மனோஜ் மிசுரா

மனோஜ் மிசுரா (பிறப்பு: சூன் 2, 1965) இந்திய உச்ச நீதிமன்றத்தின் நீதிபதி ஆவார். இவர் அலகாபாத் உயர்நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதி ஆவார்.

மனோஜ் மிசுரா
Manoj Misra
நீதிபதி-இந்திய உச்ச நீதிமன்றம்
பதவியில் உள்ளார்
பதவியில்
6 பிப்ரவரி 2023
பரிந்துரைப்புதனஞ்சய யஷ்வந்த் சந்திரசூட்
நியமிப்புதிரௌபதி முர்மு
நீதிபதி-அலகாபாத் உயர் நீதிமன்றம்
பதவியில்
21 நவம்பர் 2011 – 5 பிப்ரவரி 2023
பரிந்துரைப்புஎசு. எச். கபாதியா
நியமிப்புபிரதிபா பாட்டில்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு2 சூன் 1965 (1965-06-02) (அகவை 58)
முன்னாள் கல்லூரிஅலகாபாத் பல்கலைக்கழகம்

தொழில் தொகு

மனோஜ் மிசுரா 1988-ல் அலகாபாத் பல்கலைக்கழகத்தில் சட்டப் பட்டம் பெற்றார். பின்னர் 12 திசம்பர் 1988-ல் வழக்கறிஞராகப் பதிவு செய்தார். இவர் உரிமையியல், வருவாய், குற்றவியல் மற்றும் அரசியலமைப்பு விடயங்களில் சட்டப் பயிற்சி செய்தார். இவர் 21 நவம்பர் 2011 அன்று அலகாபாத் உயர் நீதிமன்றத்தின் கூடுதல் நீதிபதியாகப் பதவியேற்றார். பின்னர் 6 ஆகத்து 2013 அன்று நிரந்தர நீதிபதியானார்.[1][2] பிப்ரவரி 6, 2023 ஆம் நாள் இந்திய உச்சநீதிமன்ற நீதிபதியாகப் பதவியேற்றார்.[3]

மேற்கோள்கள் தொகு

  1. "Justice Manoj Misra, Judge, Allahabad High Court".
  2. "[BREAKING Collegium recommends five judges for appointment to Supreme Court"]. https://www.barandbench.com/amp/story/news/breaking-collegium-recommends-five-judges-for-appointment-to-supreme-court. 
  3. https://www.allahabadhighcourt.in/service/judgeDetail.jsp?id=172. {{cite web}}: Missing or empty |title= (help)
"https://ta.wikipedia.org/w/index.php?title=மனோஜ்_மிசுரா&oldid=3811263" இலிருந்து மீள்விக்கப்பட்டது