மயோர்க்கா (Majorca அல்லது Mallorca, எசுப்பானியம்: Mallorca [maˈʎorka])[2] நடுநிலக் கடலில் அமைந்துள்ளதோர் தீவாகும். இது எசுப்பானியாவின் பலேரிக் தீவுக்கூட்டத்தின் மிகப் பெரிய தீவாக உள்ளது.

மயோர்க்கா
மயோர்க்காவின் கொடி
Lua error in Module:Location_map at line 525: Unable to find the specified location map definition: "Module:Location map/data/Spain Balearic Islands" does not exist.
புவியியல்
அமைவிடம்நடுநிலக் கடல்
ஆள்கூறுகள்
தீவுக்கூட்டம்பலேரிக் தீவுகள்
மொத்தத் தீவுகள்5
முக்கிய தீவுகள்பலேயரிக் தீவுகள்
பரப்பளவு3,640.11 km2 (1,405.45 sq mi)
உயர்ந்த ஏற்றம்1,436 m (4,711 ft)
உயர்ந்த புள்ளிபூயூக் மலை
நிர்வாகம்
எசுப்பானியா
மக்கள்
Demonymமஜோர்கன்
மக்கள்தொகை920,605[1]
அடர்த்தி252.91 /km2 (655.03 /sq mi)

இத்தீவின் தலைநகரமான பால்மா, தன்னாட்சியுடைய பலேரிக் சமுதாயத்திற்கும் தலைநகராக விளங்குகிறது. தவிரவும் காபரெரா தீவுக்கூட்டங்களும் மயார்க்காவுடன் நிர்வாகத்திற்காக சேர்க்கப்பட்டுள்ளன. மயோர்க்காவின் நாட்டுப்பண்ணாக லா பாலங்குரா விளங்குகிறது.

மினோர்க்கா, இபிசா, போர்மென்டெரா போன்ற மற்ற பலேரிக் தீவுகளைப் போலவே இத்தீவும் விடுமுறை மனமகிழ் தலமாக விளங்குகிறது; ஜெர்மனி, அயர்லாந்து, போலந்து, நெதர்லாந்து, எசுக்காண்டினாவிய நாடுகள் மற்றும் ஐக்கிய இராச்சியத்திலிருந்து சுற்றுலாப் பயணிகள் வருகின்றனர். இத்தீவின் பெயர் இலத்தீன் மொழியின் இன்சுலா மேஜர், "பெரியத் தீவு" என்பதிலிருந்து பெறப்பட்டுள்ளது; பின்னர் மயோரிக்கா, "பெரியதான ஒன்று" எதிர் மற்ற சிறிய தீவான மினோர்க்கா, "சிறியதான ஒன்று".

காட்சிக்கூடம்

தொகு

மேற்சான்றுகள்

தொகு
  1. Instituto Nacional de Estadística, Madrid, 2021.
  2. Keenan, Steve (சூலை 6, 2009). "Mallorca v Majorca which is correct". The Times (London). http://www.timesonline.co.uk/tol/travel/your_say/article6651149.ece. 

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=மயோர்க்கா&oldid=3817235" இலிருந்து மீள்விக்கப்பட்டது