மனிதனின் வரலாற்றுக்கு முந்தைய காலக்கோடு

மனிதனின் வரலாற்றுக்கு முந்தைய காலக்கோடு (Timeline of human prehistory) என்பது ஓமோ சப்பியன்சு ஆப்பிரிக்காவில் 200,000 ஆண்டுகளுக்கு முன்னர் தோன்றிய காலம் தொடக்கம் 5,500 ஆண்டுகளுக்கு முன்னர் எழுத்தறிவை மனிதன் உருவாக்கிய காலம் வரையான காலப்பகுதியாகும். இது நடு பழைய கற்காலம் தொடக்கம் வெண்கலக் காலத்தின் மிக ஆரம்ப காலத்தினை குறிக்கும். இக்காலப்பகுதியை பிரித்துக் கூறும் காலக்கேடு ஐரோப்பிய கற்காலத்தை அடிப்படையாகக் கொண்டிருப்பினும், உலகின் பல்வேறு பகுதிகளில் கற்காலத்தின் வளர்ச்சி வெவ்வேறு காலகட்டத்தில் நிகழ்ந்தது.

இங்கே குறிப்பிடப்பட்டிருக்கும் கால எல்லைகள் மானிடவியல், தொல்லியல், மரபியல், நிலவியல் மற்றும் மொழியியல் ஆகிய துறைகளைச் சேர்ந்த ஆய்வுகளின் மூலம் அண்ணளவாக குறிக்கப்பட்டுள்ளன. எதிர்காலத்தில் இத்துறைகளில் செய்யப்படும் புதிய ஆய்வுகள் இக்கால எல்லைகளை மாற்றியமைக்ககூடும்.

நடு பழைய கற்காலம்

தொகு
200,000 வருடங்களுக்கு முன்னர் ஆபிரிக்காவில் முதன் முதலில் ஹோமோ சேப்பியன்ஸ் தோற்றம்.[1]
200,000 – 180,000 வருடங்களுக்கு முன்னர் இழையமணிப் பழையோள் மற்றும் Y-குரோமோசோம் ஆதாமின் காலம்.[2]
195,000 வருடங்களுக்கு முன்னர் ஒமோ, எதியோப்பியா எனும் இடத்தில் எடுக்கப்பட்ட மிகப்பழைய ஹோமோ சேப்பியன்ஸ் புதைபடிவம்.[3]
170,000 வருடங்களுக்கு முன்னர் மனிதன் உடையணிந்து கொண்ட காலகட்டம்.[4]
125,000 வருடங்களுக்கு முன்னர் ஈமியன் இடைப்பனிப்பாறையாக்க (interglacial) காலகட்டத்தின் உச்சக்கட்டம்.
120,000 – 90,000 வருடங்களுக்கு முன்னர் வடக்கு ஆபிரிக்காவில் அப்பசியா மழைக்காலம் (Abbassia Pluvial) காலம் மற்றும் சகாரா பாலைவனம் ஈரமாகவும் பச்சைப்பசேல் என்றும் காணப்பட்டது.
82,000 வருடங்களுக்கு முன்னர் சிறிய சங்கு, சிற்பிகளைத் துளையிட்டு செய்யப்பட் மணி ஆபரணங்கள் மொரோக்கோவில் உள்ள Taforalt பிரதேசத்தில் கண்டறியப்பட்டது.[5]
75,000 வருடங்களுக்கு முன்னர் டோபா எரிமலை வெடிப்பு.[6]
70,000 வருடங்களுக்கு முன்னர் தெற்கு ஆபிரிக்காவில் உள்ள ப்லோம்போஸ் குகைகளில் கைவேலைப்பாடுகள் கொண்ட கலைப் படைப்புகள் கண்டெடுக்கப்பட்டன. நுண்கலை வேலைப்பாடுகளுக்கு மிகப்பழைய உதாரணமாக இது திகழ்கிறது.[7]
64,000 வருடங்களுக்கு முன்னர் தெற்கு ஆபிரிக்காவில் கண்டெடுக்கப்பட்ட சிறு கூர்கற்களைக் கொண்டு இக்கால கட்டத்தில் அம்பு வில் இங்கே பயன்பாட்டில் இருந்திருக்கலாம் என ஊகிக்கப்படுகிறது.[8]

மேல் பழைய கற்காலம்

தொகு
50,000 வருடங்களுக்கு முன்னர் தெனிசோவியர்கள் உருவாக்கி பயன்படுத்திய முதலாவது தையல் ஊசி பயன்பாடு கண்டுபிடிப்பு.
50,000 – 30,000 வருடங்களுக்கு முன்னர் வடக்கு ஆபிரிக்காவில் மௌஸ்டேரியன் மழைக்காலம் (Mousterian Pluvial). சகாரா பாலைவனப் பகுதி பச்சைப்பசேல் எனக் காணப்பட்டது. ஆபிரிக்காவில் பிற் கற்காலம் தொடங்கியது.
45,000 – 43,000 வருடங்களுக்கு முன்னர் குரோ-மாகுநன் ஐரோப்பாவில் குடியேற்றம்.
45,000 – 40,000 வருடங்களுக்கு முன்னர் பிரான்சில் சட்டேல்பெரோனியன் கலாச்சாரம் தொடங்கியது.
42,000 வருடங்களுக்கு முன்னர் ஜெர்மனியில் பழைய கற்கால புல்லாங்குழல்.
42,000 வருடங்களுக்கு முன்னர் கிழக்கு தீமோரில் உள்ள ஜெரிமலாய் குகைகளில் ஆழ்கடல் மீன்பிடிக்கான முதலாவது தொழில்நுட்ப பயன்பாட்டுக்கான சான்று.
41,000 வருடங்களுக்கு முன்னர் அல்டாய் மலைப்பகுதிகளில் தெனிசோவியன் ஹோமினின் வாழ்ந்தார்கள்
40,000 வருடங்களுக்கு முன்னர் ஹோமோ நியண்டர்தால் மனிதர்களின் இனம் அழிந்துபோனது.
40,000 வருடங்களுக்கு முன்னர் ஐரோப்பாவில் அவுறிக்நேசியன் கலாச்சாரம் தொடங்கியது.
40,000 வருடங்களுக்கு முன்னர் மிருகங்களுக்கு கடவுளின் பண்புகளை வைத்து (Zoomorphic figure) உருவாக்கப்பட்ட முதலாவது கலைப்படைப்பு. (Löwenmensch figurine)
40,000 – 30,000 வருடங்களுக்கு முன்னர் சிட்னி, மெல்போர்ன் மற்றும் பேர்த் ஆகிய இடங்களில் முதலாவது மனிதக் குடியேற்றம்.
40,000 – 20,000 வருடங்களுக்கு முன்னர் அவுஸ்திரேலியாவில் உள்ள முங்கோ ஏரிக்கரையில் நாமறிந்து முதல்முறையாக சமைய முறைப்படியான உடல்த்தகனம்.
35,000 வருடங்களுக்கு முன்னர் நாமறிந்த மிகப்பழைய மனித உருவிலான கலைப்படைப்பு - enus of Hohle Fels.
30,000 வருடங்களுக்கு முன்னர் பழக்கப்படுத்தப்பட்ட நாய்களின் மண்டையோடுகள் ஐரோப்பா மற்றும் சைபீரியா ஆகிய இடங்களில் கண்டெடுப்பு.
30,000 வருடங்களுக்கு முன்னர் பாறைகளில் ஓவியம் வரையும் பழக்கம் இந்தியாவில் உள்ள பீம்பேட்கா பாறை வாழ்விடங்களில் உதயமாகியது. இப்பிரதேசத்திலேயே அதிக செறிவாக பாறை ஓவியங்கள் காணப்படுகின்றன. அண்ணளவாக 10 சதுரக் கிமீ இடத்தில் இருக்கும் 800 பாறை வாழ்விடங்களில் 500 இடங்களில் பாறை ஓவியங்கள் இருக்கின்றன.
29,000 வருடங்களுக்கு முன்னர் நாமறிந்த மிகப்பழைய வெதுப்பகங்கள் கண்டுபிடிப்பு.
28,500 வருடங்களுக்கு முன்னர் ஆசியா அல்லது அவுஸ்திரேலியா ஆகிய இடங்களில் வாந்தவர்கள் நியு கிண்ணியா பிரதேசத்தில் குடியேறினர்.
28,000 வருடங்களுக்கு முன்னர் நாமறிந்த முதலாவது முறுக்குக் கயிறு கண்டுபிடிப்பு.
28,000 – 24,000 வருடங்களுக்கு முன்னர் நாமறிந்த மிகப்பழைய மட்பாண்ட வேலைப்பாடுகள். ஆனால் இவை சமையலுக்கு பயன்படாமல் உருவங்கள் செய்வதற்கே பயன்பட்டது. (Venus of Dolní Věstonice)
28,000 – 20,000 வருடங்களுக்கு முன்னர் ஐரோப்பாவில் கிராவட்டின் காலம். குத்தீட்டி மற்றும் ரம்பங்கள் கண்டுபிடிப்பு.
26,000 வருடங்களுக்கு முன்னர் உலகெங்கிலும் உள்ள மக்கள் நார்களை பயன்படுத்தி ஆடைகள், பைகள், கூடைகள், வலைகள் மற்றும் குழந்தையைக் கொண்டுசெல்லும் கூடைகள் என்பவற்றை உருவாக்கினர்.
26,000 – 20,000 வருடங்களுக்கு முன்னர் இறுதிப் பனிப்பாறையாக்கத்தின் உச்சக்கட்டம் (Last Glacial Maximum).
25,000 வருடங்களுக்கு முன்னர் பாறைகள் மற்றும் மமத்தின் (Mammoth) எலும்புகளைக் கொண்டு உருவாக்கப்பட்ட குடிசைகளைக் கொண்ட குக்கிராமங்கள் கண்டுபிடிப்பு.
21,000 வருடங்களுக்கு முன்னர் கண்டெடுக்கப்பட்ட கலைப்பொருட்கள் தற்போதைய அவுஸ்திரேலிய தலைநகரான கான்பெரா எனும் இடத்தில் மனித நடவடிக்கை இருந்திருக்கலாம் என கருதவைக்கிறது.

இடைக் கற்காலம்

தொகு
20,000 வருடங்களுக்கு முன்னர் லெவான்ட் பிரதேசத்தில் கேபரன் கலாச்சாரம்.
20,000 வருடங்களுக்கு முன்னர் சீனாவில் சமையலுக்கு பயன்படுத்திய, உணவை சேமிக்க பயன்படுத்திய மட்பாண்டங்கள் கண்டெடுப்பு.
16,500 – 13,000 வருடங்களுக்கு முன்னர் வடக்கு அமெரிக்காவில் முதலாவது குடியேற்றம்.
16,000 வருடங்களுக்கு முன்னர் தற்போதைய ஸ்பெயின் நாட்டு எல்லையில் இருக்கும் குகை ஒன்றில் இருந்து களியினால் செய்யப்பட்ட காட்டெருமையின் உருவம் கண்டுபிடிப்பு.
15,000 – 14,700 வருடங்களுக்கு முன்னர் முதன் முதலாக பன்றி வளர்ப்பு விலங்காக மாற்றப்பட்டதற்கு சான்றாக கருதப்படுகிறது.
14,800 வருடங்களுக்கு முன்னர் வடக்கு ஆபிரிக்காவில் ஈரப்பதமான காலநிலை தோன்றுகிறது. பிற்காலத்தில் சகாராவாக உருவெடுக்கப்போகும் பிரதேசம் பச்சைப்பசேல் என்று காணப்படுகிறது. நிலத்தடி நீர் நிரம்பியிருகிறது.
13,000 – 10,000 வருடங்களுக்கு முன்னர் இறுதிப் பனிப்பாறையாக்கம் முடிவுக்கு வருகிறது. காலநிலை வெப்பமடைகிறது, பனிப்பாறைகள் உருகுகின்றன.
13,000 வருடங்களுக்கு முன்னர் அகாசிஸ் ஏரி (Lake Agassiz) உடைப்பெடுக்கிறது. அக்காலகட்டத்தில் கருங்கடல் அளவு இருந்திருக்கக்கூடிய அகாசிஸ் ஏரியில் இருந்த நீரில் பெரும்பான்மை நீர் ஆர்டிக் சமுத்திரத்தை அடைந்தது.
13,000 – 11,000 வருடங்களுக்கு முன்னர் முதன் முதலாக செம்மறியாடு வளர்ப்பு விலங்காக மாற்றப்பட்டதற்கான சான்றாக கருதப்படுகிறது.
12,000 வருடங்களுக்கு முன்னர் எரிக்கோவில் குடியேற்றம் இருந்ததற்கான சான்று. நட்டுவியன் (Natufian) இன வேட்டையாடி உணவு தேடும் குழுக்களுக்கு பிரபலமான இடமாக எரிக்கோ காணப்பட்டது.
12,000 வருடங்களுக்கு முன்னர் ஆடு வளர்ப்பு விலங்காக மாற்றப்பட்டதற்கான முதலாவது சான்றாக கருதப்படுகிறது.
12,000 வருடங்களுக்கு முன்னர் நிலப்பனி டென்மார்க்கில் இருந்தும் தெற்கு சுவீடன் இல் இருந்தும் கரைகிறது. தற்போதைய கொலோசீன் சகாப்தம் தொடங்குகிறது.
11,000 வருடங்களுக்கு முன்னர் தெற்கு துருக்கியில் இருக்கும் கொபெக்கிலி தேபேயில் தேமினோய் (thmenoi) எனும் சடங்குக் கட்டமைப்பு உருவாக்கப்பட்டது. உலகில் உள்ள ஆதி-சமையக் (proto-religious) கட்டமைப்பைக் கொண்ட இடமாக இது கருதப்படுகிறது.
11,000 வருடங்களுக்கு முன்னர் எரிக்கோவின் உருவாக்கம். இதுவே தொடர்ச்சியாக மனிதர்கள் குடியிருக்கும் உலகின் மிகப்பழைய நகரமாகக் கருதப்படுகிறது. பெரும் சிறுமுகக்கரடி (giant short-faced bear) மற்றும் பெரும் நிலசுலோத் (giant ground sloth) என்பன முற்றாக இனமழிந்து போயின.
10,500 வருடங்களுக்கு முன்னர் பசு வளர்ப்பு விலங்காக மாற்றப்பட்டதற்கான முதலாவது சான்று.
10,000 வருடங்களுக்கு முன்னர் மத்திய-பெளிச்டோசின் காலத்தில் இருந்து இடம்பெற்றுவரும் இனவழிவு நிகழ்வு (Quaternary extinction event) முடிவுக்கு வருகிறது. பெரும்பாலான பனியுகக்கால பெரும் உயிரினங்களான வூலி காண்டாமிருகம், குகைக்கரடி குகைச் சிங்கம் மற்றும் கொடுவாள் பூனை ஆகியன முற்றாக அழிந்து போகின்றன. ஐரோப்பா-ஆசியா மற்றும் அமெரிக்காவில் மமத் முற்றாக அழிகிறது, ஆனால் சிறிய தீவில் அண்ணளவாக கிமு 1650 வரை அவை வாழ்ந்திருக்கின்றன.

புதிய கற்காலம்

தொகு
11,000 – 9,000 வருடங்களுக்கு முன்னர் பைப்லோஸ் பகுதியில் குடியேற்றம் இடம்பெறுகிறது. இங்கிருக்கும் கட்டடங்களில் புதிய கற்காலத்திற்கான எச்சங்கள் காணப்படுகின்றன.
10,000 – 8,000 வருடங்களுக்கு முன்னர் பனிப்பாறையாக்கல் முடிவுக் காலத்தின் பின்னரான கடல் மட்ட உயர்வு குறைகிறது.
10,000 – 9,000 வருடங்களுக்கு முன்னர் வடக்கு மெசொப்பொத்தேமியா (தற்கால வடக்கு ஈராக்) பகுதிகளில் பார்லி மற்றும் கோதுமை முதன்முதலில் சாகுபடி செய்யப்படுகிறது. முதலில் இவை பியர் மற்றும் சூப் போன்றவற்றிற்கு பயன்பட்டாலும், பின்னர் இவற்றைப் பயன்படுத்தி ரொட்டிகள் செய்யப்பட்டன.
9,500 – 5,900 வருடங்களுக்கு முன்னர் வடக்கு ஆபிரிக்காவில் புதிய கற்கால மழைகாலம். சகாரா பாலைவனப் பிரதேசம் சவானா நிலப்பரப்பாக காணப்படுகிறது. சாட் ஏரி (Lake Chad) தற்போதைய காஸ்பியன் கடலைவிட பெரிதாக காணப்பட்டது. ஷாகேல் பிரதேசத்தில் ஆபிரிக்க கலாச்சாரம் விருத்தியடைகிறது.
9,500 வருடங்களுக்கு முன்னர் அனட்டோலியா பிரதேசத்தில் Çatalhöyük எனும் நகரம் போன்ற குடியேற்றம் கண்டறியப்படுகிறது. பூனை வளர்ப்பு விலங்காக மாற்றப்பட்டதற்கான முதலாவது சான்று.
9,200 வருடங்களுக்கு முன்னர் ஜோர்டானில் உள்ளா அமான் பிரதேசத்தில் முதலாவது மனிதக் குடியேற்றம். 'Ain Ghazal எனும் புதிய கற்கால குடியேற்றம் 15 ஹெக்டயர் நிலப்பரப்புவரை விரிகிறது.
9,000 வருடங்களுக்கு முன்னர் சீனாவில் ஜெய்கூ கலாச்சாரம் தொடங்குகிறது.
8,200 – 8,000 வருடங்களுக்கு முன்னர் 8.2 கிலோவருட நிகழ்வு (8.2 kiloyear event). உலக வெப்பநிலை திடிரென வீழ்ச்சியடைகிறது. இதற்குக் காரணம் லவுரண்டைட் பனிப்படுக்கை உடைந்ததே காரணம் எனக் கருதப்படுகிறது. இக்காலகட்டத்தில் கிழக்கு ஆபிரிக்கா மற்றும் மெசொப்பொத்தேமியா ஆகிய பிரதேசங்கள் உலர்ந்த பிரதேசங்களாக மாற்றமடைந்தன.
8,000 வருடங்களுக்கு முன்னர் தற்போதைய அலெப்போ பிரதேசத்தில் வாழ்விடங்கள் இருந்ததற்கான சான்றுகள் கிடைத்துள்ளன. ஆனாலும் டெல் குராமேல் பிரதேசத்தில் செய்யப்பட்ட அகழ்வாய்வுகள் இப்பிரதேசத்தில் 13,000 வருடங்களுக்கு முன்பிருந்தே மனிதன் வாழ்ந்திருக்கக்கூடும் என்று முடிவுக்கு வரவைக்கிறது.
7,500 வருடங்களுக்கு முன்னார் தாதிலிருந்து செப்பை உருக்கிப் பிரித்ததற்கான ஆதாரங்கள் சைபீரியாவில் உள்ள Pločnik பிரதேசம் மற்றும் வேறு சில இடங்களிலும் கிடைத்துள்ளன.
7,200 – 6,000 வருடங்களுக்கு முன்னர் மால்டாவில் Għar Dalam வளர்சிக்கட்டம். இங்கே முதலாவது வேளாண்மைக் குடியிருப்புகள்.
7,000 வருடங்களுக்கு முன்னர் பிற்புதிய கற்கால நாகரீகங்கள். அடிப்படை எழுத்து அறிவு (proto-writing). சில்லு கண்டுபிடிப்பு.
6,100 – 5,800 வருடங்களுக்கு முன்னர் மால்டாவில் Żebbuġ வளர்சிக்கட்டம்.
6,070 – 6,000 வருடங்களுக்கு முன்னர் நேபிலிவிக்கா குடியிருப்பு 15,000 – 18,000 சனத்தொகையைக் கொண்டிருந்தது.
6,000 வருடங்களுக்கு முன்னர் மெசொப்பொத்தேமியா மற்றும் அதைச் சார்ந்த பகுதிகளில் நாகரிக வளர்ச்சி. குதிரைகள் வளர்ப்பு விலங்காக மாற்றப்பட்டதற்கான முதலாவது சான்று.
5,900 வருடங்களுக்கு முன்னர் 5.9 கிலோவருட நிகழ்வு. தீவிரமான உலர்வுக் காலநிலை அதிகரிப்பு. தற்போது இருக்கும் சகாரா பாலைவனத்தின் நிலை தொடங்கிய காலகட்டம். நைல் நதி ஆற்றுப்படுக்கைக்கு அருகில் சனத்தொகை அதிகரிப்பு. இந்தக் காலநிலை மெசொப்பொத்தேமியாவின் உபைத் காலத்தை முடிவுக்கு கொண்டுவந்தது.
5,800 வருடங்களுக்கு முன்னர் இங்கிலாந்தில் உள்ள சோமர்செட் சமதரையில் போஸ்ட் ட்ரேக், ஸ்வீட் ட்ரேக் ஆகிய தரைப்பாலங்கள் அமைக்கப்பட்டன.
5,800 வருடங்களுக்கு முன்னர் உக்கிரேனில் உள்ள தலியாங்கி குடியிருப்பின் சனத்தொகை 15,600 – 21,000 ஆகக் காணப்பட்டது.
5,800 – 5,600 வருடங்களுக்கு முன்னர் மல்டாவின் வரலாற்றுக்கு முந்தைய காலத்தில் Mġarr வளர்சிக்கட்டம்.
5,700 வருடங்களுக்கு முன்னர் சிரியாவில் உள்ள டெல் பராக் எனும் இடத்தில் பெரும் எண்ணிக்கையான கல்லறைகள்.
5,700 வருடங்களுக்கு முன்னர் உக்கிரேனில் உள்ள மைடநேட்ல்ஸ் (Maidanets) குடியிருப்பின் சனத்தொகை 12,000 – 46,000 ஆகக் காணப்படுகிறது. இங்கே மூன்று அடுக்கு கட்டடங்கள் கட்டப்பட்டிருக்கின்றன.
5,700 வருடங்களுக்கு முன்னர் கிரீட்டில் மிநோஅன் கலாச்சாரம் துவங்குகிறது.
5,600 – 5,200 வருடங்களுக்கு முன்னர் மால்ட்டாவில் Ġgantija வளர்ச்சிக்கட்டம். இக்காலகட்டம் வரலாற்றுக்கு முந்தைய மால்ட்டா மக்களின் வாழ்க்கை முறையை மாற்றியமைத்தது.
5,500 வருடங்களுக்கு முன்னர் சுமாரில் (Sumer) உருக் (Uruk) காலகட்டம். எகிப்தில் மம்மிகள் செய்வதன் முதலாவது ஆதாரம்.

வெண்கலக் காலம்

தொகு
5,300 வருடங்களுக்கு முன்னர் அண்மைய கிழக்கில் (Near East) வெண்கலக் காலம் தொடங்குகிறது. அயர்லாந்தில் Newgrange கட்டப்பட்டது. இந்திய உபகண்டத்தில் சிந்துவெளி நாகரீகத்தின் காக்ரா வளர்ச்சிக்கட்டம் தொடங்கியது.
5,300 – 5,000 வருடங்களுக்கு முன்னர் மால்ட்டாவில் Saflieni வளர்ச்சிக்கட்டம்.
5,200 வருடங்களுக்கு முன்னர் சுமாரில் எழுதும் முறை கண்டுபிடிக்கப்படுகிறது. அதிலிருந்து பதியப்பட்ட வரலாற்றுக் காலம் தொடங்குகிறது.

இவற்றையும் பார்க்க

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. "Homo sapiens", The Smithsonian Institution's Human Origins Program (in ஆங்கிலம்), 2010-02-14, பார்க்கப்பட்ட நாள் 2018-03-28
  2. Callaway, Ewen, "Genetic Adam and Eve did not live too far apart in time", Nature (in ஆங்கிலம்), எண்ணிம ஆவணச் சுட்டி:10.1038/nature.2013.13478, பார்க்கப்பட்ட நாள் 2018-03-28
  3. Wayman, Erin, "Meet the Contenders for Earliest Modern Human", Smithsonian (in ஆங்கிலம்), பார்க்கப்பட்ட நாள் 2018-03-28
  4. "Lice DNA study shows humans first wore clothes 170,000 years ago", ScienceDaily (in ஆங்கிலம்), பார்க்கப்பட்ட நாள் 2018-03-28
  5. "World's Oldest Manufactured Beads Are Older Than Previously Thought", ScienceDaily (in ஆங்கிலம்), பார்க்கப்பட்ட நாள் 2018-03-28
  6. "Mount Toba Eruption – Ancient Humans Unscathed, Study Claims", Anthropology.net (in அமெரிக்க ஆங்கிலம்), 2007-07-06, archived from the original on 2018-06-12, பார்க்கப்பட்ட நாள் 2018-03-28
  7. 'Oldest' prehistoric art unearthed (in பிரிட்டிஷ் ஆங்கிலம்), 2002, பார்க்கப்பட்ட நாள் 2018-03-28
  8. Gill, Victoria (2010-08-26), "Oldest evidence of arrows found", BBC News (in பிரிட்டிஷ் ஆங்கிலம்), பார்க்கப்பட்ட நாள் 2018-03-28

உசாத்துணைகள்

தொகு

வெளி இணைப்புகள்

தொகு