மன்செரா சிவன் கோவில்

மன்செரா சிவன் கோயில் (Mansehra Shiva Temple) என்பது பாக்கித்தானில் உள்ள மிகப் பழமையான இந்துக் கோயில்களில் ஒன்றாகும். அது இன்னும் உள்ளது. இக்கோயில் குறைந்தது 2000 [1] முதல் 3000 ஆண்டுகள் பழமையானது. [2] பாக்கித்தானில் உள்ள கைபர் பக்துன்வாவில் உள்ள மன்செராவிலிருந்து 15 கிலோமீட்டர் தொலைவில் உள்ள சிட்டி கட்டியில் இந்த கோவில் அமைந்துள்ளது.[2] இக்கோயிலில் ஆண்டுதோறும் நடைபெறும் மகா சிவராத்திரி திருவிழாவை பாக்கித்தான் முழுவதும் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் மக்கள் வந்து செல்கின்றனர். [1]

மன்செரா சிவன் கோவில்
மன்செராவிலுள்ள 2000 ஆண்டு பழமையான சிவலிங்கம்
மன்செரா சிவன் கோவில் is located in பாக்கித்தான்
மன்செரா சிவன் கோவில்
பாக்கித்தான்-இல் உள்ள இடம்
மன்செரா சிவன் கோவில் is located in பாக்கித்தான்
மன்செரா சிவன் கோவில்
மன்செரா சிவன் கோவில் (பாக்கித்தான்)
மன்செரா சிவன் கோவில் is located in ஆசியா
மன்செரா சிவன் கோவில்
மன்செரா சிவன் கோவில் (ஆசியா)
அமைவிடம்
நாடு:பாக்கித்தான் பாக்கித்தான்
மாநிலம்:கைபர் பக்துன்வா மாகாணம்
மாவட்டம்:மன்செரா மாவட்டம்
ஆள்கூறுகள்:34°23′51.5″N 73°13′07.3″E / 34.397639°N 73.218694°E / 34.397639; 73.218694
கோயில் தகவல்கள்

வரலாறு

தொகு

தொல்லியல் ஆராய்ச்சியின் படி, இப்போது கோயில் இருக்கும் இடத்தில் இந்துக் கோவில்கள் இருந்தன. மேலும் கோயிலுக்குள் இருக்கும் சிவலிங்கம் குறைந்தது 2000 ஆண்டுகள் பழமையானது. [3] 1830 களில் ஜம்முவின் மன்னரால் ஒரு பக்தி நடவடிக்கையாக கோவில் புதுப்பிக்கப்பட்டது. [4] 1947-48 ஆம் ஆண்டில், கோயிலை சிலர் வலுக்கட்டாயமாக கைப்பற்றி சட்டவிரோதமாக ஆக்கிரமிக்கத் தொடங்கினர். [1]

1948 முதல் 2008 வரை, கோவில் மூடப்பட்டிருந்தது.[1] 1998 வரை இந்துக்களால் இந்த கோயிலுக்கு செல்ல முடியாத நிலை இருந்தது. 1998 இல், இந்துக்கள் கோயிலை மீட்டனர். அதன் பிறகு, பாக்கித்தானிலுள்ள இந்துக்களால் கோவில் ஓரளவு மீட்டெடுக்கப்பட்டுள்ளது. [5]

புகைப்படங்கள்

தொகு

இதனையும் காண்க

தொகு

சான்றுகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=மன்செரா_சிவன்_கோவில்&oldid=4109495" இலிருந்து மீள்விக்கப்பட்டது