மனோன்மணியம் சுந்தரனார் விருது
திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தினால் வழங்கப்படும் விருது
மனோன்மணியம் சுந்தரனார் விருது என்பது தமிழ் மொழியில் இலக்கியம், கலை, பண்பாடு எனப் பல தளங்களில் சேவையாற்றி வரும் பெருந்தகைகளுக்காக திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் நிறுவப்பட்டிருக்கும் விருதாகும்.
இந்த விருதிற்கு தேர்வு செய்யப்படுபவர்களுக்கு சுந்தரனார் அறக்கட்டளையின் சார்பில், ரூ.1 இலட்சத்திற்கான காசோலை, விருது, பட்டயச் சான்று ஆகியவை வழங்கப்படுகின்றன.
இந்த விருது முதலில் பேராசிரியர் இளையபெருமாள் மற்றும் பாரதி ஆய்வாளர் சீனி விசுவநாதன் ஆகியோருக்கு 2014-15 ஆம் ஆண்டுக்கு பகிர்ந்து வழங்கப்பட்டது.
பின்னர், 2015-16 மற்றும் 2016-17 ஆம் ஆண்டுகளுக்கான இவ்விருதை முறையே தமிழறிஞர் ச. வே. சு. என்கிற ச. வே. சுப்பிரமணியன், கரிசல் எழுத்தாளர் கி. ரா. என்கிற கி. ராசநாராயணன் ஆகியோர் பெற்றனர்.[1]
மேற்கோள்கள்
தொகு- ↑ "எழுத்தாளர் கி.ராசநாராயணனுக்கு மனோன்மணியம் சுந்தரனார் விருது". செய்தி. தினமணி. 27 ஏப்ரல் 2017. பார்க்கப்பட்ட நாள் 27 ஏப்ரல் 2017.
{{cite web}}
: Check date values in:|accessdate=
and|date=
(help)