மன்னார் நகரசபை

மன்னார் நகரசபை (Mannar Urban Council, மன்னார் நகராட்சி மன்றம்) இலங்கையின் மன்னார் மாவட்டத்தில் உள்ள மன்னார் நகரப்பகுதிக்கு உரிய உள்ளூராட்சிச் சபை ஆகும். இந்த நகரசபையின் ஆட்சிக்கு உட்பட்ட பகுதிக்குள் வீதிகள், சுகாதாரம், வடிகால்கள், வீடமைப்பு, நூலகங்கள், பொதுப் பூங்காக்கள், பொழுதுபோக்கு வசதிகள் போன்ற வசதிகளை வழங்குவதற்கு இச்சபை பொறுப்பாக உள்ளது. இந்த நகரசபைப் பகுதி 7 வட்டாரங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. முன்னர் ஒவ்வொரு வட்டாரத்துக்கும் தனித்தனியாகப் பிரதிநிதிகள் தேர்தல் மூலம் தெரிவுசெய்யப்பட்டனர். விகிதாசாரப் பிரதிநிதித்துவ முறை அறிமுகப்படுத்தப்பட்ட பின்னர் கட்சிகள் சமர்ப்பிக்கும் பட்டியலில் இருந்து அக்கட்சிகள் பெறும் வாக்குகளின் விகிதாசாரத்தின் அடிப்படையில் பிரதிநிதிகள் தெரிவுசெய்யப்படுவர்.

மன்னார் நகர சபை
வகை
வகை
உள்ளூராட்சி
தலைமை
தலைவர்
சாந்தன்பிள்ளை ஞானப்பிரகாசம், த. தே. கூ
மார்ச் 2011
துணைத் தலைவர்
செபஸ்தியாம்பிள்ளை ஜேம்ஸ் பிரான்சிஸ் யேசுதாசன், த. தே. கூ
மார்ச் 2011
உறுப்பினர்கள்7
தேர்தல்கள்
அண்மைய தேர்தல்
இலங்கை உள்ளூராட்சித் தேர்தல்கள், 2011


தேர்தல் முடிவுகள்தொகு

2011 உள்ளூராட்சித் தேர்தல்தொகு

17 மார்ச் 2011 இல் இடம்பெற்ற உள்ளூராட்சித் தேர்தல் முடிவுகள்:[1]
கூட்டணிகளும் கட்சிகளும் வாக்குகள் % இடங்கள்
  தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு 4,757 58.60% 5
  ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணி 2,848 35.08% 2
  ஐக்கிய தேசியக் கட்சி 272 3.35% 0
சுயேச்சை 1 236 2.91% 0
சுயேச்சை 2 5 0.06% 0
செல்லுபடியான வாக்குகள் 8,118 100.00% 7
செல்லுபடியாகா வாக்குகள் 345
மொத்த வாக்குகள் 8,463
பதிவில் உள்ள வாக்காளர்கள் 15,979
வாக்களித்தோர் 52.96%

மேற்கோள்கள்தொகு

  1. "Local Authorities Election - 17.03.2011 Mannar District Mannar Urban Council". Department of Elections, Sri Lanka. 2012-06-07 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2017-03-18 அன்று பார்க்கப்பட்டது.

இவற்றையும் பார்க்கவும்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=மன்னார்_நகரசபை&oldid=3566917" இருந்து மீள்விக்கப்பட்டது