மன்மத ஆண்டு

தமிழ் ஆண்டுகள் 60 இல் 29 ஆம் ஆண்டு

மன்மத ஆண்டு என்பது தமிழ்ப் புத்தாண்டில் பிரபவ ஆண்டு துவங்கி அறுபது ஆண்டுகள் என ஆண்டு வட்ட முறையில் வரக்கூடிய ஆண்டுகளில் இருபத்தொன்பதாம் ஆண்டாகும். இந்த ஆண்டை செந்தமிழில் காதன்மை என்றும் குறிப்பர்

மன்மத ஆண்டு வெண்பா தொகு

மன்மத ஆண்டு எப்படிப்பட்டது என்பது குறித்து இடைக்காட்டுச் சித்தர் இயற்றியதாக கூறப்படும் வெண்பா

 
மன்மதத்தின் மாரியுண்டு வாழுமுயிரெல்லாமே
நன்மைமிகும் பல்பொருளுநண்ணுமே- மன்னவரால்
சீனத்திற் சண்டையுண்டு தென்திசையில் காற்றுமிகு
கானப்பொருள் குறையுங் காண்.[1]

இந்த வெண்பாவின்படி மன்மத ஆண்டில் நல்ல மழைப் பொழிவு இருக்கும், இதனால் மரம், செடி, கொடி, பறவை, விலங்குகள் போன்றவை பெருகும். மக்கள் மகிழ்ச்சியுடன் வாழ்வார்கள். நல்லது நடக்கும். பலவகை தானியங்களும் நன்கு விளையும். நாடாளுபவர்கள் போர் குணம் கொண்டிருப்பார்கள். உலகின் ஒரு பகுதியில் சண்டை மூளும். தெற்கு திசையில் இருந்து புயல் உருவாகி சூறாவளிக் காற்று வீசும். அரிதான மூலிகைச் செடிகள் அழியும்.[2]

மேற்கோள்கள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=மன்மத_ஆண்டு&oldid=3578005" இருந்து மீள்விக்கப்பட்டது