மயில் அடல்

மீன் இனம்

{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/வார்ப்புரு:Taxonomy/Bothus|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}} |machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}} |machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}

மயில் அடல் அல்லது பூ அடல் (Plate fish) என்பது போத்தஸ் பேரினத்தைச் சேர்ந்த ஒரு தட்டை மீன் ஆகும். இவை அத்திலாந்திக்குப் பெருங்கடல் உட்பட கரிபியக் கடல் உள்ளிட்ட வெப்பமண்டல கடல் பகுதிகளில் காணப்படுகின்றன. இதன் வழக்கமான வாழிடமாக பவளப் பாறைகளுக்கு அருகில் உள்ள மணல் வெளிகளாகும். மேலும் இந்த சூழலில் இவை நன்கு உருமறைப்பு செய்து தங்கள் நிறத்தை மாற்றிக் கொள்ளக் கூடியவையாக உள்ளன. [2]

மயில் அடல்
உயிரியல் வகைப்பாடு e
Unrecognized taxon (fix): Bothus
இனம்:
இருசொற் பெயரீடு
Bothus lunatus
(லின்னேயஸ், 1758)
வேறு பெயர்கள்
  • Platophrys lunatus (Linnaeus, 1758)
  • Pleuronectes argus Bloch, 1783
  • Pleuronectes lunatus Linnaeus, 1758
  • Rhomboidichthys lunatus (Linnaeus, 1758)

விளக்கம்

தொகு
 
உடலை மறைத்துக் கொண்டு கண்களை மட்டும் கொண்டு பார்த்தல்

மயில் அடல் மீனானது தட்டையான உடலமைப்பைக் கொண்டுள்ளது. இதன் வலது பக்கம் கீழே தரையில் இருக்குமாறும், இடது பக்கம் மேல்நோக்கி இருக்கும் வகையிலும் கடல் தரையில் உருமறைப்பு செய்து கொண்டு படுத்திருக்கும். இந்த மீனுக்கு இரண்டு கண்களும் ஒரே பக்கத்தில் இருக்கும். கண்கள் சற்று இடை வெளியுடன் இருக்கும். அவை குமிழ் போல புடைத்து இருக்கும். இதனால் தரையில் படுத்தபடி தன் இரு கண்களிலும் இரையை எதிர் பார்த்தபடி படுத்து இருக்கும். இதன் உடல் வடிவம் வட்டமானது. மேலும் இதன் முதுகு மற்றும் குத துடுப்புகள் கிட்டத்தட்ட உடலைச் சுற்றியுள்ளன. முதுகுத் துடுப்பு 92 முதல் 99 மென்மையான கதிர்களையும், குதத் துடுப்பு 71 முதல் 76 மென்மையான கதிர்களைக் கொண்டிருக்கும். இதன் மார்புத் துடுப்புகள் நீண்டவை மற்றும் பெரும்பாலும் நிமிர்ந்தவை. வயது வந்த மயில் அடல் மீனின் சராசரி நீளம் 35 cm (14 அங்), இது அதிகபட்சமாக 46 cm (18 அங்) நீளமுள்ளது. இந்த மீனின் உடல் சாம்பல், பழுப்பு மற்றும் பழுப்பு கலந்த நிறத்தில் சிறிய நீல நிற புள்ளிகள் வட்டங்களுடன் காணப்படும். இதன் தலையும், துடுப்புகளும் நீல நிறத்தில் காணப்படும். இதன் உடலில் உள்ள பக்கவாட்டு கோட்டில் இரண்டு அல்லது மூன்று பரவலான இருண்ட திட்டுகள் உள்ளன. மீன் அதன் உடல் நிறத்தை அதன் சுற்றுப்புறத்தை ஒத்திருக்கும்படி பச்சோந்தியைப் போல மாற்றிக்கொள்ளும் திறண் கொண்டது. இதனால் இந்த மீன் கடற்பரப்பில் படுத்திருக்கும்போது தன்னை உருமறைத்துக் கொள்ளும். [3] [4] இந்த இன மீன்களால் அவற்றின் நிறத்தை இரண்டு முதல் எட்டு வினாடிகளில் சுற்றுப்புறத்துக்கு ஏற்ப மாற்றிக் கொள்ள முடியும். [5]

பரவலும், வாழ்விடமும்

தொகு

மயில் அடல் அட்லாண்டிக் பெருங்கடல் மற்றும் கரீபியன் கடலின் வெப்பமண்டல மற்றும் மிதவெப்ப மண்டல பகுதிகளில் காணப்படுகிறது. இவை புளோரிடா, பஹாமாஸ் மற்றும் பெர்முடா முதல் பிரேசில் வரை பரவியுள்ளன. என்றாலும் இவை மெக்சிகோ வளைகுடாவில் இல்லை. இவை கினி வளைகுடா மற்றும் அசென்ஷன் தீவுப் பகுதிகளிலும் காணப்படுகின்றன. இவை பொதுவாக 1 முதல் 20 மீ (3.3 மற்றும் 65.6 அடி) ஆழத்தில் காணப்படுகிறன்றன. ஆனால் 100 மீ (328 அடி) ஆழத்திலும் காணப்படலாம். இதன் பொதுவான வாழிடமாக பவளப் பாறைகளுக்கு அருகிலுள்ள மணல் நிறைந்த பகுதிகள், கடல் புல்வெளிகள் அல்லது சதுப்புநிலங்களுக்கு அருகில் உள்ள இடங்கள் ஆகும். இது பவளப் பாறைகளுக்கு அருகில் பொதுவாக காணப்படும் மீனாகும். [4]

நடத்தை

தொகு

மயில் அடல் கடலிலின் மணற்கடற்பரப்பில் படுத்துக்கொண்டு நன்கு உருமறைப்பு செய்து கொள்கிறது. பெரும்பாலும் வண்டலில் ஓரளவு தன்னை புதைத்துக் கொள்ளும். இது நீந்தும்போதுதான் அதிகமாகத் தெரியும். [5]

இது சிறுமீன்கள் கணவாய்கள் போன்றவற்றை உணவாக கொள்கிறது. தன் உணவை வேட்டையாட கடலடி தரையில் உருமறைப்பு செய்தபடி படுத்திருக்கும். தன் இரை அருகில் வந்ததும் விருட்டென்று பாய்ந்து இரையை பிடித்துக் கொள்ளும். [6]

குறிப்புகள்

தொகு
  1. Munroe, T. (2015). "Bothus lunatus". IUCN Red List of Threatened Species 2015: e.T190102A16510777. doi:10.2305/IUCN.UK.2015-4.RLTS.T190102A16510777.en. https://www.iucnredlist.org/species/190102/16510777. பார்த்த நாள்: 18 March 2018. .
  2. Pauly, Daniel; Froese, Rainer. "Common names of Bothus manthus". FishBase. பார்க்கப்பட்ட நாள் 2014-05-08.
  3. De Kluijver, M.; Gijswijt, G.; de Leon, R.; da Cunda, I. "Peacock flounder (Bothus lunatus)". Interactive Guide to Caribbean Diving. Marine Species Identification Portal. Archived from the original on 2014-05-21. பார்க்கப்பட்ட நாள் 2014-05-02.
  4. 4.0 4.1 Pauly, Daniel; Froese, Rainer. "Bothus lunatus: Plate fish". FishBase. பார்க்கப்பட்ட நாள் 2014-05-02.
  5. 5.0 5.1 Hanlon, Roger T.; Watson, Anya C.; Barbosa, Alexandra (2010). "A "Mimic Octopus" in the Atlantic: Flatfish Mimicry and Camouflage by Macrotritopus defilippi". Biological Bulletin 218 (1): 15–24. http://www.biolbull.org/content/218/1/15.full. 
  6. Randall, John, E. (2004). Food Habits of Reef Fishes of the West Indies (PDF). Hawaii Institute of Marine Biology; Bernice P. Bishop Museum. Archived from the original (PDF) on 2014-05-12. பார்க்கப்பட்ட நாள் 2014-05-21.{{cite book}}: CS1 maint: multiple names: authors list (link)

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=மயில்_அடல்&oldid=3629393" இலிருந்து மீள்விக்கப்பட்டது