வவுனியா மாநகர சபை

(வவுனியா நகரசபை இலிருந்து வழிமாற்றப்பட்டது)

வவுனியா மாநகர சபை (Vavuniya Municipal Council, வவுனியா மாநகராட்சி மன்றம்) இலங்கையின் வவுனியா மாவட்டத்தில் உள்ள வவுனியா மாநகரப்பகுதிக்கு உரிய உள்ளூராட்சிச் சபை ஆகும். இந்த நகரசபையின் ஆட்சிக்கு உட்பட்ட பகுதிக்குள் வீதிகள், சுகாதாரம், வடிகால்கள், வீடமைப்பு, நூலகங்கள், பொதுப் பூங்காக்கள், பொழுதுபோக்கு வசதிகள் போன்ற வசதிகளை வழங்குவதற்கு இச்சபை பொறுப்பாக உள்ளது. இந்த மாநகரசபைப் பகுதி 8 வட்டாரங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. 2018 ஆம் ஆண்டு முதல் கலப்பு முறைத் தேர்தல் அறிமுகப்படுத்தப்பட்டது. இம்முறைப்படி, வவுனியா மாநகரசபைக்கு 12 உறுப்பினர்கள் வட்டாரங்களில் இருந்து நேரடியாகவும், 9 உறுப்பினர்கள் விகிதாசாரப் பிரதிநிதித்துவத் தேர்தல் முறையிலும், மொத்தம் 21 உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்.[1][2]

வவுனியா மாநகரசபை
வகை
வகை
தலைமை
முதல்வர்
சுந்தரலிங்கம் காண்டீபன், சனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணி
16 சூன் 2025 முதல்
துணை முதல்வர்
பரமேசுவரன் கார்த்தீபன், சனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணி
16 சூன் 2025 முதல்
கட்டமைப்பு
உறுப்பினர்கள்21
அரசியல் குழுக்கள்
அரசு (4)

எதிர் (17)

தேர்தல்கள்
அண்மைய தேர்தல்
2025
வலைத்தளம்
vavuniya.uc.gov.lk

தேர்தல் முடிவுகள்

தொகு

1983 உள்ளூராட்சித் தேர்தல்

தொகு

18 மே 1983 இல் இடம்பெற்ற உள்ளூராட்சித் தேர்தல் முடிவுகள்:[3]

கூட்டணிகளும் கட்சிகளும் வாக்குகள் % இடங்கள்
  தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணி 5,454 77.04% 9
  ஐக்கிய தேசியக் கட்சி 1,625 22.96% 2
செல்லுபடியான வாக்குகள் 7,079 100.00% 11
செல்லாத வாக்குகள் 69
மொத்த வாக்குகள் 7,148
பதிவில் உள்ள வாக்காளர்கள் 10,230
வாக்களித்தோர் 69.87%

2009 உள்ளூராட்சித் தேர்தல்

தொகு

18 மே 1983 இல் இடம்பெற்ற உள்ளூராட்சித் தேர்தல் முடிவுகள்:[4]

கூட்டணிகளும் கட்சிகளும் வாக்குகள் % இடங்கள்
  தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு 4,279 34.81% 5
  சனநாயக மக்கள் விடுதலை முன்னணி 4,136 33.65% 3
  ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணி 3,045 24.77% 2
  இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் 587 4.78% 1
  ஐக்கிய தேசியக் கட்சி 228 1.85% 0
இலங்கை முற்போக்கு முன்னணி 10 0.08% 0
சுயேச்சைக்குழு 1 6 0.05% 0
சுயேச்சைக்குழு 3 1 0.01% 0
சுயேச்சைக்குழு 2 0 0.00% 0
செல்லுபடியான வாக்குகள் 12,292 100.00% 11
செல்லாத வாக்குகள் 558
அளிக்கப்பட்ட மொத்த வாக்குகள் 12,850
பதிவு செய்யப்பட்ட வாக்காளர்கள் 24,626
வாக்குவீதம் 52.18%

2025 மாநகரசபைத் தேர்தல்

தொகு

2025 மே 6 இல் நடைபெற்ற உள்ளூராட்சித் தேர்தல் முடிவுகள்:[5] 12 உறுப்பினர்கள் வட்டாரங்களில் இருந்து நேரடியாகவும், 9 உறுப்பினர்கள் விகிதாசாரப் பிரதிநிதித்துவத் தேர்தல் முறையிலும் மொத்தம் 21 உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

கூட்டணிகளும்
கட்சிகளும்
வாக்குகள் % பெற்ற
வாக்குகளுக்குரிய
உறுப்பினர்கள்
வட்டாரங்களில்
இருந்து
தேர்ந்தெடுக்கப்பட்ட
உறுப்பினர்கள்
உரித்தான முழு
உறுப்பினர்களின்
எண்ணிக்கை
  தேசிய மக்கள் சக்தி 2,344 18.73% 4 0 4
  சனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணி 2,350 18.78% 3 1 4
இலங்கைத் தொழிற் கட்சி 2,293 18.333% 4 0 4
  இலங்கைத் தமிழரசுக் கட்சி 2,185 17.46% 0 3 3
  ஐக்கிய மக்கள் சக்தி 1,088 8.70% 0 2 2
  அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் 647 5.17% 0 1 1
  சனநாயகத் தேசியக் கூட்டணி 630 5.04% 0 1 1
  சுயேச்சைக் குழு 1 332 2.65% 0 1 1
  சுயேச்சைக் குழு 2 326 2.61% 1 0 1
  ஐக்கிய தேசியக் கட்சி 204 1.63% 0 0 0
சர்வசன அதிகாரம் 113 0.90% 0 0 0
செல்லுபடியான வாக்குகள் 12,512 100.00% 12 9 21
செல்லாத வாக்குகள் 188
அளிக்கப்பட்ட மொத்த வாக்குகள் 12,700
பதிவு செய்யப்பட்ட வாக்காளர்கள் 20,609
வாக்குவீதம் 61.62%

2025 தேர்தலில் வவுனியா மாநகரசபையின் முதல்வராக சுந்தரலிங்கம் காண்டீபன் (சனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணி), துணை முதல்வராக பரமேசுவரன் கார்த்தீபன் (சனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணி) ஆகியோர் தெரிவு செய்யப்பட்டனர்.[6]

மேற்கோள்கள்

தொகு
  1. "LG polls cost to hit Rs. 4 b". Daily FT. 5-12-2017. http://www.ft.lk/front-page/LG-polls-cost-to-hit-Rs--4-b/44-644557. பார்த்த நாள்: 23-12-2017. 
  2. "Amended Local Government Elections Bill approved in Parliament". டெய்லி நியூசு. 25-08-2017. 
  3. Sarveswaran, K. (2005). The Tamil United Liberation Front: Rise and Decline of a Moderate Ethnic Party in Sri Lanka (1976-2000). Jawaharlal Nehru University.
  4. "Local Authorities Election 2009 Final Results Vavuniya Urban Council". Department of Elections, Sri Lanka. Archived from the original on 2009-12-10. Retrieved 2017-03-18.
  5. "Local Authorities Election - 6.05.2025 Mannar District Mannar Urban Council" (PDF). Department of Elections, Sri Lanka. Archived (PDF) from the original on 31 May 2025. Retrieved 31 May 2025.
  6. "வவுனியா மாநகர சபை முதல்வராக சுந்தரலிங்கம் காண்டீபன் தெரிவு". News1st. Archived from the original on 8 சூலை 2025. Retrieved 8 சூலை 2025.

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=வவுனியா_மாநகர_சபை&oldid=4306097" இலிருந்து மீள்விக்கப்பட்டது