மனுஷ்ய புத்திரன்

எழுத்தாளர்
(மனுஷ்யப்புத்திரன் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

அப்துல் ஹமீது (பிறப்பு: 15 மார்ச் 1968) ஒரு தமிழ்நாட்டு எழுத்தாளர் ஆவார்.

மனுஷ்ய புத்திரன்
மனுஷ்ய புத்திரன்
பிறப்புஅப்துல் ஹமீது
15 மார்ச்சு 1968 (1968-03-15) (அகவை 56)
துவரங்குறிச்சி, திருச்சிராப்பள்ளி மாவட்டம்,
மதராசு மாநிலம் (தற்போது தமிழ்நாடு), இந்தியா
புனைபெயர்மனுஷ்ய புத்திரன்
தொழில்கவிஞர், எழுத்தாளர், பாடல் ஆசிரியர்
தேசியம்தமிழர்
குடியுரிமைஇந்தியர்
வகைநவீன கவிதை
கருப்பொருள்தமிழ் இலக்கியம்
குறிப்பிடத்தக்க விருதுகள்சன்ஸ்கிருதி சம்மான் (2002)
இணையதளம்
https://uyirmmai.com/

தொடக்க வாழ்க்கை

தொகு

திருச்சி மாவட்டம் துவரங்குறிச்சியில் 15 மார்ச் 1968 அன்று பிறந்தார்.

இலக்கியப் பணி

தொகு

எண்பதுகளின் ஆரம்பத்தில் எழுதத் துவங்கிய இவர் கடந்த 20 ஆண்டுகளாக பத்திரிகை ஆசிரியர், கவிஞர் , இலக்கியவாதி என பல்வேறு இலக்கியப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றார். தற்போது சென்னையில் வசிக்கும் இவர் உயிர்மை பதிப்பகம், உயிர்மை இதழ் போன்றவற்றை நடத்தி வருகிறார்.

படைப்புகள்

தொகு
ஆண்டு தலைப்பு வகை பதிப்பகம்
1983 மனுஷ்ய புத்திரன் கவிதைகள் கவிதைத் தொகுப்புகள்
1993 என் படுக்கையறையில் யாரோ ஒளிந்திருக்கிறார்கள்
1998 இடமும் இருப்பும்
2001 நீராலானது
2003 காத்திருந்த வேளையில் கட்டுரைத் தொகுப்புகள்
எப்போதும் வாழும் கோடை
2005 மணலின் கதை கவிதைத் தொகுப்புகள்
2007 கடவுளுடன் பிரார்த்தித்தல்
2009 அதீதத்தின் ருசி
என்ன மாதிரியான காலத்தில் வாழ்கிறோம் கட்டுரைத் தொகுப்பு
2010 இதற்கு முன்பும் இதற்கு பின்பும் கவிதைத் தொகுப்புகள்
2011 பசித்த பொழுது
2013 அருந்தப்படாத கோப்பை
எதிர் குரல் (4 தொகுதிகள்) கட்டுரைத் தொகுப்பு
சூரியனுக்கு அருகில் ஒரு வீடு கவிதைத் தொகுப்பு
டினோசர்கள் வெளியேறி கொண்டிருக்கின்றன கட்டுரைத் தொகுப்புகள்
தோன்ற மறுத்த தெய்வம்
2016 தித்திக்காதே கவிதைத் தொகுப்பு

விருதுகள்

தொகு
  • 2002 - இளம் படைப்பாளிகளுக்கான உயரிய தேசிய விருதான சன்ஸ்கிருதி சம்மான் வழங்கப்பட்டது.
  • 2003 - அமெரிக்க இலக்கிய நண்பர்கள் குழு வழங்கிய ‘இலக்கியச் சிற்பி’ விருதையும்,
  • 2004 - இந்திய சமூக நீதி அமைச்சகத்தின் ‘தலைசிறந்த தனிநபர் படைப்பாற்றலுக்கான’ விருதையும் பெற்றிருக்கிறார்.
  • 2011 - அதீதத்தின் ருசி கவிதைத் தொகுப்புக்கு, கனடா நாட்டின் சிறந்த கவிதைத் தொகுப்புக்கான விருது கிடைத்துள்ளது.
  • 2016 - ஆனந்த விகடன் டாப் 10 மனிதர்கள் விருது[1]

மேற்கோள்கள்

தொகு

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=மனுஷ்ய_புத்திரன்&oldid=4181794" இலிருந்து மீள்விக்கப்பட்டது