை மற்றும் ஒழுங்கமைப்பு வேறுபடும். இருப்பினும் ஒரே பகுதியில் வாழும் மக்களுக்கு இடையில் இதன் எண்ணிக்கை சமனாகவே காணப்படும். மாநிறம் சார்ந்த தோல்களில் மெலனோசோம்கள் கூட்டமாக பொதி செய்யப்பட்டிருக்கும். ஆனால் கருமையான தோல் பகுதிகளில் இவை பெரிதாகவும், பரவலாகவும் காணப்படும். கொம்புறுக்கலங்களில் காணப்படும் மெலனோசோம்களின் எண்ணிக்கைபுற ஊதா கதிர்ப்பினால் அதிகரிக்கும். இருப்பினும் அதன் பரவலாக்கம் பெரிதாக மாறுபடாது.
மருத்துவ முக்கியத்துவம்
தொகுகொம்புறுக்கலங்களின் ஆய்வகத் தயாரிப்பான முப்பரிமாண கட்டமைப்பானது (செயற்கை தோல்) மேற்றோலின் தன்மைகளை கொண்டிருப்பதால் இது பல்வேறு பரிசோதனைகளுக்கும், மருந்து வகை தயாரிப்பிற்கும் பயன்படுத்தப்படுகிறது
மேற்கோள்கள்
தொகு- ↑ James, William; Berger, Timothy; Elston, Dirk (2005) Andrews' Diseases of the Skin: Clinical Dermatology (10th ed.). Saunders. Page 2-3. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-7216-2921-0.